ஷேக் ஹசீனாவுக்கு சிக்கல்.. போன வருடமே கணித்த ஜோதிடர்.. வைரலாகும் பதிவு

ஜோதிடரின் கணிப்பு தற்போது நடந்துள்ளது.கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Sheikh Hasina
Published on

வங்கதேசத்தில் ஏற்பட்டு உள்நாட்டு கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகி ஷேக் ஹசீனா, அந்நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். உலகத்தையை உற்று நோக்க வைத்துள்ள இச்சம்பவத்தில் மற்றொரு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபல ஜோதிடரான பிரசாந்த் கினி, ஷேக் ஹசீனாவுக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே கணித்து இருந்தார். அந்த வகையில், ஜோதிடரின் கணிப்பு தற்போது நடந்துள்ளது. இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே, ஷேக் ஹசீனாவை மே மற்றும் ஆகஸ்ட் 2024 மாதங்களுக்கிடையே கவனமாக இருக்குமாறு எச்சரித்து இருந்தார்.

இதுதொடர்பாக அவர், கடந்த ஆண்டு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், "ஆகஸ்ட் 2024 இல் ஷேக் ஹசீனா சிக்கலில் இருப்பார். மே, ஜூன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் 2024-இல் அவர் மீது கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்படலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அதே பதிவை மீண்டும் டேக் செய்த கினி, "ஆகஸ்ட் 2024-இல் ஷேக் ஹசீனாவுக்கு பிரச்சனை ஏற்படும் என்று கணித்திருந்தேன்," என்று எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com