search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிர் உரிமை திட்டம் :தேனி மாவட்டத்தில் 2 நாளில் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு
    X

    பெரியகுளம் அருகில் உள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிைம திட்ட விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மகளிர் உரிமை திட்டம் :தேனி மாவட்டத்தில் 2 நாளில் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு

    • வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், வடபுதுப்பட்டி ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்ய முதற்கட்டத்தில் 259 முகாம்கள் மற்றும் 2-ம் கட்டமாக 258 முகாம்கள் என மொத்தம் 517 முகாம்கள் நடைபெற உள்ளது.

    தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் மற்றும் பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட 259 பகுதிகளில் முதற்கட்ட விண்ணப்பதிவு முகாம்கள் 24ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் சுமார் 39 ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்படும். பெறப்பட்ட விண்ணப்ப ங்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு குறுஞ் செய்தியாக வரும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு ,டோ க்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×