என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை.
    • சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.

    1990-களின் தொடக்கத்தில் 'வைதேகி வந்தாச்சு', 'பொண்டாட்டி ராஜ்யம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சரவணன். இதன்பின் 'நந்தா' மற்றும் 'பருத்திவீரன்' படத்தில் கார்த்திக்குக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார்.

    கடந்த 2003-ம் ஆண்டில் சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015-ம் ஆண்டு முதல் ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் இருந்த சரவணன் 2019-ம் ஆண்டு முதல் மனைவியான சூர்ய ஸ்ரீயின் சம்மதத்துடன் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார்.



    முதல் மனைவி, இரண்டாவது மனைவி என இருவரையும் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எதிர்எதிர் வீடுகளில் குடிவைத்தார். ஏற்கனவே வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் முதல் மனைவியுடன் மோதல் போக்கை கடைபிடித்த சரவணன், பின்னர் சமரசம் செய்து கொண்டார். இதனால் அவர் மீதான புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டனர்.

    இந்நிலையில், முதல் மனைவி சூர்ய ஸ்ரீ தனது கணவர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரக அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். அம்மனுவில்,

    * சரவணன், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்து இருக்கிறார்.

    * இதனால் தினமும் சண்டை, தகராறு வந்து கொண்டே இருக்கிறது.

    * ஒரு செருப்பு ஸ்டாண்டை கூட வைத்துக் கொள்ளக்கூடாது, இந்த வீடு என்னுடையது என எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள்.

    * ஒன்றுமே இல்லாமல் அந்த பெண் என் வீட்டுக்கு வந்த போது, அவளுக்கு ஆதரவு கொடுத்து பார்த்துக்கொண்டது நான் தான். ஆனால், அந்த பெண் அந்த நன்றியை மறந்துவிட்டாள்.

    * என் வீட்டு கதவு திறந்து இருந்தாலே, கதவை எட்டி உடைத்து, இந்த வீடு என்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறாள்.

    * 18-ந்தேதி செருப்பு ஸ்டாண்டில் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த செருப்பு ஸ்டாண்டை அடித்து உடைத்து போட்டுவிட்டாள்.

    * நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை, என்னுடைய வீட்டுக்குள் புகுந்து, அந்த போட்டோவை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று அந்தப் பெண் எடுத்து சென்றுவிட்டாள்.

    * இப்படி தினம் தினம் அந்த பெண்ணால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.

    * என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை.



    * விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் அவர் ஒரு முறை கூட அதற்கு ஆஜராகவில்லை.

    * சரவணன் எனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், அவரால், மாதா மாதம் பணத்தை கொடுக்க முடியாது என்பதால், ஒரே செட்டில்மெண்டாக அவர் பணத்தை தர வேண்டும்.

    * இப்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.

    * அப்பா, அண்ணன் இவர்கள் தான் என்னை பார்த்துக் கொள்கிறார்கள்.

    * எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் சரவணணும், அவருடைய இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான் என்றார். 

    விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது.

    விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.

    பூக்கி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    5% ஆக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:

    வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளது.

    ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    • உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது.
    • இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    இந்நிலையில், உதயநிதி மகன் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளது. தனுஷின் 'இட்லி கடை' படத்தை வெளியிடுவதன் மூலம் விநியோகஸ்தராக அவர் களமிறங்கவுள்ளதை ரெட் ஜெயண்ட் நிறுவனம் உறுதிசெய்தது. இதை தொடர்ந்து இன்பநிதி தொடர்ந்து, பட தயாரிப்பில் ஈடுபட உள்ளார்.

    இன்பநிதி தனது அப்பா வழியில் விநியோகஸ்தராக தனது கெரியரை தொடங்கியுள்ளார். உதயநிதியின் திரைப்பயணமும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வழியாக தான் தொடங்கியது.

    விஜய், திரிஷா நடித்த 'குருவி' திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும். கௌதம் மேனனின் 'விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் உதயநிதி ஸ்டாலின் விநியோகஸ்தராக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தராக பல வெற்றி படங்களை அவர் வெளியிட்டார்.

    திரையில், 2009-ம் ஆண்டு வெளியான 'ஆதவன்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகினார். அப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து 'மனிதன்', 'நிமிர்', 'கண்ணே கலைமானே', 'சைக்கோ','நெஞ்சுக்கு நீதி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

    திரைப்படங்களில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். 2019-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அதனை தொடர்ந்து, 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

    2023-ம் ஆண்டு வெளிவந்த 'மாமன்னன்' படத்துடன் தன்னுடைய திரையுலகை பயணத்தை முடித்துக் கொண்ட உதயநிதி, அதன் பின்னர் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றார்.

    மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து திமுகவில் உதயநிதி தான் முதலமைச்சர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அப்பா வழியில் இன்பநிதி விநியோகஸ்தராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதனை தொடர்ந்து விரைவில் கதாநாயகனாகவும் இன்பநிதி அறிமுகமாவார் என்று கூறப்படுகிறது.

    ஆகவே, உதயநிதியை போல இன்பநிதியும் திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இதன் தொடக்கமாக தான் இன்பநிதிக்கு ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் CEO பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா, ஹிருதயபூர்வம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது.

    ஆகஸ்ட் 29 முதலே ஓணம் பண்டிகையின் கொண்டாட்டம் தொடங்கியது. கேரளா மற்றும் தமிழக தெற்கு பகுதியில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஓணத்தின் முக்கியமான நாளான திரு ஓணம் நாளை நடைப்பெற இருக்கிறது.

    ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாளத்தில் லோகா, ஓடு குதிரா சாடும் குதிரா, ஹிருதயபூர்வம் ஆகிய திரைப்படங்கள் வெளியானது. அதில் லோகா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

     

    இன்று கேரளம் சுற்றுலா துறை சார்பாக ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைப்பெற்றது. அதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். மேலும் இந்த விழாவில் நடிகர் ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் கலந்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இவர்கள் இருவரும் சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது.
    • திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கிற வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

    சென்னை:

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியுள்ள டி.டி.வி. தினகரனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

    டி.டி.வி. தினகரனின் முடிவு அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதாக அமையும் என நம்புகிறேன் வாழ்த்துகிறேன். பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது. திண்டிவனம் நகராட்சியில் நடந்து இருக்கிற வன்கொடுமை சகித்துக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது. அதுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

    • ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது.
    • கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும்.

    தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வேண்டுதல் செய்து கொண்டவர்கள் இங்கு திருமணம் செய்து கொண்டு தேவநாதசாமியை தரிசித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் முகூர்த்த நாட்களில் 100 முதல் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இன்று( 4-ந்தேதி) ஆவணி மாதம் வளர்பிறை முகூர்த்தம் என்பதால் தேவநாத சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணி முதல் திருமணங்கள் நடைபெறத் தொடங்கியது. இதை தொடர்ந்து அதிகாலை முதல் மணமக்கள் தங்கள் உறவினர்களுடன் திருவந்திபுரம் ஆர்ச் பகுதியில் இருந்து நடந்தும் ஷேர் ஆட்டோக்களிலும் சென்றனர்.

    இதனால் திருவந்திபுரம் பகுதியில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. இந்த நிலையில் கோவில் மண்டபத்தில் 105 திருமணங்களும், அப்பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சுமார் 25 திருமணங்கள் என 130 திருமணம் நடைபெற்றது. மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிகாலையில் திரண்டதால் கடலூர்-பாலூர் சாலையில் காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிகாலை முதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததால் போக்குவரத்து நெரிசலை உடனுக்குடனுக்குடன் சரி செய்து அனுப்பி வைத்தனர்.

    • அ.தி.மு.க.வுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • அழைப்பு விடுக்காததால் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

    தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் டெல்லியில் ஜே.பி.நட்டா, அமித்ஷா ஆகியோர் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, வாக்கு திருட்டு பற்றிய காங்கிரசின் குற்றச்சாட்டுகளை முறியடிப்பது குறித்தும், தமிழக பா.ஜ.க.வினரிடையே நிலவும் கோஷ்டி பூசல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    அதன்பின்னர், அ.தி.மு.க. குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என அமித் ஷா அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

    அ.தி.மு.க.வுடனான உறவை மேலும் வலுப்படுத்தி, ஒன்றிணைந்து செயல்பட அமித் ஷா அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    நேற்று நடைபெற்ற கூட்டத்தில் எல். முருகன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவான், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். அழைப்பு விடுக்காததால் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. 

    • மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.
    • கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தை அடுத்த சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில், தமது கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து வினா எழுப்பிய முதியவர் ஒருவரை அங்கிருந்த கிராம நிர்வாக அதிகாரியும், காவல் உதவி ஆய்வாளரும் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கியுள்ளனர். மனிதத் தன்மையற்ற இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள முத்துப்பேட்டை கிராமத்தில் சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்ற முதியவர் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்திருந்தார். ஆனால், பல நாள்களாகியும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சாத்தூர் கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு சென்ற முதியவர் திருவேங்கடம், அங்கிருந்த அதிகாரிகளை அணுகி தமது மனு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று வினவியுள்ளார். மேலும் தமது மனுவை பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார்.

    இதை சகித்துக் கொள்ள முடியாத கிராம நிர்வாக அதிகாரியும், அவருக்கு துணையாக வந்த அதிகாரிகளும் பெரியவர் வேங்கடபதியை அடித்து உதைத்துள்ளனர். அதுமட்டுமின்றி காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளரும் அந்த முதியவரை மார்பில் குத்தி விரட்டியடித்துள்ளார். இந்த காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மனு கொடுக்க வந்த முதியவரை அதிகாரிகள் தாக்கியதை மன்னிக்கவே முடியாது.

    உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவிக்கப்பட்ட போதே அது ஊரை ஏமாற்றும் திட்டம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை 35 லட்சம் பேர் மனு அளித்துள்ள நிலையில், அவர்களில் 90 விழுக்காட்டிற்கும் கூடுதலான மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், முகாம்கள் தொடங்கி 50 நாள்களாகியும் இதுவரை ஒருவருக்குக் கூட உரிமைத் தொகை வழங்கப்படவில்லை. உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அப்பட்டமான படுதோல்வி என்பதற்கு இவை தான் சான்றாகும்.

    மனு மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? என்று எவரேனும் கேட்டால், அதற்கு பதிலளிக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை ஆகும். ஆனால், அந்தக் கடமையைக் கூட செய்யாமல் மக்களை விரட்டியடிப்பது பெரும் குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

    உங்களுடன் ஸ்டாலின் முகாம் மக்களுக்கு உதவி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தானே தவிர, கேள்வி கேட்பவர்களை அடித்து உதைப்பதற்கான திட்டம் இல்லை என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். அதிகாரத் திமிருடன் மக்களை அவமதிப்பவர்களுக்கு மக்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள் என கூறியுள்ளார். 

    • இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை.

    சென்னை:

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு 680 ரூபாயும், நேற்றுமுன்தினம் சவரனுக்கு 160 ரூபாயும், நேற்று சவரனுக்கு 640 ரூபாயும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,440-க்கு விற்பனையானது. வரலாற்றில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றும் தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,795-க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.78,360-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440

    02-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,800

    01-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.77,640

    31-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    30-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.76,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-09-2025- ஒரு கிராம் ரூ.137

    02-09-2025- ஒரு கிராம் ரூ.137

    01-09-2025- ஒரு கிராம் ரூ.136

    31-08-2025- ஒரு கிராம் ரூ.134

    30-08-2025- ஒரு கிராம் ரூ.134

    • ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.
    • பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் வருகிற 7-ந் தேதி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தினந்தோறும் இரவு 7 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். ராக்கால பூஜை இரவு 9 மணிக்கு நடைபெறும். வருகிற 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் என்பதால் அன்றைய தினம் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து கோவில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற ஞாயிற்றுக்கிழமை இரவு 9.57 மணி முதல் நள்ளிரவு 1.26 மணி வரை சந்திர கிரகணம். எனவே அன்று மாலை 6.30 மணிக்கு தங்கரத புறப்பாடு நடைபெறும். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மற்றும் உபகோவில்களில் இரவு 7.45 மணிக்கு ராக்கால பூஜை நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் கோவில் நடை அடைக்கப்படும்.

    படிப்பாதை, மின் இழுவை ரெயில், ரோப்காரில் வரும் பக்தர்கள் இரவு 7 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    மறுநாள் செப்டம்பர் 8-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சம்ரோக்ஷனபூஜை, ஹோமம், நைவேத்தியம், தீபாராதனை, நடைபெறும். அதன் பின்பு விஸ்வரூப தரிசனத்துக்கு வழக்கம் போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார்.
    • இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர்.

    ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார். அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் "ஐ லவ் யூ" என்று ஒரு செய்தியை அனுப்பினாள். அதற்கு அந்த சிறுவன் "ஐ லவ் யூ டூ" என்று பதிலளித்தான்.

    மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் அந்த சிறுவனின் செல்போன் எண்ணுக்கு அழைத்தார். இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் "ஐ லவ் யூ" என்று சொல்வீர்களா? இதை அறிந்ததும் அவரது கணவர் எனக்கு போன் செய்ததாகக் கூறினார்.

    அவர்கள் அனைவரும் மைலாவரம் போலீஸ் நிலையத்தில் இருக்கிறார்கள். உடனே அங்கு வர வேண்டும் என மிரட்டினார். இந்த வார்த்தைகளால் பயந்துபோன சிறுவன் அழுது, தான் என்ன சொன்னாலும் செய்வேன் என்று கூறினான். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு, அந்த நபர் ஆன்லைன் மூலம் ரூ. 11,000 பறித்துக் கொண்டார்.

    சைபர் குற்றவாளிகள் மோசடியில் ஒரு புதிய வகை போக்கைப் புகுத்துகிறார்கள். இதுவரை டிஜிட்டல் கைதுகளால் மக்களை பயமுறுத்திய இந்த குற்றவாளிகள், புதிய முறையில் பணம் பறித்து வருகின்றனர். வாலிபர்கள் இதில் சிக்காமல் இருக்க கவனமுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×