search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Rights Scheme"

    • ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
    • கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.

    கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதியின்படி தமிழ்நாடு முழுவதும் பெண்களுக்கான மாதாந்திர உரிமை தொகை ரூ.1,000 வழங்கும் திட்டத்தை கடந்த 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திட்டம் தொடங்கி வைப்பதற்கு முன்னதாகவே, பலருக்கு ரூ.1000 தொகை அனுப்பி வைக்கப்பட்டது. இதனால், பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    அதன்பிறகு, உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1000 பெறுவதற்கு விண்ணப்பம் செய்து, நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறும் 1.06 கோடி பெண்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தனித்தனியாக ஸ்பீட் போஸ்டில் முதலமைச்சரின் வாழ்த்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    அந்த கடிதத்தில், "இனி மாதம்தோறும், ஆயிரம் ரூபாய் தங்களின் வங்கிக் கணக்கில் தமிழக அரசால் நேரடியாக வரவு வைக்கப்படும்.

    கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்புக்குத் தரப்படும் அங்கீகாரமே இத்தொகையாகும்.

    இது உங்களுக்கான உதவித் தொகை அல்ல, உரிமைத் தொகை, உங்களில் ஒருவனான ஸ்டாலின் வழங்கும் உழைப்புத் தொகை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விண்ணப்ப பதிவு சிறப்பு முகாம்கள் இன்று , நாளை (சனிக்கிழமை), நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்களும், முதலாம், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் நடைபெறுகிறது.

    வருவாய்த்துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அந்த குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டம், முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதிவாய்ந்த பெண்களும் விண்ணப்பிக்கலாம். இதுதவிர சிறப்பு முகாம்களில் ஏற்கனவே விண்ணப்பபதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர முடியாத குடும்ப தலைவிகள் இந்த முகாம்களில் தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

    இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
    • பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது 2 கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து வருகிறார்கள்.

    சில குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வருகிற 3,4-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    எனவே பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.

    விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாயவிலைக்கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியாளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.
    • சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள ஹைவே விஸ் பேரூராட்சியில் மேக மலை, மணலாறு, அப்பர் மணலாறு, வெண்ணியாறு, மகாராஜா ெமட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட 7 மலை கிராமங்கள் உள்ளன. இதில் 895 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர்.

    தமிழக அரசு அறிவித்து ள்ள மகளிர் உரிமை த்தொகை பெறுவதற்கான திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தேனி மாவட்ட த்தில் 24 -7 -2023 முதல் 4-8 -2023 வரை முகாம்கள் நடத்தப்படுகிறது.

    அதன் அடிப்படையில் உத்தமபாளையம் வருவாய் வட்டத்தின் கீழ் வரும் ஹைவேவிஸ் பேரூராட்சி உள்ளடக்கிய 7 கிராமங்க ளுக்கும் முதற்கட்ட முகா ம்கள் பேரூராட்சி அலுவலக த்தில் ஒரு இடத்தில் மட்டும் நடைபெறுதாக இருந்தது. பேரூராட்சியில் உள்ள ஏழு கிராமங்களும் 10 முதல் 15 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    மேலும் வாகன போக்கு வரத்தும் குறைவாகவே உள்ளது. இதனைத் ெதாட ர்ந்து இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தி.மு.க. பேரூர்செயலாளர் கணேசன் ஆகியோர் மாவட்ட கலெக்டர் கவன த்துக்கு கொண்டு சென்ற னர். கலெக்டர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைவரும் பயன்பெறும் பொருட்டு மகளிர் உரிமைத் தொகை முகாம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பேரூராட்சியின் 7 ரேஷன் கடைகள் மூலம் பணியா ளர்களைக் கொண்டு 7 கிராமத்தில் உள்ள பயனா ளர்களுக்கு நேரடியாக விண்ணப்பங்கள் வழங்க ப்பட்டது.

    மேலும் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள மக்களுக்கு விண்ணப்ப பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் சிவில் சப்ளை அதிகாரிகளும், பஞ்சாயத்து யூனியன் பணியாளர்கள் மூலம் முகாமில் விண்ண ப்பங்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

    • வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டத்தில் 259 முகாம்கள் மற்றும் 2-ம் கட்டமாக 258 முகாம்கள் என மொத்தம் 517 முகாம்கள் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 259 பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம்கள் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்ப ங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ் செய்தியாக வரும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ,டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மத்திய கூட்டுறவு வங்கி கிளை களிலும் ஜீரோ பேலன்சில் சேமிப்பு கணக்கு தொடங்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வீடுகள் தோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மகளிர் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு முதல்கட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந்தேதி வரை அந்தந்த ரேசன்கடைகளில் நடைபெறும்.

    அவ்வாறு வழங்கப்பட்ட விண்ணப்பங்களுடன் ஆதார், ரேசன், மின்கட்டண அட்டைகளுடன் வங்கி கணக்கு புத்தகம் அவசியமாகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு என்.ஜி.ஓ.காலனி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கி கிளை களிலும் ஜீரோ பேலன்சில் சேமிப்பு கணக்கு தொடங்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

    இதற்காக 2 பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ, ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து வங்கி கணக்கு தொடங்கலாம் என்றார்.

    ×