என் மலர்
நீங்கள் தேடியது "train service change"
- பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
- இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
டிட்வா புயல் நெருங்கி வருவதால், பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால், 23 ரெயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சேது விரைவு ரெயில் நாளை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்- திருவனந்தபுரம் விரைவு ரெயில் நாளை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரம்- திருச்சி விரைவு ரெயில் நாளை மானாமதுரையில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஒகா செல்லும் விரைவு ரெயில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
மதுரை:
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண்.16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) நாளை ஒரு நாள் மட்டும் மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி மற்றும் கோட்டயம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ஆலப்புழை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் ஹரிபாடு, அம்பாலப்புழை, ஆலப்புழை, சேர்த்தலை மற்றும் எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
- பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்.
- ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 9.9.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:
• பராமரிப்பு பணி காலம்: 9.9.2025 முதல் 19.10.2025 வரை.
• நேரம்: காலை 5 மணி முதல் 6:30 மணி வரை.
• இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:
• மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
• காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.
• இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.
பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்றும், மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரெயில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 9.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்ல வேண்டிய காவேரி ரெயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
திண்டுக்கல்:
மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை, குருவாயூர்-சென்னை, கோவை-நாகர்கோவில், நாகர்கோவில்-கோவை, நாகர்கோவில்-மும்பை தாதர், நாகர்கோவில்-திருப்பதி ஆகிய ரெயில்கள் மதுரைக்கு வராமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
இதேபோல் நாளை கன்னியாகுமரி-ஹவுரா, கன்னியாகுமரி-கச்சக்குடா, சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் ஆகியவையும் நாளை மறுநாள் திருச்செந்தூர்-மணியாட்சி மற்றும் நாகர்கோவில்-எக்மோர் ரெயில்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் யார்டில் இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒருசில ரெயில்கள் வழக்கமான நேரத்தை விட தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
ரெயில் (எண்.66051) மூர் மார்க்கெட்டில் இருந்து பகல் 2.05 மணிக்கு ஆவடிக்கு புறப்படும் மின்சார ரெயில், ஆவடியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு பகல் 2.50 மணிக்கு புறப்படும் (எண்.66052) மின்சார ரெயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மூர் மார்க்கெட்டில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு கும்மிடிப்பூண்டிக்கு புறப்படும் மின்சார ரெயில் (எண். 42001) கும்மிடிப்பூண்டியில் இருந்து மூர்மார்க்கெட்டிற்கு அதிகாலை 2.45 மணிக்கு புறப்படும் எண்.42002 மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொன்னேரியில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு இயக்கப்படும்.
மூர்மார்க்கெட்டில் இருந்து இரவு 11.20 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி செல்லக்கூடிய மின்சார ரெயில் பொன்னேரி -கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் மூர்மார்க்கெட் -பொன்னேரி இடையே இயக்கப்படும். இன்று ஒருநாள் மட்டும் இந்த 2 மின்சார ரெயில்கள் ஒரு பகுதி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரல் வரக்கூடிய மின்சார ரெயில் (எண்.42004) கும்மிடிப்பூண்டி- பொன்னேரி இடையே நாளை (7-ந்தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் பொன்னேரி- சென்ட்ரல் மூர்மார்க்கெட் இடையே இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு விஜயவாடா செல்லக் கூடிய பினாசினி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும். நெல்லூரில் இருந்து காலை 10 மணிக்கு சூலூர்பேட்டை புறப்படக் கூடிய மின்சார ரெயில் (66030) 1½ மணி நேரம் தாமதமாக காலை 11.30 மணிக்கு புறப்படும்.
சூலூர்பேட்டையில் பகல் 12 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் வரக்கூடிய மின்சார ரெயில் (66026) 1½ மணி நேரம் தாமதமாக பகல் 1.30 மணிக்கு புறப்படும்.
மேற்கண்ட 3 ரெயில்களும் இன்றும், நாளையும் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தில் புறப்பட்டு செல்லும்.
விஜயவாடா- சென்னை பிளாகினி எக்ஸ்பிரஸ், தானாபூர்- கே.எஸ்.ஆர். பெங்களூர் சங்கமித்ரா எக்ஸ்பிரஸ், சாப்ரா- சென்ட்ரல் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்றும், நாளையும் தாமதமாக வந்து செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. #ElectricTrain






