என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.
    • இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் சமீப காலமாக நடிகராகவும் வளம் வருகிறார்.

    இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது.

    அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஜி.வி இசையமைத்துள்ளார். இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது.

    இதனிடையே பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டி. இமான் இசையமைத்துள்ளார். சான் லோகேஷ் படத் தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் முடிந்த நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பான அறிவிப்பை படக்குழு போஸ்டர் வெளியிட்டு நேற்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
    • அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.

    இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.

    இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

     

    நிர்மல் யாதவ்

    அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.

    இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியிருந்தது.
    • 2008-க்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

    ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும். ஆனால், பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கமாட்டார்கள்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமநிலையற்ற ஒரு அணியாகத்தான் திகழும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியை பார்க்கும்போது சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி உள்ளனர். அதன்பின் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் ஹெசில்வுட், புவி, யாஷ் தயால் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சீசன்களை விட தற்பேதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    கடந்த சீசன்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்சிபி அணிக்கு பேலன்ஸ் தேவை எனப் பேசியிருந்தேன். இது பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டர்களை பற்றியது கிடையாது. ஐபிஎல் அணிகள் மற்றும் ஆப்சன்களில் சமநிலையை கொண்டுள்ளது பற்றியது.

    நான் புவியை பார்த்தேன். அவர் விளையாட போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுபோன்ற அட்டகாசமான மாற்று வீரர்களைத்தான் அணி விரும்பும். முதல் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது போட்டியில் வேறொரு வீரருக்காக களம் இறக்கப்பட்டார். இதுபோன்ற பேலன்ஸ், பந்து வீச்சில் பலம் அணிக்கு தேவையானது. ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே சிறந்தது.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    • நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.
    • திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1170 இடங்களில் இன்று திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் தர மறுக்கிறது.

    முதலமைச்சர் என்ன சொல்லி இருக்கிறார் ? மகாத்மா காந்தி என்கிற பெயர் இருப்பதனாலேயே பணம் தர மறுக்கிறார்கள். மகாத்மா காந்தியின் பெயரை குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தியை சுட்டதே இவர்கள்தான்.

    நாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்து அளவான குடும்பம் என்று 1970களில் இருந்து நல்ல திராவிட நாகரிக பண்பாட்டை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்படுத்தி உள்ளோம்.

    மக்கள் தொகை குறைந்து இருந்தாலும், கல்வி அறிவில் முதல் இடத்தில் இருக்கிறோம். வேலை வாயப்பு, உற்பத்தி, ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவைகளில் நம்பர் ஒன். சாலை வசதி என அனைத்திலும் முன்னிலையில் இருக்கிறோம். இதுதுான் திராவிட மாடல்.

    ஆனால் வட மாநிலங்களில் 16, 17 பிள்ளைகளை பெற்றுவிட்டு வளர்த்து ஆளாக்க முடியாமல் இங்கு வந்துவிடுகிறார்கள்.

    ஆரம்பத்தில் பானிப்பூரி, சுண்டல் என விற்றுவந்தவர்கள் தற்போது பயிர் நடவு செய்ய வந்துவிட்டார்கள். ஆனால், பிரதமர் மோடி நம்மை பார்த்து இந்தி படியுங்கள், படித்தால் தான் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார்.
    • இரண்டு அணிகளும் முதல் வெற்றிக்காக போராட இருக்கிறது.

    ஐபிஎல் 2025 சீசனின் 9-ஆவது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    சிஎஸ்கே அணிக்கெதிராக விளையாடாத நிலையில், இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இணைந்துள்ளார்.

    குஜராத் அணி விவரம்:-

    சுப்மன் கில் (கேப்டன்), ஜாஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக்கான், ரூதர்போர்டு, ராகுல் டெவாட்டியா, சாய் கிஷோர், ரஷித் கான், காகிசோ ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    ரோகித் சர்மா, ரியான் ரிக்கல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், முஜீப் உர் ரஹ்மான், மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், டிரெண்ட் போல்ட், சத்யநாராயண ராஜூ.

    • வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.
    • சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்

    சென்னை பெரம்பூரில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் நடைபெறும் ரமலான் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    இஸ்லாமிய மக்களுக்கு ரமலான் பெருவிழா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இஸ்லாமியர்களையும் திமுகவையும் யாரும் பிரிக்க முடியாது.

    வக்ஃபு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக அதைத் திரும்பப் பெற வேண்டும்.

    வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற கூட சட்டப்பேரவைக்கு எடப்பாடி பழனிசாமி வரவில்லை. தீர்மனாத்திற்கு ஆதரவு கொடுக்க வராமல் டெல்லிக்கு சென்றுவிட்டார்.

    இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்துங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கூறினேன். இருமொழிக் கொள்கை குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். மக்கள் சார்பில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

    சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பு வந்தாலும் முதலில் குரல் கொடுப்பது திமுக தான்.

    இஃப்தார் விழாக்களை பலரும் நடத்துவார்கள். ஆனால், இஸ்லாமியர்களுக்கு ஒரு தீமை என்றால் வாயே திறக்கமாட்டார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.
    • விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    கேரளாவில் சிக்கலான அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் தீயணைப்புத் துறையினரின் உதவியை நாடிய சம்பவம் நடந்துள்ளது.

    கடந்த மார்ச் 25 ஆம் தேதி கேரளாவின் காஞ்சங்காடு உள்ள ஒரு மருத்துவமனையின் மருத்துவர்கள், 46 வயதுடைய ஒருவரின் பிறப்புறுப்புகளில் சிக்கிய இரும்பு வாஷரை (iron washer) அகற்ற போராடியுள்ளனர். ஆனால் அவரின் நிலை மோசமடைந்தால் மருத்துவர்கள் இரவு 10 மணியளவில் தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைத்துள்ளனர்.

    தீயணைப்பு வீரர்கள் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்த பிறகு, ரிங் கட்டரைப் பயன்படுத்தி வாஷரை பாதிப்பு இல்லாமல் வெற்றிகரமாக அகற்றினர்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சங்காடு தீயணைப்புத்துறை அதிகாரி பி.வி. பவித்ரன்,

    "இது ஒரு சவாலான, இரண்டு மணி நேர அறுவை சிகிச்சையாக இருந்தது. விரல்களில் சிக்கியிருக்கும் மோதிரங்களை அகற்ற பயன்படுத்தப்படும் கருவியான ரிங் கட்டரைப் பயன்படுத்தி, வாஷரை கவனமாக வெட்டினோம்.

    இது மிகவும் பயமுறுத்தும் காட்சியாக இருந்தது. இரும்புத் வாஷர் அந்தரங்கப் பகுதியைச் சுற்றி இறுக்கமாகப் பொருந்தியிருந்தது, இதனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை" என்றார்.

    கடந்த மூன்று வாரமாக பிறப்புறுப்பில் சிக்கிய இரும்பு வாசருடன் அந்த நபர் சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும் அப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு அதிக வலி இருந்துள்ளது.

    வாசர் எப்படி பிறப்புறுப்பில் சிக்கியது என்பது குறித்து கேட்டபோது, தான் குடிபோதையில் இருந்தபோது யாரோ ஒருவர் அதை தன் மீது மாட்டியாக தெரிவித்துள்ளார். தற்போது வாசர் நீக்கப்பட்ட பின்னர் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சன்ரைசர்ஸ் ஐதராபாத் வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது.
    • ஒரு போட்டியிலாவது 300 ரன்னைத் தொடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன.

    ஐபிஎல் 2025 சீசனில் நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரன் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதல் போட்டியில் 280 ரன்களுக்கு மேல் குவித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோவிற்கு எதிராக 200 ரன்களை தொடமுடியவில்லை. லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் அபாரமாக பந்து வீசி அபிஷேக் சர்மா, இஷான் கிஷனை ஒரே ஓவரில் வீழ்த்தினார். மொத்தம் 4 விக்கெட் சாய்த்தார்.

    இந்த நிலையில் நாளைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்ள தயார். அவர்களுக்கு எதிராக சிறப்பு திட்டம் வைத்துள்ளோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் இளம் வீரர் விப்ராஜ் நிகம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக விப்ராஜ் நிகம் கூறுகையில் "சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறந்த அணி என்பது உண்மைதான். சிறந்த பேட்டிங் ஆர்டர் வைத்துள்ளனர். பந்து வீச்சு கண்ணோட்டத்தில் எங்களுடைய அணி ஆலோசனைகள், பயிற்சிகள் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் போட்டியின்போது வெளிப்படுத்த முயற்சி செய்வோம்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆகவே, நாளைய போட்டிக்கு அதுபோன்ற சில சிறந்த திட்டங்களை உருவாக்கியுள்ளோம். வரும் போட்டிகளில் அந்த திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன போட்டியிலேயே விப்ராஜ் நிகம் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். மார்கிராம் விக்கெட்டை வீழ்த்தினார். அத்துடன் 15 பந்தில் 39 ரன்கள் விளாசி 210 இலக்கை எட்டி லக்னோவிற்கு எதிராக வெற்றி பெற காரணமாக இருந்தார். அஷுடோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் விளாசி அணியை வெற்றி பெற வைத்தார். ஒரு கட்டத்தில் டெல்லி அணி 7 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. விப்ராஜ் நிகம்- அஷுடோஷ் சர்மா ஜோடி 7ஆவது விக்கெட்டுக்கு 55 ரன்கள் குவித்தது.

    • எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்
    • நாங்கள் உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? என்று ரஹீஸின் தாய் கூறினார்.

    மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பறந்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில், தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்துபவர் சுமன். இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோடீஸில், பிரின்ஸ் சுமன், அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆக ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இந்த நோடீஸில், 2022 ஆம் ஆண்டு டெல்லியில் சுமனின் பெயரில் "பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய சுமன், "நான் வண்டியில் மட்டுமே முட்டைகளை விற்கிறேன். நான் டெல்லிக்கே இதுவரை சென்றதில்லை. பின் அங்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எப்படி சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.

    சிறிய மளிகைக் கடை நடத்தி வரும் சுமனுடைய தந்தை ஸ்ரீதர் சுமன் பேசுகையில், "எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்றார்.

    சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு தெரிந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க காவல்துறை மற்றும் வருமான வரி அதிகாரிகளை அணுகியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

    இதற்கு மத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கு ரூ.7.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

     இதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனுப்பப்பட்ட நேட்டீஸில், 2020-21 ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய அவர், "இந்த நோட்டீஸ் எதற்க்கு என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அரசாங்கம் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஏழை. நான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?" என்று ரஹீஸின் தாய் கூறினார்.

    2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்க ரஹீஸின் தனிப்பட்ட ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

    • நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
    • திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது

    நடிகர் அஜித் குமார் மற்றும் இக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்பொழுது படத்தின் செக்ண்ட் சிங்கிளின் ப்ரோமா வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்பாடலிற்கு God Bless U என தலைப்பு வைத்துள்ளனர்.பாடலின் வரிகளை ரோகேஷ் எழுதியுள்ளார். பாடலின் ராப் பகுதியை பால் டப்பா பாடியுள்ளார். பாடல் நாளை வெளியாக இருக்கிறது.

    இப்பாடலை குறித்து ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். ஏற்கனவே அனிருத் குரலில் வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்ற ஆலுமா டோலுமா பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதேப்போல் இப்பாலௌம் மிகவும் வைபாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.
    • இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்

    நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    நடிகை அபிநயா விரைவில் அவரது நீண்ட நாள் காதலனை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் தற்பொழுது அவரது காதலுடன் நிச்சயம் செயத போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பெயர் வெகெசனா கார்த்திக். இவர் ஐதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

    நடிகை அபிநயா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

    • சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    கர்நாடகாவின் பெலகாவியில் நடைபாதையில் கடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் வியாபாரியின் மூக்கை சக வியாபாரி நறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெலகாவி நகரின் காடே பஜாரின் காஞ்சர் கல்லி என்கிற பகுதியில் தனது கடையை அமைக்க 42 வயதான சுஃபியான் பதான் விரும்பினார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது, மற்றொரு வியாபாரியான அயன் தேசாயுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    இது வாக்குவாதமாக தொடங்கி பின்னர் இருவருக்கிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

    சண்டையின்போது, அயன் தேசாய் திடீரென கத்தியை எடுத்து சுஃபியானின் மூக்கை நறுக்கினார். இதில், சுஃபியான் பலத்த காயமடைந்தார். மேலும், இந்த கைகலப்பின்போது சமீர் பதான் என்ற நபரும் காயமடைந்துள்ளார்.

    இந்நிலையில், சுஃபியான் தற்போது பெலகாவியின் பிஐஎம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தேசாய்யை தேடி வருகின்றனர்.

    ×