மீண்டும் சர்ச்சையில் சிக்கிய காதல்..? சமூக வலைதள பதிவை நீக்க சொன்ன நாகசைதன்யா..

நடிகர் நாக சைதன்யா தற்போது ‘கஸ்டடி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.சமீபகாலமாகவே இவர் நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசு பரவி வருகிறது.
நாகசைதன்யா
நாகசைதன்யா
Published on

தென்இந்திய சினிமாவின் பிரபல நடிகரான நாகசைதன்யா, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கஸ்டடி' திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபகாலமாகவே நடிகர் நாகசைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

நாகசைதன்யா - சோபிதா துலிபாலா

இவர்கள் இருவரும் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகசைதன்யாவின் புதிய வீட்டில் ஒன்றாகக் காணப்படட்டதாகவும் அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு லண்டனில் ஒரு இடத்தில் இருவரும் நின்றிருந்த புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்று ரசிகர்கள் சிலர் சொல்லி வந்தனர்.

இந்நிலையில், தற்போது சமூக வலைதளத்தில் சுரேந்தர் மோகன் என்பவர் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். சுரேந்தர் மோகன் என்பவர் லண்டனில் பிரபலமான ஓட்டல் ஒன்றில் சமையல் கலைஞராக இருக்கிறார். அவருடைய ஓட்டலுக்கு நாகசைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் உணவு சாப்பிட வந்திருக்கிறார்கள். அவர்களைக் கண்டதும் சுரேந்தர் மோகன், நாக சைதன்யாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நீக்கப்பட்ட புகைப்படம்

அப்படி எடுத்தபோது பின்னால் சோபிதா துலிபாலா அமர்ந்து இருப்பது பதிவிவாகியிருக்கிறது. அவர் முகத்தை மறைக்க முயன்றாலும் முடியவில்லை. இந்த புகைப்படத்தை சுரேந்தர் மோகன் பெருமிதத்துடன் தனது இணையப் பக்கத்தில் பதிவிட்டார். இதன் பிறகு நடந்ததுதான் சுவாரஸ்யம். நாகசைதன்யா தரப்பில் இருந்து இந்த புகைப்படத்தை நீக்கச்சொல்லியதன் பேரில், சுரேந்தர் மோகன் அதை நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com