நடிகை அபிநயாவின் நிச்சயம் கிளிக்ஸ்... யார் இந்த கார்த்திக்?

சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்
நடிகை அபிநயாவின் நிச்சயம் கிளிக்ஸ்... யார் இந்த கார்த்திக்?
Published on

நாடோடிகள், சீதம்மா வகிட்லோ சிரிமல்லி சேத்து, மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் நடிகை அபிநயா. சமீபத்தில் மலையாள திரைப்படமான பணி திரைப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மனைவி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நடிகை அபிநயா விரைவில் அவரது நீண்ட நாள் காதலனை திருமண செய்துக் கொள்ளப்போவதாகவும் அவர்கள் இருவருக்கும் நிச்சயம் நடைப்பெற்றதையும் அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் தற்பொழுது அவரது காதலுடன் நிச்சயம் செயத போது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவரது பெயர் வெகெசனா கார்த்திக். இவர் ஐதராபாத்தில் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை அபிநயா தற்பொழுது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக தமிழில் சுந்தர் சி இயக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடிக்கவுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com