என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது.
திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிா்வாகக்குழுக் கூட்டம் நேற்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கவுரவத் தலைவா் ஜி.கே. மணி, பொதுச்செயலாளா் முரளி சங்கா், வன்னியா் சங்கத் தலைவா் பு.தா. அருள் மொழி, பா.ம.க. நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ஸ்ரீகாந்தி, எம்.கே. ஸ்டாலின் உள்பட 20 போ் பங்கேற்றனா்.
இக்கூட்டத்துக்குப் பின்னா் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கட்சியின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அன்புமணி, கட்சியின் விதிகளை மீறி செயல்பட்டுள்ளதாக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதன் தொடா்ச்சியாகவே 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தை நடத்தி, அன்புமணி மீதான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளோம். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி வருகிற 10-ந் தேதிவரை விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதமும் கட்சியின் பொதுச்செயலா் வழியாக அன்புமணிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்தக் கடிதத்துக்கும் அவா் உரிய காலத்துக்குள் பதிலளிக்காவிடில் நிர்வாகக் குழுவின் முடிவின் படி, அவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் மூலம் டாக்டர் அன்புமணி மீது அடுத்த வாரம் நடவடிக்கை பாயலாம் என்று பா.ம.க. தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால் டாக்டர் ராமதாஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் எந்த கடிதத்துக்கும் பதில் அளிக்க கூடாது என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பதில் சொல்லாமல் தொடர்ந்து மவுனத்தை கடைப்பிடித்து அதையே டாக்டர் ராமதாசுக்கு பதிலாக தெரிவிக்கவும் அன்புமணி திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் தொடர்ச்சியாக பா.ம.க. விவகாரம் கோர்ட்டு மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு மாறும்.
அந்த சமயத்தில் சட்ட ரீதியாக அனைத்து சவால்களையும் சந்திக்கலாம் என்று டாக்டர் அன்புமணி தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.
- சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார்.
சென்னை:
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018-ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாக வாதிடப்பட்டது.
சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.
இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரிய மூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.
- தரவரிசை பட்டியலில் பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனம் 2 ஆம் இடம் பிடித்துள்ளன.
- மும்பை ஐ.ஐ.டி. நிறுவனம் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளன.
தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை: சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 7-வது ஆண்டாக தொடர்ந்து முதலிடம்
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதற்கான போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8 ஆயிரத்து 686 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றன. இதில் அதிகபட்சமாக தென்னிந்திய பகுதிகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 344 கல்வி நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில் முறை பயிற்சி, பட்டப்படிப்பு முடிவு, தொடர்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி, என்ஜினீயரிங், மேலாண்மை, துணை மருத்துவம், மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் மற்றும் திட்டமிடல், வேளாண்மை மற்றும் அது சார்ந்த படிப்புகள், புதுமையான கண்டுபிடிப்புகள், ஒட்டுமொத்த பட்டியல் ஆகிய பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதில் சிறந்த இடத்தை பிடிக்கும் நிறுவனங்களின் பெயரை இந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற செய்து வெளியிடுகிறது.
அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக பெங்களூரு ஐ.ஐ.எஸ். நிறுவனமும், மும்பை ஐ.ஐ.டி. நிறுவனமும் இடங்களை பிடித்துள்ளன.
ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடத்தை தொடர்ந்து 7-வது ஆண்டாக தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்த தரவரிசையில் முதல் 10 இடத்தில் 6 ஐ.ஐ.டி.க்கள் இடம் பெற்றுள்ளன.
- ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன்.
- ஜி.எஸ்.டி. வரியை கட்டமைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு நன்றி.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜி.எஸ்.டி. கவுன்சில் மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க சீர்திருத்தத்தை வரவேற்கிறேன். மாற்றத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை வழிநடத்துவதில் தொலைநோக்கு பார்வையோடு தலைமை தாங்கிய வழிநடத்திய பிரதமர் மோடிக்கும், எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் வளர்ச்சி சார்ந்த ஜி.எஸ்.டி. வரியை கட்டமைத்ததற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கும் நன்றி.
அத்தியாவசியப் பொருட்கள், சுகாதாரம், வேளாண்மை, காப்பீடு ஆகியவற்றை எளிமைப்படுத்தும் இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும், நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் தனித்துவமான இயக்குனரான மிஸ்கின் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் பிரவீன் எஸ் விஜய். தலைப்பு இன்னும் அறிவிக்கப்படாத இந்த படம், Intense Courtroom Drama -ஆக கதைக்களம் இருக்கும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
படக்குழுவின் விவரங்கள்:
இசை: சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு: அரு வின்சென்ட்
எடிட்டிங்: பிரசன்னா ஜி.கே
கலை இயக்கம்: குழித்துறை ரவீஸ்
இந்த படத்தை வேடிக்காரன்பட்டி எஸ் சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சல் தயாரிக்க, அக்ஷய் கேஜ்ரிவால் மற்றும் விவேக் சந்தர் எம் இணை தயாரிப்பாளர்களாக உள்ளனர். வினோத் சி.ஜே படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்ற, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்குகின்றன.
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் வெளியான தெலுங்கு படம் *உப்பு கப்புரம்பு*வில் நடித்தார் (Prime Video-வில் நேரடியாக வெளியானது). அடுத்ததாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள *Revolver Rita* வெளியீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
**மிஸ்கின்** அண்மையில் பிரதேப் ரங்கநாதன் இயக்கிய *Dragon* படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன்பின் *Oho Enthan Baby*யில் சிறிய கதாபாத்திரத்தில் தோன்றிய அவர், தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமான *I'm Gameல் நடித்து வருகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள *Pisaasu 2* தாமதமாகி வருகிறது. மேலும், **விஜய் சேதுபதி** நடிக்கும் *Train* படம் தற்போது post-production நிலையிலுள்ளது.
- மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.
- மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது.
சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர், தன் மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனுதாரர் தன் மனைவிக்கு ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.
அவரது படிப்புக்கான செலவாக 2.77 லட்சம் ரூபாயை தர மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம் அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார் என மனுதாரர் தரப்பில், அது தொடர்பான சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
- ஷிகர் தவானிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
சட்டவிரோத சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா ஆகியோருக்கு அமலாக்கதுறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
சூதாட்ட செயலியை விளம்பரப்படுத்துவதன் மூலம் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் செய்யப்பட்டதா மற்றும் அது பணமோசடியுடன் தொடர்புடையதா என கோணத்தில் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவானுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியை சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ததாக ஷிகர் தவான் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த மாதம், ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பாக இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு அமலாக்கத்துறை விசாரணை நடத்திய குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்த திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்தார். இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.30 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவுடன் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் கைகோர்த்து கட்டா குஸ்தி பகாம் 2 எடுக்கவுள்ளனர். இதனை விஷ்ணு விஷால் மற்றும் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் நகைச்சுவையான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் கதாநாயகியாக ஐஷ்வர்யா லட்சுமி நடிக்கிறார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் இசையை ஷான் ரோல்டன் மேற் கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
- 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
18 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
350 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
1,200 சிசிக்குக் குறைவான பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் மற்றும் 1,500 சிசி கொண்ட டீசல் வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சிமெண்டின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், கார் , ஏசி, டிவி மற்றும் சிமெண்டின் விலை கணிசமாக குறையும்.
- தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
- 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
சென்னை:
சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,
ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.
இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.
இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.
இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை.
- சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
1990-களின் தொடக்கத்தில் 'வைதேகி வந்தாச்சு', 'பொண்டாட்டி ராஜ்யம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சரவணன். இதன்பின் 'நந்தா' மற்றும் 'பருத்திவீரன்' படத்தில் கார்த்திக்குக்கு சித்தப்பாவாக நடித்து பிரபலமானார்.
கடந்த 2003-ம் ஆண்டில் சூர்யஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2015-ம் ஆண்டு முதல் ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் லிவிங் டூ கெதரில் இருந்த சரவணன் 2019-ம் ஆண்டு முதல் மனைவியான சூர்ய ஸ்ரீயின் சம்மதத்துடன் ஸ்ரீதேவியை திருமணம் செய்துகொண்டார்.

முதல் மனைவி, இரண்டாவது மனைவி என இருவரையும் மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் எதிர்எதிர் வீடுகளில் குடிவைத்தார். ஏற்கனவே வீடு யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனையில் முதல் மனைவியுடன் மோதல் போக்கை கடைபிடித்த சரவணன், பின்னர் சமரசம் செய்து கொண்டார். இதனால் அவர் மீதான புகார்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டனர்.
இந்நிலையில், முதல் மனைவி சூர்ய ஸ்ரீ தனது கணவர் சரவணன் மீது ஆவடி காவல் ஆணையரக அலுவலத்தில் புகார் அளித்துள்ளார். அம்மனுவில்,
* சரவணன், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு என் வீட்டிற்கு எதிரிலேயே குடி வைத்து இருக்கிறார்.
* இதனால் தினமும் சண்டை, தகராறு வந்து கொண்டே இருக்கிறது.
* ஒரு செருப்பு ஸ்டாண்டை கூட வைத்துக் கொள்ளக்கூடாது, இந்த வீடு என்னுடையது என எனக்கு கொலை மிரட்டல் விடுகிறார்கள்.
* ஒன்றுமே இல்லாமல் அந்த பெண் என் வீட்டுக்கு வந்த போது, அவளுக்கு ஆதரவு கொடுத்து பார்த்துக்கொண்டது நான் தான். ஆனால், அந்த பெண் அந்த நன்றியை மறந்துவிட்டாள்.
* என் வீட்டு கதவு திறந்து இருந்தாலே, கதவை எட்டி உடைத்து, இந்த வீடு என்னுடையது என சொந்தம் கொண்டாடுகிறாள்.
* 18-ந்தேதி செருப்பு ஸ்டாண்டில் பிரச்சனை ஆரம்பித்தது. அந்த செருப்பு ஸ்டாண்டை அடித்து உடைத்து போட்டுவிட்டாள்.
* நானும் என் கணவரும் சேர்ந்து எடுத்த போட்டோவை, என்னுடைய வீட்டுக்குள் புகுந்து, அந்த போட்டோவை பார்த்தாலே எரிச்சலாக வருகிறது என்று அந்தப் பெண் எடுத்து சென்றுவிட்டாள்.
* இப்படி தினம் தினம் அந்த பெண்ணால் எனக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
* என்னுடைய செலவுக்கு சரவணன் எந்தவிதமான பணத்தையும் தருவதில்லை.

* விவாகரத்து வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆனால் அவர் ஒரு முறை கூட அதற்கு ஆஜராகவில்லை.
* சரவணன் எனக்கு ஜீவனாம்சம் தரவேண்டும், அவரால், மாதா மாதம் பணத்தை கொடுக்க முடியாது என்பதால், ஒரே செட்டில்மெண்டாக அவர் பணத்தை தர வேண்டும்.
* இப்போது சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் நான் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறேன்.
* அப்பா, அண்ணன் இவர்கள் தான் என்னை பார்த்துக் கொள்கிறார்கள்.
* எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு காரணம் சரவணணும், அவருடைய இரண்டாவது மனைவி ஸ்ரீதேவியும் தான் என்றார்.
விஜய் ஆண்டனி மற்றும் அஜய் திஷன் நடிப்பில் வெளியான மார்கன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக விஜய் ஆண்டனி நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் பூக்கி என்ற திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் அஜய் திஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
பூக்கி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வருகிறது. திரைப்படம் 2026 ஆம் ஆண்டு வெளியாக இருக்கிறது. தனுஷா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். படத்தின் பூஜை கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.






