என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அப்துல் ரஷீத்"

    • 58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.
    • 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

    செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பொறியாளர் ரஷீத் வாக்களிக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

    வாக்களிக்க அனுமதி கோரிய ரஷீத்தின் மனுவை நேற்று நடந்த விசாரணையில் கூடுதல் அமர்வு நீதிபதி சந்தர் ஜீத் ஏற்றுக்கொண்டார். வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கான செலவுகளை ரஷீத் ஏற்க வேண்டும் என்றும், அதற்காக அவர் ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

    58 வயது பொறியாளரான ரஷீத் மீது ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு நிதி வழங்கியதாக குற்றச்சட்டு உள்ளது.

    2017 ஆம் ஆண்டு பயங்கரவாத நிதியுதவி வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமையால் (NIA) அவர் கைது செய்யப்பட்டார்.

    அவர் 2019 முதல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே 2024 மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் உமர் அப்துல்லாவை ரஷீத் தோற்கடித்து எம்,பி ஆனார்.

    முன்னதாக, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 வரை ரஷீத்துக்கு நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
    • அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார்.

    ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் தோல்வியை ஏற்பதாக முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

    வெற்றி பெற போகும் சுயேச்சை வேட்பாளர் அப்துல் ரஷீத்க்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    உமர் அப்துல்லாவை விட அப்துல் ரஷீத் 1,80,478 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

    எஞ்சினியர் ரஷீத் என அழைக்கப்படும் அப்துல் ரஷீத், உபா சட்டத்தில் கைதாகி 2019ம் ஆண்டு முதல் டெல்லி திகார் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • ‘கூகுள் மேப்’ என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள்.
    • கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    'கூகுள் மேப்' என்பது புவியியல் தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஆகும். ஒரு இடத்தில் இருந்து வெறோரு இடத்திற்கு வாகனங்களில் பயணிப்பவர்கள், சரியான இடத்திற்கு செல்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றால் மறுப்பதற்கில்லை.

    செல்லவேண்டிய இடத்திற்கு செல்லும் சாலை உள்ளிட்ட அனைத்தையும் 'கூகுள் மேப்' காண்பித்துவிடுவதால், தெரியாத இடத்திற்கு கூட எளிதாக சென்று விட முடிகிறது.

    இருந்தபோதிலும் சில நேரங்களில் 'கூகுள் மேப்' தவறான வழியை காண்பித்து விடுவதால் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் கண்ணங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் அப்துல் ரஷீத்(வயது35), தஷ்ரீப்(36).

    சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் உப்பினங்கியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு காரில் சென்றனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன், அது காட்டிய வழியை பின்பற்றி காரில் சென்றனர்.

    குட்டிகோல் பல்லாஞ்சி ஆற்றின் பாலம் வழியாக அவர்கள் சென்றனர். அப்போது அவர்களது கார் ஆற்றுள்குள் பாய்ந்தது.

    'கூகுள் மேப்' புதிதாக கட்டப்பட்டிருந்த பாலத்தை காட்டாமல், பழைய பாலத்தை காட்டியிருக்கிறது. அதனை பின்பற்றி அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் காரில் சென்றனர்.

    அவர்கள் சென்ற பழைய பாலத்தில் தடுப்புகள் இல்லாதது இருட்டில் தெரியவில்லை. இதனால் அவர்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது. அவர்களுடைய கார் சுமார் 150 மீட்டர் தூரம் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    சிறிது தூரத்தில் ஆற்றுக்குள் இருந்த செடிகளில் அவர்களது கார் சிக்கி நின்றது. இதையடுத்து அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகி இருவரும் காரின் பக்கவாட்டு ஜன்னல் வழியாக வெளியே வந்தனர்.

    தங்களது கார் ஆற்று வெள்ளத்தில் சிக்கியது குறித்து தங்களின் உறவினர்களுக்கு போனில் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ளத்தில் சிக்கியிருந்த அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகிய இருவரையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    மேலும் அவர்களது காரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார், ஆற்றின் நடுவே இருந்த செடியில் சிக்கி நின்றதால் அப்துல் ரஷீத், தஷ்ரீப் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×