என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.
    • இதன் 2வது சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    இந்தியன் வெல்ஸ் ஓபன் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் 2வது போட்டி இன்று நடந்தது.

    இதில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, பிரிட்டனின் ஹென்றி பேட்டன்-பின்லாந்தின் ஹாரி ஹீலியோவரா ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய யூகி பாம்ப்ரி ஜோடி, 2வது செட்டை 7-5 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை யூகி பாம்ப்ரி 10-5 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள்?
    • மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?

    தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பை கண்டித்து திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கண்டன பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், " தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் வளைந்த முதுகோடு அடகு வைத்த ஆட்சி தமிழகத்தில் நடந்தது.

    திமுக ஆட்சியின் எண்ணற்ற திட்டங்களால் தமிழ்நாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் திரு.மு.க.ஸ்டாலின் ? கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.

    கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்தது முதல் ,

    இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் அறிவாலயத்திற்கு, அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?

    மீத்தேன்- ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து போட்டு டெல்டா விவசாயிகளின் உரிமையை அடகு வைத்தவர் தானே நீங்கள்?

    நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே? அதே கூட்டணியே சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் வரை சென்று நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவ கனவை அடகு வைத்த பாவிகள்தானே நீங்கள் ?

    அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து, பல்வேறு சதிச்செயல்களால் மதுரை மாவட்ட மக்களின் வாழ்வியலையே அடகு வைக்க முயற்சித்தவர்கள் தானே நீங்கள்?

    3வது மாடியில் சிபிஐ ரெய்டு நடக்க, முதல் மாடியில் முன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்த கொத்தடிமைகள் தானே நீங்கள்?

    ஆனால் , பாஜக-வுடன் கூட்டணியில் இருந்த போதும், 7.5% இடஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், காவிரி மேலாண்மை ஆணையம், என்ற அறிவிப்பு என தமிழ்நாட்டின் எந்த அடிப்படை உரிமையும் பறிபோகக் கூடாது என்ற அடிப்படையில் மக்களுக்காண ஆட்சி செய்து, தமிழ்நாட்டை காத்திட்ட இயக்கம் தான் அஇஅதிமுக.

    மத்திய அரசின் அனைத்து ஆய்வறிக்கைகளிலும் அன்று தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஒரே காரணம், 10 ஆண்டு காலம் அதிமுக நடத்திய மக்களுக்கான ஆட்சி; உலக நாடுகளுக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தது எங்கள் "தமிழ்நாடு மாடல்" ஆட்சி!

    ஆனால், ஒன்றிற்கும் உதவாத,

    உருப்படாத ஒரு வெற்று மாடல்

    அரசை நடத்தி கொண்டு,

    தனக்குத் தானே கையைத் தட்டிக்கொண்டு,

    பொம்மை ஆட்சி நடத்தும் நீங்கள்,

    மக்களை பொறுத்த வரை வெறும் விளம்பர மாடல் தான் !

    அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்?

    எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன்-

    உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா?

    அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா?

    எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்!

    பாத்துக்கலாம் !

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எனது கூட்டத்திற்கே தமிழக அமைச்சர்கள் வரவில்லை என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் குற்றச்சாட்டு
    • இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது.

    மக்களவையில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், "நானே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன். ஒரு முறை வேளாண் துறை பணிக்காகவும், ஒரு முறை ஊரக வளர்ச்சிக்காகவும் வந்தேன். இப்போது நான் எந்த குற்றச்சாட்டுகளையும் கூறவில்லை, ஆனால், இரண்டு முறையும் ஊரக வளர்ச்சி அமைச்சரோ அல்லது வேளாண் அமைச்சரோ எனது கூட்டத்திற்கு வரவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

    அவரது பதிவில், "தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது

    MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் ஒன்றிய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும்,எங்கள் மாநில நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்

    கனிமொழி அவர்களும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள்.

    அவர் தமிழ்நாடு வந்தபோது,குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார்.

    இது தவிர, காணொலி வாயிலான ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன்.

    இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல

    இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • கே.எல். ராகுல் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.
    • ஐபிஎல் போட்டி தொடங்கும்போது குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    தற்போது அவரது மனைவி அதியா ஷெட்டி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். விரைவில் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளது. வெற்றி சந்தோகத்தில் கர்ப்பிணியாக இருக்கும் மனைவியுடன் எடுத்துக் கொண்ட படத்தை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. Oh, Baby! எனப் பதிவிட்டுள்ளார்.

    குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், கேப்டன் பதவியை நிராகரித்து ஒரு வீரராக விளையாட இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    • 2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை.
    • இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்.

    தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் பாஜக சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தின் கல்வித் தரத்தை குறைக்கும் செயலில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. கல்வியை தவிர எந்த ஆயுதமும் தங்கள் கையில் இல்லை, கல்வியால் மட்டுமே வறுமையை ஒழிக்க முடியும்.

    2023ம் ஆண்டு 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் எழுதவில்லை. இந்தியாவில் நவோதயா பள்ளி இல்லாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். நவோதயா பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு மத்திய அரசு ஒரு வருடத்திற்கு ரூ.86,000 செலவு செய்கிறது.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 96, குஜராத் மாநிலத்தில் 34 நவோதயா பள்ளிகள் உள்ளது. தமிழ்நாட்டின் கடன் ரூ.9.5 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி மதுபானம் மூலம் வருமானம் வருகிறது.

    மது விற்பனை இல்லாத குஜராத் மாநிலத்தில் பற்றாக்குறை இல்லாத பட்ஜெட் போடுகின்றனர். தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்ப்பவர் பிரதமர் மோடி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு.

    வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதான மெஹ்முதுல்லா கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இருந்தும், 2021-ல் டெஸ்ட் கிரிக்கெடடில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்காக விளையாடினார். இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் முடிவுக்கு வந்துள்ளது.

    மெஹ்முதுல்லா 50 டெஸ்ட், 239 ஒருநாள் மற்றும் 141 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டியில் 5 சதங்களுடன் 2914 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 4 சதங்களுடன் 5689 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 2444 ரன்களும் அடித்துள்ளார்.

    அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 43, ஒருநாள் கிரிக்கெட்டில் 82, டி20 கிரிக்கெட்டில் 41 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

    • சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது.
    • இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.

    இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்து பிப்ரவரியில் 3.61%-ஆக குறைந்துள்ளது என மத்திய அரசின் புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.

    சில்லறை பணவீக்கம் என்பது நுகர்வோர் வாங்கும் சில்லறைப் பொருட்களின் விலைகள் காலப்போக்கில் உயரும் விகிதம் ஆகும்.

    நுகர்வோர் விலைக் குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் சில்லறை பணவீக்க விகிதமானது ஜனவரி மாதம் 4.31 சதவீதமாக இருந்தது. இது பிப்ரவரி மாதத்தில் 3.61%-ஆக குறைந்துள்ளது.

    கடந்தாண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு சில்லறை பணவீக்கம் 4%-க்கும் கீழ் சரிந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.

    இதேபோல், உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த மாதம் உணவு பொருட்களின் சில்லரை பணவீக்கம் 5.97 சதவீதமாக இருந்தது.

    கிராமப்புறங்களில் 4.06 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 3.20 சதவீதமாகவும் சில்லரை பணவீக்கம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொழில்துறை வளர்ச்சி கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் 3.2சதவீதமாக இருந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் அது 5 சதவீதமாக உயர்ந்தள்ளது என தேசிய புள்ளியியல் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

    • பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
    • படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.

    அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.

    மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    • விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் .
    • இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

    `நான்' படத்தின் மூலம் விஜய் ஆண்டனி கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரது நடிப்பில் உருவான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் மக்களிடையே எதிர்பார்ப்பு வரவேற்பை பெறவில்லை.

    இதனிடையே விஜய் ஆண்டனியின் 22ஆவது படமான 'ககன மார்கன்' விரைவில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில் விஜய் ஆண்டனியின் 25வது படத்தை அருண் பிரபு இயக்குகிறார் . இப்படத்திற்கு சக்தித் திருமகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அருண் பிரபு இயக்கத்தில் இதற்கு முன் அருவி மற்றும் வாழ் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    இப்படத்தின் கதாநாயகியாக த்ரிப்தி நடித்திருக்கிறார். இவர் ஒரு விளம்பர பட நடிகை மற்றும் இவர் இதற்கு முன் அமேசான் மினி வெப் தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சக்தித் திருமகன் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. அரசியல் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக்கொண்டுள்ளது.
    • உக்ரைன் மீதான ராணுவ உதவிக்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 4 வருடங்கள் முடிவடைந்த நிலையிலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மூலம் கட்டமைப்புகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. கடந்த ஒரு வாரத்திற்குள் உக்ரைன் மீது ரஷியாவும், ரஷியா மீது உக்ரைனும் பயங்கர டிரோன் தாக்குதல் நடத்தின.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது டொனால்டு டிரம்ப் உடனான பேச்சுவார்த்தையின்போது மோதிக் கொண்டதால், அமெரிக்க உக்ரைனுக்கு வழங்கிய ராணுவ உதவிகளை நிறுத்தியது. அத்துடன உளவுத்துறை தகவல் பகிர்வதையும் நிறுத்தியது.

    இந்த நிலையில்தான் உக்ரைன் உடன் அமெரிக்கா 30 நாள் போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் 30 நாள் போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ரஷியா இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை.

    இதற்கிடையே உக்ரைன் மீதான ராணுவ உதவிகள் மற்றும் உளவுத்துறை தகவல் பகிர்வு ஆகியவற்றிற்கான தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

    இந்த நிலையில் புதின்- டிரம்ப் இடையிலான பேச்சுவார்தை நடைபெற விரைவாக ஏற்பாடு செய்யப்படும் என ரஷியா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20-ந்தேதி பதவி ஏற்றார். அதன்பின் பிப்ரவரி 12-ந்தேதி புதின் உடன் டெலிபோனில் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் இரு தலைவர்களும் பேசிக்கொள்ளவில்லை.

    • ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
    • பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.

    சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.

    பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

    லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார்.

    தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்றார்.

    இன்று பிரதமர் மோடி மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.

    கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.

    ×