என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விழுப்புரம் வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்
    X

    விழுப்புரம் வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம்

    • சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.
    • புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.

    தாம்பரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை (9-ந்தேதி), 16 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி வரை மட்டும் இயக்கப்படும். அதே போன்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரிக்கு காலை 6.35 மணிக்கு புறப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதிகளில் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்.

    மறுமார்க்கமாக விழுப்புரம்-சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 1.40 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் நாளை மற்றும் 16-ந்தேதி விக்கிரவாண்டியில் இருந்து இயக்கப்படும். விழுப்புரம்-மயிலாடுதுறை மெமு ரெயில் சேர்ந்தனூரில் இருந்தும், புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் முண்டியம்பாக்கத்தில் இருந்தும் நாளை (9-ந்தேதி), மற்றும் 16-ந்தேதிகளில் புறப்படும்.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் குருவாயூர் விரைவில் ரெயில் 1 மணி நேரம் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும்.

    Next Story
    ×