என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் செப்டம்பர் 9 முதல் மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம்.
    • ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் 9.9.2025 முதல் 19.10.2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரெயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.

    பராமரிப்பு அட்டவணை மற்றும் மெட்ரோ ரெயில் சேவை மாற்றங்கள் பின்வருமாறு:

    • பராமரிப்பு பணி காலம்: 9.9.2025 முதல் 19.10.2025 வரை.

    • நேரம்: காலை 5 மணி முதல் 6:30 மணி வரை.

    • இந்தக் காலகட்டத்தில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் நேரங்கள்:

    • மெட்ரோ ரெயில்கள் காலை 5 மணி முதல் 6:30 மணி வரை வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

    • காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரெயில் சேவைகள் வழக்கம் போல் எவ்வித மாற்றமும்மின்றி இயங்கும்.

    • இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது. ரெயில் பாதை பராமரிப்புப் பணிகள், ரெயில்களின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இயக்கத்திற்கு மிகவும் அவசியம். பயணிகள் இந்த அறிவிப்பைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பராமரிப்புப் பணிகளால் ஏற்படும் சிரமத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வருந்துகிறது.

    பயணிகள் அனைவரும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

    பாதுகாப்பான மற்றும் திறமையான மெட்ரோ ரெயில் சேவையை உறுதிப்படுத்த அனைத்துப் பயணிகளும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது.
    • கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என 4 அடுக்குகளாக உள்ளது.

    சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றி பேசிய பிரதமர் மோடி, தீபாவளிக்குள் ஜி.எஸ்.டி. கணிசமாக குறைக்கப்படும் என்று அறிவித்தார்.

    அதைத்தொடர்ந்து, ஜி.எஸ்.டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைக்க பரிசீலிக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 12 சதவீத வரிஅடுக்கில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி அடுக்குக்கும், 28 சதவீத வரிஅடுக்கில் உள்ள 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரிஅடுக்குக்கும் மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பொருட்களின் விலை குறையும் என்று கருதப்படுகிறது.

    கடந்த மாதம் கூடிய அமைச்சர்கள் குழு, ஜி.எஸ்.டி. வரி அடுக்கு குறைப்புக்கு ஒப்புதல் தெரிவித்தது. தனது பரிந்துரைகளை ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பி வைத்தது.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த 3ம் தேதி மற்றும் 4ம் தேதி நடைபெற்றது. அதில், அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் பங்கேற்றார்கள். கணித்தபடி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புதிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள உதவிய அனைத்து மாநில நிதி அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடிதம் எழுதியுள்ளார்.

    அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

    படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை இன்று மாலை 6 மணி முதல் வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர்.

    இந்நிலையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக இட்லி கடை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    Little Hearts படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது,

    சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    படக்குழுவின் யூனிக் ப்ரமோஷன்கள், ரிலேட்டபிள் கன்டெண்ட்ஸ், வைரலான மேக்கிங் வீடியோ, ரோஸ்ட் நிகழ்ச்சி என எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

    படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

     திரைப்படக் குழு:

    இயக்கம்: சாய் மார்தண்ட்

    தயாரிப்பு: '90s' இயக்குநர் ஆதித்ய ஹசன்

    நடிப்பு: மௌலி தனுஜ் பிரஷாந்த், சிவானி நாகரம்

    துணை நடிகர்கள்: ராஜீவ், எஸ். எஸ். காஞ்சி, அனிதா சௌதரி, சத்யா கிருஷ்ணன்

    இசை: சிஞ்ஜித் யெர்ரமில்லி

    விநியோகம்: வம்சி நந்திபட்டி, பன்னி வாஸ்

    • செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
    • திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    அதிமுக மூத்த முன்னோடியும் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கை அறிவார்ந்த செயலாகாது என சசிகலா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சசிகலா மேலும் கூறியதாவது:-

    செங்கோட்டையனின் பதவி பறிப்பு சிறுபிள்ளைத்தனமான செயல், இது அதிமுக கட்சி நலனுக்கு உகந்தது அல்ல.

    மீண்டும் அதிமுகு ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோடிக்கணக்கான தொண்டர்களின் எண்ணங்களுக்கு நாம் என்ன பதில் தர போகிறோம்.

    அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சோமசுந்தரத்தை சமாதானப்படுத்தி கட்சிக்கு அழைத்துவர முயற்சித்தவர் ஜெயலலிதா.

    திமுகவை வலுவிழக்கச் செய்வதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும்.
    • ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.

    அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்தியாவுடன் வர்த்தக மோதலை துணிச்சலாக பார்க்கிறோம். ஏனென்றால் மிகப்பெரிய வாடிக்கையாளருடன் சண்டையிடுவது நன்றாக இருக்கிறது. ஆனால் இறுதியில் இந்தியாவுக்கு அமெரிக்கா தேவைப்படும். விரைவில் அமெரிக்காதான் தேவை என்று சொல்வார்கள்.

    50 சதவீத வரியை நீக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஒன்று அல்லது 2மாதங்களில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவிக்கும். அவர்கள் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்பார்கள். டிரம்புடன் ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பார்கள். வர்த்தக ஒப்பந்தம் செய்ய இந்தியா முயற்சிக்கும்போது, மோடியை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை டிரம்ப் முடிவு செய்வார்"என்றார்.

    அதேபோல் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில்,"இந்தியா விதிக்கும் அதிகபடியான வரியால் அமெரிக்க வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன். ரஷியாவின் எண்ணையை லாபம், வருவாய்க்காக மட்டுமே இந்தியா வாங்குகிறது.

    ரஷியாவின் போர் இயந்திரத்திற்கு உணவளிக்கிறது. போரில் உக்ரேனியர்கள், ரஷ்யர்கள் இறக்கின்றனர். அமெரிக்க வரி செலுத்துவோர் அதிகமாக செலவிடுகிறார்கள்.

    இவ்வாறு கூறியுள்ளார்.

    கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

    2019 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் தனுஷின் இளைய மகனாக நடித்து இருந்தார் கென் கருணாஸ். இவரது நடிப்பு பலராலும் பாராட்டு பெற்றது. அதைத் தொடர்ந்து வாத்தி மற்றும் விடுதலை பாகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

    தற்போது கென் கருணாஸ் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்தில் இவரே கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இது ஒரு பள்ளிக்கூட பின்னணியில் நடக்கும் கதைக்களமாக இருக்கும் என கூறப்படுகிறது.

    இப்படத்தில் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சரமூடு முக்கிய கதாப்பாத்திரத்திலும், ஸ்ரீதேவி அப்பல்லா, அனிஷ்மா என மொத்தம் 3 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொள்கிறார். இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது.

    இந்நிலையில் படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்களை இன்று மாலை 6 மணி முதல் வெளியாக இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

    • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்றது.
    • தொடக்கம் முதலே எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை அதிரடியாக விளையாடினர்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் எரின் ரூட்லிப்- கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை, டெய்லர் டவுன்சென்ட் - கட்டெரினா சினியாகோவா ஜோடியுடன் மோதியது.

    இதில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய எரின் ரூட்லிப் - கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி இணை 6- 4 மற்றும் 6- 4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

    பாலா திரைத்துறையில் காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

    பாலா திரைத்துறையில் காந்தி கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தை வைபவின் ரணம் அறம் தவறேல் திரைப்படத்தை இயக்கிய ஷெரிஃப் இயக்கியுள்ளார். படத்தில் நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    படத்தின் இசையை மெர்வின் சாலமன் மற்றும் விவேக் மேற்கொள்கின்றனர். பாலாஜி கே ராஜா ஒளிப்பதிவை செய்கிறார்.படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரி்த்துள்ளது. இவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாலாஜி சக்திவேல் மற்றும் அவரது மனைவி இடையே உள்ள காதலை பிரதிபலிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    • உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதி.
    • ரஷியா ஏற்றுக்கொள்ளக் கூடிய உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்க முடியாது.

    ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    சமீபத்தில் ரஷிய அதிபர் புதினுடன் டிரம்ப் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் புதின் சில நிபந்தனைகளை விதித்தார். பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசினார்.

    இதற்கிடையே உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார். இதில் போர் நிறுத்தப்பட்ட தருணத்தில் பாதுகாப்பை வழங்க உதவுவதற்காக உக்ரைனின் 26 நட்பு நாடுகள் நிலம், கடல் அல்லது வான் வழியாக துருப்புக்களை அனுப்ப உறுதியளித்துள்ளதாக பிரான்ஸ் அதிபர் மெக்ரான் தெரிவித்தார்.

    இந்த நிலையில் வெளிநாட்டு ராணுவத்தால் உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் வழங்கக் கூடாது என்று ரஷியா தெரி வித்து உள்ளது.

    இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறுகையில்," எந்தவொரு போர்நிறுத்தமும் நடைமுறைக்கு வந்த மறுநாளே, உக்ரைனில் படைகளை நிறுத்தும் மேற் கத்திய நாடுகளின் திட்டங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். உக்ரைனுக்கு அனுப்பப்படும் எந்தவொரு துருப்பும் சட்டபூர்வமான இலக்குகளாக இருக்கும்." என்றார்.

    கிரெம்ளின் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, "உக்ரைனின் பாதுகாப்பு உத்தரவாதங்களை வெளி நாட்டு, குறிப்பாக ஐரோப் பிய மற்றும் அமெரிக்க, ராணுவங்களால் உறுதி செய்ய முடியாது. இது ரஷியா ஏற்றுக்கொள்ளக் கூடிய உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதமாக இருக்க முடியாது.

    மோதலைத் தீர்ப்பது குறித்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் விற்கும் இடையேயான உயர்மட்டக் கூட்டத்திற்கு முன் நிறைய பணிகள் செய்யப்பட வேண்டும்" என்றார்.

    • காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.
    • பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குரிமை விளக்க விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டுக்காக பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஏற்பாடுகளை பார்வையிட்டார்.

    பின்னர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாக்கு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் உரிமை. அந்த வாக்கு அதிகாரத்தை தேர்தல் ஆணையமும், பா.ஜ.க.வும் சேர்ந்து பறித்து வருவதை மக்களுக்கு எடுத்துச் சொல்லவும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும்தான் இந்த மாநில மாநாடு நடத்தப்படுகிறது.

    இதே கருத்தை வலியுறுத்தித்தான் ராகுல் காந்தி பீகாரில் பயணம் மேற்கொண்டார். இப்போது வாக்குகளை பறிப்பதற்கும், அடுத்ததாக குடியுரிமையைப் பறிப்பதற்கும் பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் திட்டமிடுகின்றன.

    இதனை தடுக்கக் கோரி நாங்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொல்லாவிட்டாலும், நாங்கள் கேட்ட பல தரவுகளை அவர்கள் அழித்துவிட்டனர். இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கரேஜ், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

    நான் எப்போதும் காங்கிரசின் குரலாகவே பேசுகிறேன். ஆனால், காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுக்காக செயல்படுவதாக ஒரு கட்டமைப்பை பா.ஜ.க. திட்டமிட்டு உருவாக்குகிறது.

    மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், தூய்மைப் பணியாளர் பிரச்சினைக்காகவும் தி.மு.க. அரசுக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டுவரக் கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திலும் நாங்கள் பங்கேற்றோம். இப்படி மக்கள் நலனுக்காகப் பல போராட்டங்களை நடத்தியுள்ள நிலையில், தி.மு.க.வுக்கு குரலாக காங்கிரஸ் இருப்பதாக அண்ணாமலை எதன் அடிப்படையில் சொல்கிறார் எனத் தெரியவில்லை.

    பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். 4 தேர்தல்களில் தோல்வியை கண்ட கூட்டணி. அது மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாத ஒரு கூட்டணி. மக்கள் எதிர்ப்பை பார்த்துவிட்டுத்தான் டி.டி.வி. தினகரன் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டார்.

    பாஜக எங்கு இருக்கிறதோ, அங்கு சர்வ நாசம் தான் உருவெடுக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க. 4 அணிகளாக உடைந்ததற்கும், பா.ம.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைக்கும் பாரதீய ஜனதா தான் காரணம். அவர்கள் இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    யார் ஒன்றாகச் சேர்ந்தாலும் இந்தியா கூட்டணிக்கு எந்த பாதகமும் கிடையாது. எங்கள் கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. அ.தி.மு.க.வின் அனைத்து அணிகளும் ஒன்றாக இணைந்தால்கூட, வேறு ஒருவர் தான் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பார். அவரது வீட்டு வாசலில் எடப்பாடி பழனிசாமி சென்று நிற்கும் நிலைதான் உருவாகும். தற்போதைய சூழலில் தமிழகத்தில் 3-வது அணி உருவாவதற்கு வாய்ப்பே கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×