என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோபிதா துலிபாலா"

    • படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
    • இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது.

    பா.ரஞ்சித் தற்பொழுது வேட்டுவம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதாநாயகனாக கெத்து தினேஷ் மற்றும் ஆர்யா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

    இப்படம் ஓரு மாடர்ன் கேங்க்ஸ்டர் டிராமாவாக உருவாக இருக்கிறது. மணிகண்டன் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

    இந்நிலையில் இப்படத்தில் முழு நேர கதாநாயகியாக சோபிதா துலிபாலா நடித்துள்ளார். இது தொடர்பான தகவலை படக்குழு அறிவித்துள்ளது. இவர் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

     

    • நடிகர் நாக சைதன்யா தற்போது ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • சமீபகாலமாகவே இவர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.

    தென்இந்திய சினிமாவின் பிரபல நடிகரான நாகசைதன்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கஸ்டடி' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.


    நாகசைதன்யா - சோபிதா துலிபாலா

    இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இடத்தில் இருவரும் நின்றிருந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்று ரசிகர்கள் சிலர் சொல்லி வந்தனர்.

    இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் சுரேந்தர் மோகன் என்பவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். சுரேந்தர் மோகன் என்பவர் லண்டனில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக இருக்கிறார். அவருடைய ஓட்டலுக்கு நாகசைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் உணவு சாப்பிட வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும் சுரேந்தர் மோகன், நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.


    நீக்கப்பட்ட புகைப்படம்

    அப்படி எடுத்தபோது பின்னால் சோபிதா துலிபாலா அமர்ந்து இருப்பது பதிவிவாகியிருக்கிறது. அவர் முகத்தை மறைக்க முயன்றாலும் முடியவில்லை. இந்த புகைப்படத்தை சுரேந்தர் மோகன் பெருமிதத்துடன் தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டார். இதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யம். நாகசைதன்யா தரப்பில் இருந்து இந்த புகைப்படத்தை நீக்கச்சொல்லியதன் பேரில், சுரேந்தர் மோகன் அதை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • நடிகை சமந்தா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் தனது முன்னாள் கணவர் நாகசைதன்யா காதல் குறித்து விமர்சித்துள்ளாதக செய்தி வெளியாகியுள்ளது.

    நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். கணவருடன் சமந்தா ஐதராபாத்தில் குடியேறி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். திருமண முறிவுக்கான காரணத்தை இதுவரை இருவரும் வெளியிடவில்லை.


    நாகசைதன்யா -சமந்தா

    சமந்தா -நாகசைதன்யா இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது.


    சோபிதா துலிபாலா -நாகசைதன்யா

    இந்நிலையில், நடிகை சமந்தா, "யார் யாருடன் உறவில் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. காதலின் மதிப்பை அறியாதவர்கள் எத்தனை பேருடன் பழகினாலும், டேட்டிங் செய்தாலும் கடைசியில் கண்ணீரில் தான் முடியும். குறைந்த பட்சம் அந்த பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவர் தன் நடத்தையை மாற்றிக்கொண்டு, பெண்ணைக் காயப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால், அது அனைவருக்கும் நல்லது" என நாகசைதன்யா -சோபிதா துலிபாலா உறவு குறித்து கூறியதாக தனியார் பத்திரிகை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    இந்த செய்தியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா 'தான் இவ்வாறு கூறவில்லை' என்று மறுத்துள்ளார். சமந்தாவின் இந்த பதிவிற்கு ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் இந்த பதிவை வைரலாக்கி வருகின்றனர்.


    • பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமானவர் சோபிதா துலிபாலா.
    • இவர் தற்போது பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

    மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் வானதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றவர் சோபிதா துலிபாலா. இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் அடிக்கடி காதல் வதந்திகளிலும் சிக்கி வருகிறார்.


    இந்நிலையில், நடிகை சோபிதா துலிபாலா தான் அழகாக இல்லை என்று விமர்சித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "படங்களில் நடிப்பதற்கு முன்பு நான் விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு தேடினேன். அப்போது நான் வெள்ளையாக இல்லை. அழகாக இல்லை என்று எனக்கு முன்பே கூறினார்கள். அதற்காக நான் சோர்வடையவில்லை. எனக்கு கிடைத்த சிறிய கதாபாத்திரங்களிலும் என்னுடைய முழு திறமையையும் காண்பித்தேன். அந்த சிறிய கதாபாத்திரங்கள் தான் நிறைய கற்றுக் கொடுத்தன" என்று கூறினார்.

    • நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
    • கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.

    நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது. கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.

    இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சோபிதாவின் உறவு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என கணித்துள்ளார்.
    • ஜோதிடருக்கு எதிராக காட்டமான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    திருப்பதி:

    நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

    இவர்களுடைய விவாகரத்துக்கு சந்திரசேகர ராவின் மகன் என்டி.ராமராவ் தான் காரணம் என பெண் மந்திரி ஒருவர் சர்ச்சை எழுப்பினார். இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்தார்.

    இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    சோபிதா துலிபாலா வீட்டில் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் தற்போது தொடங்கி விட்டன.

    இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் 2027-ம் ஆண்டு இறுதிக்குள் நாக சைதன்யா, சோபிதா துலி பாலா விவாகரத்து செய்வார்கள். 2027-ம் ஆண்டு வேறொரு பெண்ணால் நாக சைதன்யா மற்றும் சோபிதாவின் உறவு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் என கணித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். திருமணத்திற்கு முன்பே விவாகரத்து செய்வார்கள் என வீடியோ வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

    அவர்கள் ஜோதிடருக்கு எதிராக காட்டமான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளனர்.


    இந்த புகாரை ஏற்ற தெலுங்கானா ஐகோர்ட்டு இது குறித்து விசாரணை நடத்த மகளிர் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. ஒரு வாரத்திற்குள் விசாரணை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு சந்திப்பேன் என ஜோதிடர் தெரிவித்துள்ளார். 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாரம்பரிய முறைப்படி திருமணத்தை நடத்துவதற்கு இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர்.
    • திருமணத்தில் நெருங்கியவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாகர்ஜுனா. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா. இவர் 2009-ம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த 'ஜோஷ்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை தந்துள்ளார். இன்று தெலுங்கு திரையுலங்கில் முக்கிய பிரபலமான நாகசைதன்யா, நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 4 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

    இந்த நிலையில், நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமணம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த திருமணம் சுமார் 8 மணி நேரம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

    பாரம்பரிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்துவதற்கு இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்த திருமணத்தில் நெருங்கியவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவித்துள்ளார்கள்.

    இதனிடையே நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை நெட்பிளக்ஸ் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

    முன்னதாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமண ஒளிபரப்பை வாங்கிய நெட்பிளக்ஸ் கடந்த 18-ந்தேதி அன்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×