என் மலர்
நீங்கள் தேடியது "லிப்ட் அறுந்து விபத்து"
- ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
- பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் விபத்து.
சென்னை தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் லிப்ட் பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஓட்டலில் உள்ள லிப்ட் பழுதாகியுள்ளது.
பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான லிப்ட் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
லிப்டை சரி செய்ய முயன்றபோது, லிப்ட் அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தானேவில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள பால்கம் பகுதியில் சமீபத்தில் 40 மாடி கட்டிடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இந்தக் கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று பணிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், பணிகளை முடித்துவிட்டு தொழிலாளர்கள் கீழே இறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென லிப்ட் அறுந்து விழுந்தது. இதில் 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






