என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    Little Hearts  புதுமுகங்களின் ரொம்-காம்..இளைஞர்கள் கொண்டாட்டம்..பாக்ஸ் ஆபிஸில் அதிரடி!
    X

    "Little Hearts" புதுமுகங்களின் ரொம்-காம்..இளைஞர்கள் கொண்டாட்டம்..பாக்ஸ் ஆபிஸில் அதிரடி!

    Little Hearts படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது,

    சிறிய பட்ஜெட்டில் உருவான "லிட்டில் ஹார்ட்ஸ்" (Little Hearts), புதுமுகங்களான மௌலி தனுஜ் பிரஷாந்த் மற்றும் சிவானி நாகரம் நடித்திருக்கும் இப்படம், திரையரங்குகளில் செம வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    படத்தின் முதல் நாள் வசூலாக 2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது, அமெரிக்காவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஷோக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    படக்குழுவின் யூனிக் ப்ரமோஷன்கள், ரிலேட்டபிள் கன்டெண்ட்ஸ், வைரலான மேக்கிங் வீடியோ, ரோஸ்ட் நிகழ்ச்சி என எல்லாம் சேர்ந்து படத்துக்கு பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது.

    படத்தில் இடம் பெற்ற நகைச்சுவை காட்சிகள் அதிகமாக வொர்க் அவுட் ஆகியுள்ளதால் இளைஞர்கள் கூட்டம் படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

    திரைப்படக் குழு:

    இயக்கம்: சாய் மார்தண்ட்

    தயாரிப்பு: '90s' இயக்குநர் ஆதித்ய ஹசன்

    நடிப்பு: மௌலி தனுஜ் பிரஷாந்த், சிவானி நாகரம்

    துணை நடிகர்கள்: ராஜீவ், எஸ். எஸ். காஞ்சி, அனிதா சௌதரி, சத்யா கிருஷ்ணன்

    இசை: சிஞ்ஜித் யெர்ரமில்லி

    விநியோகம்: வம்சி நந்திபட்டி, பன்னி வாஸ்

    Next Story
    ×