என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
    • தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் செல்கின்றனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள தௌராலா பகுதியில் உள்ள கிராமங்களில் நிர்வாண கும்பல் என அழைக்கப்படும் மர்மக் கும்பலால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    விவசாய நிலங்களில் இருந்து திடீரென நிர்வாணமாக வெளியே வரும் நபர்கள், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக வயலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் மட்டும் நான்கு முறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருப்பதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

    பாராலா கிராமம் அருகே, சில நாட்களுக்கு முன்பு பணிக்குச் சென்ற பெண் ஒருவரை அவ்வாறு 2 பேர் சூழ்ந்தனர். அந்தப் பெண் சத்தம் போட்டதால் அந்த நபர்கள் தப்பிவிட்டனர்.

    அவமானத்தால் இத்தகைய சம்பவங்கள் இதற்கு முன் வெளியே கூறப்படாமல் இருந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.

    பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுவதாக பாராலா கிராமத் தலைவர் ராஜேந்திர குமார் தெரிவித்தார்.

    குற்றவாளிகளைப் பிடிக்கவும், மக்களின் அச்சத்தைப் போக்கவும் கிராமத்தில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிரோன்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளது. 

    • விலாயத் புத்தா தமிழ் டீசரில், 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.
    • மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய ’விலயாத் புத்தா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்ட்டது.

    மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள 'விலாயாத் புத்தா' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

    ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார்.

    மலையாள எழுத்தாளர் ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய 'விலயாத் புத்தா' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

    புஷ்பா பட பாணியில் சந்தன மரக் கட்டை கடத்தலை மையமாக கொண்டு கதைக்களம் நகர்கிறது.

    விலாயத் புத்தா தமிழ் டீசரில், 'குட்டி வீரப்பன்', 'புஷ்பா இன்டர்நேஷ்னல், நான் லோக்கல்' என்ற வசனங்கள் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.   

    • டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார்.
    • அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் கலந்து கொள்கிறார்

    ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடர் வரும் 9ம் தேதி நியூயார்க் நகரில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 23 முதல் 29ம் தேதி வரை உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்நிலையில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்போர் பட்டியலில் இருந்து பிரதமர் மோடியின் பெயர் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.

    இந்தக் கூட்டத்தில் பிரேசில் நாட்டின் பிரதிநிதி முதலில் உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 23 ஆம் தேதி உரையாற்றுவார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றுவார்.

    இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி, ரஷியா, சீனாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஆகியவை சர்வதேச அரசியலில் விவாதப்பொருளாக மாறி வரும் நிலையில் ஐநா கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது கவனம் பெற்றுள்ளது.

    • 58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.
    • 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

    செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பொறியாளர் ரஷீத் வாக்களிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    வாக்களிக்க அனுமதி கோரிய ரஷீத்தின் மனுவை நேற்று நடந்த விசாரணையில் கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜீத் ஏற்றுக்கொண்டார். வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கான செலவுகளை ரஷீத் ஏற்க வேண்டும் என்றும், அதற்காக அவர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.

    2017 ஆம் ஆண்டு பயங்கரவாத நிதியுதவி வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) அவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் 2019 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

    முன்னதாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை ரஷீத்துக்கு நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
    • காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    காசா நகரில் இருந்து மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் கட்டாயப்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகிறது.

    இந்த சூழல் நேற்று, இடம்பெயர்ந்த பாலஸ்தீனக் குடும்பங்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை குறிவைத்து குண்டுகளை வீசி இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 41 பேர் உயிரிழந்தனர்.

    இடிபாடுகளுக்கு அடியில் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

    அக்டோபர் 2023-ல் போர் தொடங்கியதிலிருந்து, காசாவில் இதுவரை இஸ்ரேல் ராணுவத்தால் 64,368 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 162,367 பேர் காயமடைந்துள்ளனர். காசா நகரை முழுமையாக கைப்பற்ற ராணுவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்க்கது.  

    • 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
    • பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.

    பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

    இந்த திட்டத்தை செயல்படுத்தும் நடைமுறைகள் குறித்து விவாதிக்க வரும் 10 ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் (CEO) ஒரு உயர்மட்டக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு, தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெறும் மூன்றாவது முக்கிய சந்திப்பு இதுவாகும்.

    குறிப்பாக, 2026 ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.

    இந்தச் சூழலில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பாஜகவுக்காக வாக்குகளை திருட தேர்தல் ஆணையம் செய்யும் நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

    மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகாரில் வாக்காளர் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக 16 நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார்.

    இதற்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த SIR திட்டத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

    வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிந்து நீக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என தேர்தல் ஆணையம் வாதிடுகிறது. 

    பீகாரில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

    • இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
    • ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.

    நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

    மேகாலயவின் சோஹ்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 790 பக்க குற்றப்பத்திரிகையை SIT சமர்ப்பித்தது.

    மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா (29) மற்றும் சோனம் (24) இந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

    இருப்பினும், சோனம் ஏற்கனவே தங்கள் குடும்பத்தின் தளபாடங்கள் தொழிலில் கணக்காளராக பணிபுரியும் ராஜ் குஷ்வாஹாவை காதலித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    திருமணத்திற்குப் பிறகு தேனிலவுக்காக மேகாலயா சென்றிருந்த இந்த ஜோடி, மே 23 அன்று ஒரு ஹோம்ஸ்டேயில் இருந்து வெளியே வந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனது.

    ஜூன் 2 ஆம் தேதி ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

    அதுவரை தலைமறைவாக இருந்த சோனம், ஜூன் 8 ஆம் தேதி உத்தரபிரதேசத்தின் காஜிபூரில் போலீசில் சரணடைந்தார். அவருக்கு உதவிய நண்பர்களை போலீசார் முன்னதாக கைது செய்தனர்.

    ஜூன் 11 ஆம் தேதி, விசாரணையில் சோனம் தனது காதலன் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். 

    • மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

    தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவது குறித்து மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வந்தது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் பேரில் தெலுங்கானா காவல்துறையுடன் இணைந்து மகாராஷ்டிரா காவல்துறை ஐதராபாத்தில் புறநகர்ப் பகுதியான செராமல்லியில் தனியார் ரசாயன தொழிற்சாலையை சோதனையிட்டது.

    இந்த ஆய்வுகளின் போது, மிகவும் ஆபத்தான XTX மற்றும் XTX Molly உள்ளிட்ட போதைபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஆலையில் இருந்த ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 12 பேரை கைது செய்தனர். அவர்களுடன் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த ஐ.டி. ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.  

    • 400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
    • 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.

    400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு நேற்று வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

    லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    விநாயகர் சதுர்த்தியின் நாளில் 10-வது நாளான இன்று (செப்டம்பர் 6) சிலைகள் நீரில் கரைக்கப்பட ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் இந்த மிரட்டல் வந்திருந்தது.

    இந்நிலையில் மிரட்டல் விடுத்த நபரை 24 மணி நேரத்திற்குள் மும்பை காவல்துறை கண்டுபிடித்து கைது செய்துள்ளது.

    கைது செய்யப்பட்டவர் அஸ்வனி குமார் (வயது 51) என்ற ஜோதிடர்.

    பீகாரை சேர்ந்த அஸ்வினி குமார் உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வசித்து வருகிறார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அஸ்வினி குமார் மீது அவரது நண்பர் கடந்த 2023 இல் பாட்னா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

    புகாரை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஸ்வினி குமார் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பின் ஜாமீனில் வெளியே வந்த அஸ்வினி குமார் தனது நண்பனை பழிவாங்க திட்டம் தீட்டினார்.

    அதன்படி நண்பரை பயங்கரவாதியாக சித்தரித்து போலீசில் சிக்க வைக்க மும்பையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட அஸ்வினி குமாரிடமிருந்து ஏழு மொபைல் போன்கள், மூன்று சிம் கார்டுகள், ஆறு மெமரி கார்டுகள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
    • தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.

    பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

    இந்த உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட , மோடி, " அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது.

    பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பிட்டோம்.

    உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

    உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்று தெரிவித்தார்.

    • ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
    • திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.

    மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன்.

    டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. டிடிவி தினகரன் ஏன் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார் என அவரைச் சொல்லச் சொல்லுங்கள்.

    திமுக ஆட்சியில் இருக்க கூடாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

    திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார்.

    இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

    இதில் அதிகபட்சமாக, கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை தொடவில்லை.

    17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.

    இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது.

    இந்நிலையில், ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.

    இதில், அதிகபட்சமாக டஷிங்கா முசேகிவா 21 ரன்களும், ரியான் பர்ல் 20 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் இருந்தார். தொடர்ந்து, பிரெயின் பென்னட் 19 ரன்களும், தடிவானாஷே மருமணி 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.

    துஷ்மந்தா சமீரா அதிகட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ×