search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிடர்"

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை.
    • ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம்.

    மும்பை:

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய வீரர்களின் திறமையை பரிசீலிக்காமல், ஜோதிடரை அணுகி வீரர்களின் ராசி பலன்களை பார்த்து தேர்வு செய்தது தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் இந்திய அணி விளையாடிய போது இந்திய கால்பந்து சங்கத்தின் அதிகாரி ஒருவரின் மூலம் ஜோதிடரை, அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் அணுகியிருக்கிறார். அந்த தகுதிச்சுற்றின் ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் எந்தெந்த வீரர்களை அணியில் எடுக்கலாம், எந்தெந்த வீரர்கள் எப்படி ஆடுவார்கள் என அணியின் விவரங்கள் அத்தனையையும் ஜோதிடரிடம் கொடுத்தே இகோர் ஸ்டிமாக் ஆலோசனை பெற்றிருக்கிறார்.

    கடந்த ஆண்டு ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணியின் பிளேயிங்11 பட்டியலை 2 நாள்களுக்கு முன்னதாகவே ஜோதிடருக்கு பயிற்சியாளர் அனுப்பியுள்ளார்.

    ஒவ்வொரு வீரரின் நட்சத்திரத்தை ஆராய்ந்து , இவர் இன்று நன்றாக விளையாடுவார். இவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்று பயிற்சியாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அந்த ஆட்டத்தில் சில முக்கியமான வீரர்கள் அணியில் இடம்பெறவில்லை. ஏனென்றால் அன்றைய தினம் அவர்களது நட்சத்திரங்கள் சாதகமாக இல்லை என்று ஜோதிடர் கூறியது தான் காரணம்.

    மேலும் ஜோதிடர் சொன்னபடி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றதாம். மேலும், இந்திய அணிக்காக ஆலோசனை வழங்கியதற்காக அந்த ஜோதிடருக்கு ரூ. 15 லட்சம் சன்மானமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த விசயம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது.
    • அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 விஷயங்களின் தொகுப்புகளை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கியம் என பஞ்சாங்கத்தில் 2 வகை உண்டு.

    தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18-ந் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19-ந் தேதியும்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.

    ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது. எதன் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ஜோதிடர்கள், பஞ்சாக கணிப்பாளர்கள், ஆன்மீக வாதிகள்தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறியிருப்ப தாவது:-

    விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை.

    செப்டம்பர் 18-ந் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி 19-ந் தேதி காலை 11.44 மணிக்கு முடிவடைகிறது.

    இந்த சதுர்த்தி நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தில் 18-ந் தேதி தான் விநாயகர் சதுர்த்தி இதில் எந்த மாற்றமும் இல்லை. வட மாநிலங்களில் 19-ந் தேதி கொண்டாடப்படலாம். அங்கு அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி அன்று விளாம்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, தேங்காய் கொண்டு செய்த பலகாரங்கள் படையலிட்டு விநாயகரை வழிபடுங்கள்.

    விநாயகரை வழிபட்டால் செல்வம் பெருகும், பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

    இதேபோல் மேலும் ஜோதிடர்கள் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் செப்.18-ந் தேதி தேரோட்ட மும், மறுநாள் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    காஞ்சி சங்கர மடத்தில் பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் பங்கேற்ற சதஸ் எனும் கூட்டம் நடந்தது. இதில் செப்.18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த் தியை கொண்டாடு வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கோவில்களிலும் செப்டம்பர் 18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளைதான் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜோதி டர்கள், ஆன்மீகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர். 

    • ஆடி பதினெட்டில் செல்வம் பெருக எந்த ராசிக்காரர்கள், யாரை வழிபடலாம்?
    • பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளித்தார்.

    மதுரை

    பொதுவாக ஆடி மாதம் என்பது அம்மன் மாதம் என்று சொல்வார்கள்.மேலும், ஆடி மாதங்களில் சுப காரியங்கள் செய்ய சற்று யோசிப்பார்கள். ஆனால், ஆடி 18 அன்று பதி னெட்டாம் பெருக்கு என்ப தால் அனைத்து சுபகாரியங் களையும் தாராளமாக செய் வார்கள். ஆடி 18 அன்று என்ன செய்தாலும் பல மடங் காக பெருகும் என்பது காலம் காலமாக, நம்பிக் கையாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஆடி 18 அன்று எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் செல்வ வளம் கூடும் என்று பிரபல ஜோதிடர் மதுரை -மடப் புரம் விலக்கு கரு. கருப்பை யா விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக அனைத்து ராசிக் காரர்களும் குலதெய் வத்தை வழிபட்டு வருவது கூடுதல் பலன் கொடுக்கு மாம்.

    குறிப்பாக மேஷம் ராசிக் காரர்கள் முருகனையும், ரிஷபம் ராசிக்காரர்கள் சிவ பெருமானையும், மிதுனம் ராசிக்காரர்கள் பெரு மாளையும், கடகம் ராசிக்கா ரர்கள் கால பைரவரையும், சிம்மம் ராசிக்காரர்கள் காளியம்மனையும், கன்னி ராசிக்காரர்கள் சக்கரத் தாழ்வாரையும், துலாம் ராசிக்காரர்கள் ஜீவ சமாதி களையும், விருச்சிகம் ராசிக் காரர்கள் முருகப்பெரு மானையும், தனுசு ராசிக் காரர்கள் அனுமனையும், மகரம் ராசிக்காரர்கள் மகா லட்சுமியையும், கும்பம் ராசிக்காரர்கள் தெற்குமுக விநாயகப் பெருமானையும், மீனம் ராசிக்காரர்கள் நவக் கிரகங்களில் உள்ள குரு பகவானையும், வாச முள்ள மலர்கள் சாற்றி வழிபட்டு வந்தால் செல்வ வளம் கூடுமாம்.

    இவ்வாறு பிரபல ஜோதிடர் திருப்புவனம் கரு. கருப்பையா கூறியுள்ளார்.

    • வைகாசி மாதம் புது வீடு கட்டுவது தொடர்பாக பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளித்தார்.
    • கட்டிட வேலைகள் தள்ளி போகலாம் அல்லது பணப்பிரச்சனை, காரியத்தடை வரலாம் என்றார்.

    மதுரை

    பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா வீடு கட்டுவது தொடர்பாக கூறியதாவது:-

    பொதுவாக தை மாதத்திற்கு பிறகு மாசி, பங்குனி, புது வீடு கட்ட தொடங்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் வைகாசி மாதத்தில் புது வீடு கட்ட தொடங்குவது வழக்கமாகும். சித்திரை மாதத்தில் சிலர் திருமணம் செய்வார்கள். வைகாசி மாதம் சுப காரியங்கள் செய்யலாமா? என்றால் தாராளமாக செய்யலாம். ஆனால் புது வீடு கட்ட தொடங்கலாமா? என்றால் சற்று யோசித்து தான் செயல்பட வேண்டுமாம். ஏனென்றால் வைகாசி மாதம் புதியதாக வீடு கட்ட தொடங்கினால், கட்டட வேலைகள் தள்ளி போகலாம் அல்லது பணப்பிரச்சனை, காரியத்தடை வரலாமாம்.

    கிரகப்பிரவேசம் வைப்பதிலும் தாமதம் ஏற்படலாமாம். ஆனால் வைகாசி மாதம் புதியதாக உள்ள வீட்டில் தாராளமாக குடி போகலாம். வீடு கட்ட தொடங்குவதை மட்டும் வைகாசி மாதத்தில் தவிர்ப்பது நல்லது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்கள புரத்தை சேர்ந்தவர் சென்னையில் இருந்து முட்டையை இறக்கிவிட்டு எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கராமாக மோதியது.
    • இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்கள புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் சிவக்குமார் (வயது 32). ஜோதிடர். இவர் நேற்று வீட்டி லிருந்து அவரது தாயார் பாக்கியத்தை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ராசிபுரம் அருகே உள்ள பாச்சலுக்கு சென்றார். அங்கு அவரது தாயாரை விட்டுவிட்டு நேற்று இரவு மங்களபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ராசிபுரத்தில் இருந்து திரும்பினார். அவர் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள செல்லியம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து முட்டையை இறக்கிவிட்டு எதிரே வந்த லாரியும் மோட்டார் சைக்கிளும் பயங்கராமாக மோதியது. இதில் ஜோதிடர் சிவக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் இறந்த சிவகுமாருக்கு நந்தினி (25) என்ற மனைவியும் ருத்ரா, ஸ்ரீ சுபா என்ற 2 மகள்களும் உள்ளனர். சிவகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த அவரது உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2023-ம் ஆண்டு எப்படி இருக்கும்? என்று ஜோதிடர் கரு.கருப்பையா பேட்டி அளித்துள்ளார்.
    • தினசரி காலையில் சூரிய வழிபாடும், குல தெய்வ வழிபாடும் நல்ல முன்னேற்றம் பெற உதவும் பரிகாரங்களாகும்.

    மதுரை

    புதிதாக பிறக்க உள்ள 2023-ம் ஆண்டு பலன்கள் குறித்து ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சிகள் என 3 வருகின்றன. மேலும் இந்த ஆண்டில் சுக்கிர பலன் நன்றாக இருப்பதால் மழை வளம் கூடும். மளிகை பொருட்கள், காய்கறிகள், வாகன உதிரி பாகங்கள் கட்டுமான பொருட்கள் விலை தாறுமாறாக உயர லாம்.

    தங்கம்*வ-ள்ளி உயர்ந்து கொண்டே செல்லும். சொத்து சுக வாகனங்கள் விலைகளும் உயர்ந்து கொண்டே இருக்கும். செவ்வாய் பகவான் _ சனி பகவான் காரணமாக கண்ணுக்குத் தெரியாத பூச்சி நோய் தொற்றுகளும் வரலாம். வளர்ச்சிகள் கூடி னாலும், உடல் நலத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வருடமாக இருக்கிறது.

    29.3.2023 சனிப்பெயர்ச்சிக்கு பிறகு ஓரளவு நல்ல மாற்றங்கள் ஒரு சிலருக்கு வரலாம். 22.4 2023 குரு பெயர்ச்சிக்குப் பிறகு சிம்மம், துலாம், தனுசு ராசிக்காரர்கள் யோகம் பெறலாம். 8.10.2023 ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு மேஷம், துலாம் ராசிக்கா ரர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். தினசரி காலை யில் சூரிய வழிபாடும், குல தெய்வ வழிபாடும் நல்ல முன்னேற்றம் பெற உதவும் பரிகாரங்களாகும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×