என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    கடந்த சீசன்களை விட தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி 10 மடங்கு சிறந்தது: ஏபி டி வில்லியர்ஸ்
    X

    கடந்த சீசன்களை விட தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி 10 மடங்கு சிறந்தது: ஏபி டி வில்லியர்ஸ்

    • கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியிருந்தது.
    • 2008-க்குப் பிறகு முதன்முறையாக சேப்பாக்கத்தில் நேற்று சிஎஸ்கே அணியை வீழ்த்தியது.

    ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் நட்சத்திர வீரர்களுடன் விளையாடிய ஆர்சிபி ஒருமுறை கூட சாம்பியன் கோப்பையை வென்றது கிடையாது. அந்த அணி தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கொண்டிருக்கும். ஆனால், பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய அளவில் இருக்கமாட்டார்கள்.

    பேட்டிங், பவுலிங், பீல்டிங் என சமநிலையற்ற ஒரு அணியாகத்தான் திகழும். ஆனால் இந்த சீசனில் ஆர்சிபி அணியை பார்க்கும்போது சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியாக திகழ்கிறது. தொடக்க வீரர்களாக பில் சால்ட், விராட் கோலி உள்ளனர். அதன்பின் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், டிம் டேவிட், லிவிங்ஸ்டன் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அதேவேளையில் பந்து வீச்சிலும் ஹெசில்வுட், புவி, யாஷ் தயால் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த சீசன்களை விட தற்பேதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது என ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாவது:-

    கடந்த சீசன்களுடன் ஒப்பிடும்போது, தற்போதைய பேலன்ஸ் கொண்ட ஆர்சிபி அணி 10 மடங்கு சிறந்தது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தின்போது, ஆர்சிபி அணிக்கு பேலன்ஸ் தேவை எனப் பேசியிருந்தேன். இது பந்து வீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் அல்லது பீல்டர்களை பற்றியது கிடையாது. ஐபிஎல் அணிகள் மற்றும் ஆப்சன்களில் சமநிலையை கொண்டுள்ளது பற்றியது.

    நான் புவியை பார்த்தேன். அவர் விளையாட போவதில்லை என்று நினைத்தேன். ஆனால் சிஎஸ்கே அணிக்கெதிராக களம் இறங்கினார். இதுபோன்ற அட்டகாசமான மாற்று வீரர்களைத்தான் அணி விரும்பும். முதல் போட்டியில் விளையாடவில்லை. 2ஆவது போட்டியில் வேறொரு வீரருக்காக களம் இறக்கப்பட்டார். இதுபோன்ற பேலன்ஸ், பந்து வீச்சில் பலம் அணிக்கு தேவையானது. ஆர்சிபிக்கு சிறந்த தொடக்கம் கிடைத்துள்ளது. இது உண்மையிலேயே சிறந்தது.

    இவ்வாறு ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×