என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பதவி பறிப்பு எதிரொலி- செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000 பேர் ராஜினாமா
- எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
- செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி இபிஎஸ்-க்கு கடிதம்.
அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இதனை தொடர்ந்து திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் ஆதரவாளர்கள், தங்களையும் கட்சிப் பதவில் இருந்து நீக்கக் கோரி எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி வருகின்றனர்.
மாவட்ட மகளிரணிச் செயலாளர் சத்தியபாமா, ஐடி பிரிவுச் செயலாளர் செந்தில் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச் செயலாளர் அருள் ராமச்சந்திரன், நகரச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக ஒன்றிய, நகர, கிளை மற்றும் சார்பு அணிகளைச் சேர்ந்த சுமார் 2,000 நிர்வாகிகள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போல் கோபிசெட்டிபாளையம் பகுதி நிர்வாகிகளும் தனித்தனியாக ராஜினாமா கடிதங்களை அனுப்புகின்றனர்.






