என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
- தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட , மோடி, " அதிபர் மேக்ரோனுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நாங்கள் மதிப்பிட்டோம்.
உக்ரைன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் உட்பட சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.
உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் இந்தியா-பிரான்ஸ் மூலோபாய கூட்டாண்மை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்று தெரிவித்தார்.
- ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
- திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
மதுரையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் நேரடியாக சென்று சமரசம் பேச தயாராக இருக்கிறேன்.
டிடிவி தினகரன் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. டிடிவி தினகரன் ஏன் கூட்டணியில் இருந்து வெளியில் சென்றார் என அவரைச் சொல்லச் சொல்லுங்கள்.
திமுக ஆட்சியில் இருக்க கூடாது. ஒருமித்த கருத்துடைய அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
திமுக என்றுமே தொடர்ந்து ஆட்சி அமைத்தது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
- இலங்கை தரப்பில் அதிகபட்சமாக கமில் மிஸ்ரா 20 ரன்கள் அடித்தார்.
இலங்கை - ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 2-வது போட்டி ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ஜிம்பாப்வே பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
இதில் அதிகபட்சமாக, கமில் மிஸ்ரா (20 ரன்கள்), சரித் அசலன்கா (18 ரன்கள்) மற்றும் தசுன் ஷனகா (15 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கை தொடவில்லை.
17.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இலங்கை அணி 80 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
அபாரமாக பந்துவீசிய ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் மற்றும் சிக்கந்தர் ராசா தலா 3 விக்கெட்டுகளும், முசரபானி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 81 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது.
இந்நிலையில், ஜிம்பாப்வே அணி 14.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது.
இதில், அதிகபட்சமாக டஷிங்கா முசேகிவா 21 ரன்களும், ரியான் பர்ல் 20 ரன்கள் எடுத்து இருவரும் அவுட் ஆகாமல் இருந்தார். தொடர்ந்து, பிரெயின் பென்னட் 19 ரன்களும், தடிவானாஷே மருமணி 17 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர்.
துஷ்மந்தா சமீரா அதிகட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
- கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதயில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்களுக்கு திமுக அரசால் ஊதியம் வழங்க இயலவில்லை" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு நன்மை செய்யும் கட்சி அதிமுக.
ஏழைகளுக்கான எந்த திட்டத்தையும் திமுக அரசு கொண்டு வரவில்லை.
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையை கொடுக்க வைத்ததே அதிமுக தான்.
கமிஷன், கரப்ஷன் ஆகிய பணிகளை மட்டுமே திமுக சரியாக செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய ஏ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணிக்கு எதிராக, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்(4 நாட்கள்) மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16-ம் தேதி லக்னோவில் தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா ஏ அணி உடனான இரண்டு 4 நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்தியா ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான தகவலின் படியே, ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். துருவ் ஜூரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், இந்திய அணி கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன், விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், என் ஜெகதீசன், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், தேவ்தத் படிக்கல், ஹர்ஷ் துபே, ஆயுஷ் பதோனி, நிதிஷ் குமார் ரெட்டி, தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், கலீல் அகமது, யாஷ் தாகூர்.
- எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
- செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி இபிஎஸ்-க்கு கடிதம்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தியபாமா, ஐடி பிரிவுச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா கடிதங்களை அனுப்புகின்றனர்.
- சரக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 6 பேர் ரோப் காரில் பயணித்துள்ளனர்.
- தொழிலாளர்கள் மற்றும் லிப்ட்மேன்கள் உட்பட 6 பேர் இறந்தனர்.
குஜராத் மாநிலம், பஞ்ச்மகாலில் பவகவ் மலையில் உள்ள ரோப் கார் அறுந்து கீழே விழுந்ததில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பஞ்ச்மகாலில் பவகவ் பாவகத் மலை மீது உள்ள கோயிலுக்கு இன்று பிற்பகல் 3.30 மணியளவில் சரக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு 6 பேர் ரோப் காரில் பயணித்துள்ளனர்.
அப்போது, திடீரென கயிறு அறுந்ததில் ரோப்கார் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், தொழிலாளர்கள் மற்றும் லிப்ட்மேன்கள் உட்பட 6 பேர் இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுக்குழு 6 பேரின் உடல்களை மீட்டனர்.
பஞ்சமஹால் கலெக்டர் இரண்டு லிப்ட்மேன்கள், இரண்டு தொழிலாளர்கள் மற்றும் இரண்டு பேர் உட்பட ஆறு பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார்.
விபத்து குறித்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
- பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்.
- ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 9.9.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:
• பராமரிப்பு பணி காலம்: 9.9.2025 முதல் 19.10.2025 வரை.
• நேரம்: காலை 5 மணி முதல் 6:30 மணி வரை.
• இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:
• மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
• காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.
• இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.
- கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் கூடிய அமைச்சர்கள் குழு, ஜி.எஸ்.டி. வரி அடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த 3ம் தேதி மற்றும் 4ம் தேதி நடைபெற்றது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றார்கள். கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள உதவிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.
படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை இன்று மாலை 6 மணி முதல் வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இட்லி கடை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படக்குழுவின் யூனிக் ப்ரமோஷன்கள், ரிலேட்டபிள் கன்டெண்ட்ஸ், வைரலான மேக்கிங் வீடியோ, ரோஸ்ட் நிகழ்ச்சி என எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.
படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.
திரைப்படக் குழு:
இயக்கம்: சாய் மார்தண்ட்
தயாரிப்பு: '90s' இயக்குநர் ஆதித்ய ஹசன்
நடிப்பு: மௌலி தனுஜ் பிரஷாந்த், சிவானி நாகரம்
துணை நடிகர்கள்: ராஜீவ், எஸ். எஸ். காஞ்சி, அனிதா சௌதரி, சத்யா கிருஷ்ணன்
இசை: சிஞ்ஜித் யெர்ரமில்லி
விநியோகம்: வம்சி நந்திபட்டி, பன்னி வாஸ்
- செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அதிமுக மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது என சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா மேலும் கூறியதாவது:-
செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல், இது அதிமுக கட்சி நலனுக்கு உகந்தது அல்ல.
மீண்டும் அதிமுகு ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் தர போகிறோம்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தி கட்சிக்கு அழைத்துவர முயற்சித்தவர் ஜெயலலிதா.
திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






