என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் சேவை மாற்றம்"
- பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது.
- இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
டிட்வா புயல் நெருங்கி வருவதால், பாம்பன் பாலத்தில் 58 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதனால், 23 ரெயில்களில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் 23 ரெியல்களில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் சேது விரைவு ரெயில் நாளை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம்- திருவனந்தபுரம் விரைவு ரெயில் நாளை ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரம்- திருச்சி விரைவு ரெயில் நாளை மானாமதுரையில் இருந்து இயக்கப்படும்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஒகா செல்லும் விரைவு ரெயில் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- தாம்பரத்தில் இருந்து காலை புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் விக்கிரவாண்டி ரெயில் பணிமனையில் இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் பிற்பகல் 12.15 மணி முதல் 3.45 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் காரணமாக இன்று மற்றும் 26, 27-ந்தேதிகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு ரெயில் திண்டிவனத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் விழுப்புரத்தில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்து சேர வேண்டிய மெமு ரெயில், திண்டிவனத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
மதுரை:
திருவனந்தபுரம் கோட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து ராஜபாளையம், செங்கோட்டை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் (வ.எண்.16327) நாளை (சனிக்கிழமை) ஒரு நாள் மட்டும் கொல்லம் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் குருவாயூர்-மதுரை ரெயில் (வ.எண்.16327) வருகிற 21-ந் தேதி குருவாயூரில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக கொல்லத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு மதுரை புறப்படும்.
திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) நாளை ஒரு நாள் மட்டும் மாவேலிக்கரை, செங்கனூர், திருவல்லா, செங்கனச்சேரி மற்றும் கோட்டயம் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக ஆலப்புழை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும். இந்த ரெயில் ஹரிபாடு, அம்பாலப்புழை, ஆலப்புழை, சேர்த்தலை மற்றும் எர்ணாகுளம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
- தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
சென்னை துறைமுகத்திலிருந்து ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற சரக்கு ரெயிலில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பிடித்து பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்புத்துறையினர் 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தினர்.
தீ அணைக்கப்பட்ட நிலையில், திருவள்ளூரில் தீ விபத்துக்குள்ளான சரக்கு ரயிலின் டேங்கர்களை அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தண்டவாளத்தில் இருந்து விலகிய டேங்கர்களை கிரேன் மூலம் அப்புறத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சரக்கு ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சதாப்தி விரைவு ரெயில் அரக்கோணத்தில் இருந்து புறப்படும் என்றும், மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்த சதாப்தி விரைவு ரெயில் சென்ட்ரல்- அரக்கோணம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்ல வேண்டிய ரெயில், இரவு 7.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வேண்டிய நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், இரவு 9.05 மணிக்கு காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து அசோகபுரம் செல்ல வேண்டிய காவேரி ரெயில், இரவு 9.15 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து கோவை செல்ல வேண்டிய ரெயில், இரவு 10 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
- ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கரூர் வழியாக செல்லும் ரெயில் சேவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், திருச்சி - ஈரோடு இன்று கரூர் வரை மட்டும் இயக்கப்படும்.
ஈரோட்டிலிருந்து செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் பிற்பகல் 3.05 மணிக்கு கரூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
- புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.
தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை (9-ந்தேதி), 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதே போன்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதி விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம்-மயிலாடுதுறை மெமு ரெயில் சேர்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவில் ரெயில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.
- விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வேக்கு விஜய்வசந்த் எம்.பி. அனுப்பி யுள்ள கோரிக்கையில் கூறி யிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணி களுக்காக அவ்வப்போது தென்மாவட்ட ரெயில் சேவையில் ரெயில்வே நிர்வாகம் சில மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழர் களின் முக்கிய பண்டிகை யான பொங்கல் திருவிழா நெருங்கி வரும் நிலையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக மதுரை-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தோடு பல ரெயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல் லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்ப டுத்தும் எனவே, இரட்டை வழிப்பாதை அமைக்க மேற்கொள்ளப்படும் ரெயில் சேவை மாற்றத்தை தள்ளி வைக்க வேண்டும்.
இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோரின் பயணம் இலகுவாகும். மேலும் வர்த்தக ரீதியாக செல்லும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு ரெயில் சேவை மாற்றத்தை பொங்கல் விடுமுறைக்கு பிறகு நடை முறை படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடாவுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட வேண்டிய பினாகினி விரைவு ரெயில் (12712) சென்னை சென்ட்ரல்- கூடூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த ரெயில் கூடூரில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும்.
விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வருகிற 17, 24, 31 ஆகிய தேதிகளில் காலை 6.10 மணிக்கு புறப்படும் பினாகினி விரைவு ரெயில் (12711), கூடூர்- சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதே போல் சென்னை சென்ட்ரல்- சாய் நகர் ஷீரடி, சென்ட்ரல்-விஜயவாடா, சென்ட்ரல்-அவுரா ரெயில் புறப்படும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.
தஞ்சாவூர்:
தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வினோத் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
லாலாபேட்டை, குளித்தலை ரெயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்றும், நாளையும் சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சேலம்- மயிலாடுதுறை மெமு விரைவு ரெயில் (வண்டி எண்.16812) இன்றும், நாளையும் பிற்பகல் மதியம் 2.05 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு கரூரை வந்தடையும். கரூர்- மயிலாடுதுறை இடையே சேவை இருக்காது. அதே நேரத்தில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றும், நாளையும் முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரெயில் இயக்கப்படும். இந்த ரெயில் கரூரில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும். வண்டி எண் 16812 என்ற ரெயில் நின்று செல்லும் அதே நிறுத்தங்களில் இந்த சிறப்பு ரெயில் நின்று செல்லும்.
இதேப்போல் திருச்சி- ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண். 06809) வழக்கமாக திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மாலை 5.10 மணிக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம்.
- புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவை:
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின் படி கரூர்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரெயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி-கரூர் ரெயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கட லூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
சொரனூர்-கோவை ரெயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம்-கரூர் ரெயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல 7 ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் மதியம் ஒரு மணிக்கும், கோவை-சொரனூர் ரெயில் மாலை 4.25 மணிக்கும், கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர்-சேலம் ரெயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரெயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
திண்டுக்கல்:
மதுரை கூடல்நகர் அருகே ரெயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மதுரை-திண்டுக்கல் வழியாக தினசரி இயக்கப்படும் செங்கோட்டை-மயிலாடுதுறை, குருவாயூர்-சென்னை, கோவை-நாகர்கோவில், நாகர்கோவில்-கோவை, நாகர்கோவில்-மும்பை தாதர், நாகர்கோவில்-திருப்பதி ஆகிய ரெயில்கள் மதுரைக்கு வராமல் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும்.
இதேபோல் நாளை கன்னியாகுமரி-ஹவுரா, கன்னியாகுமரி-கச்சக்குடா, சென்னை-மதுரை தேஜஸ் ரெயில் ஆகியவையும் நாளை மறுநாள் திருச்செந்தூர்-மணியாட்சி மற்றும் நாகர்கோவில்-எக்மோர் ரெயில்களும் மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






