search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை அறிவிப்பில் குழப்பமா? 18-ந் தேதி கொண்டாடப்படும் என ஜோதிடர்கள் தகவல்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை அறிவிப்பில் குழப்பமா? 18-ந் தேதி கொண்டாடப்படும் என ஜோதிடர்கள் தகவல்

    • விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது.
    • அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 விஷயங்களின் தொகுப்புகளை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கியம் என பஞ்சாங்கத்தில் 2 வகை உண்டு.

    தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18-ந் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19-ந் தேதியும்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.

    ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது. எதன் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ஜோதிடர்கள், பஞ்சாக கணிப்பாளர்கள், ஆன்மீக வாதிகள்தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறியிருப்ப தாவது:-

    விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை.

    செப்டம்பர் 18-ந் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி 19-ந் தேதி காலை 11.44 மணிக்கு முடிவடைகிறது.

    இந்த சதுர்த்தி நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    தமிழகத்தில் 18-ந் தேதி தான் விநாயகர் சதுர்த்தி இதில் எந்த மாற்றமும் இல்லை. வட மாநிலங்களில் 19-ந் தேதி கொண்டாடப்படலாம். அங்கு அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி அன்று விளாம்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, தேங்காய் கொண்டு செய்த பலகாரங்கள் படையலிட்டு விநாயகரை வழிபடுங்கள்.

    விநாயகரை வழிபட்டால் செல்வம் பெருகும், பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.

    இதேபோல் மேலும் ஜோதிடர்கள் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

    சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் செப்.18-ந் தேதி தேரோட்ட மும், மறுநாள் தீர்த்தவாரியும் நடக்கிறது.

    காஞ்சி சங்கர மடத்தில் பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் பங்கேற்ற சதஸ் எனும் கூட்டம் நடந்தது. இதில் செப்.18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த் தியை கொண்டாடு வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து கோவில்களிலும் செப்டம்பர் 18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளைதான் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜோதி டர்கள், ஆன்மீகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×