என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.
    • அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் பிரிக்ஸ் நாடுகள் உயிர்வாழ முடியாது.

    இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தினார். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதால் உக்ரைன் போருக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா எடுத்தது.

    இவ்விவகாரத்தில் இந்தியாவை டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

    இந்த நிலையில் பீட்டர் நவரோ மீண்டும் இந்தியா மீது கடும் விமர்சனத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்தியா, சீனா, ரஷியாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பு நாடுகள், அமெரிக்க வர்த்தகம் இல்லாமல் உயிர்வாழ முடியாது. இந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவிற்கு விற்காவிட்டால் உயிர்வாழ முடியாது. அவர்கள் பொருட்களை அமெரிக்காவிற்கு விற்கும்போது தங்கள் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சும் காட்டேரிகள் போல் செயல்படுகிறார்கள்.

    பிரிக்ஸ் அமைப்பு எவ்வாறு ஒன்றாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் வரலாற்று ரீதியாக அவர்கள் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள். வரிகளை விதிப்பதில் இந்தியா மகாராஜாபோல் உள்ளது. அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா மிக உயர்ந்த வரிகளை விதிக்கிறது. உக்ரைனை ரஷியா ஆக்கிரமிப்பதற்கு முன்பு இந்தியா ஒருபோதும் ரஷிய எண்ணெயை வாங்கியதில்லை. போருக்கு பிறகுதான் ரஷிய எண்ணெய் வாங்க தொடங்கியது.

    ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியாவுடன் எங்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளது. எங்கள் சந்தைகள் தேவை என்பதை உணர்ந்து இந்த நாடுகள் எங்களுடன் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன. இந்தியா ஒரு கட்டத்தில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியா விரைவில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வரும் என்று நம்புகிறேன். ரஷியா, சீனாவுடன் கூட்டணி வைப்பது இந்தியாவுக்கு நல்ல முடிவை தராது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவுடனான உறவு சிறப்பாக உள்ளது என்றும் மோடி எப்போதும் எனது நண்பர்தான் என்றும் கூறினார். ஆனால் அவரது ஆலோசகர் தொடர்ந்து இந்தியாவை கடுமை யாக விமர்சித்து வருகிறார்.

    • விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீதான மோகம் குறையாது.
    • சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கூட வருங்காலங்களில் அதை ஒரு முதலீடாகவே கருதுவார்கள்.

    தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து சூப்பர் சரவணா ஸ்டோர் நிர்வாக இயக்குனர் ஆர்.சபாபதி கூறியதாவது:-

    வரலாறு காணாத தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தக கொள்கை முடிவு ஆகும். அவரது வரி விதிப்பு மாற்றத்தால் உலக அளவில் தங்க வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அவரது செயல்பாட்டால் இந்திய முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் அமெரிக்காவில் செய்யும் முதலீட்டுக்கு பதிலாக வேறு முதலீட்டுக்கு மாறி விட்டனர்.

    அமெரிக்காவில் பல்வேறு முதலீடு செய்த இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், தங்கத்தில் முதலீடு செய்தால் சிறப்பாக இருக்கும் என தங்கள் முதலீட்டை திருப்பி உள்ளனர். தமிழக மக்களை பொறுத்தவரையில் தங்க நகைகளை சேமிக்கும் பழக்கமும், நகைகளாக அணியும் பழக்கமும் அதிகமாக உள்ளது. இதனால் தற்போது தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருகிறது.

    இந்தியாவில் ஷேர் மார்க்கெட், மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்தவர்கள் இப்போது தங்கத்துக்கு மாறி விட்டனர். 90 சதவீதம் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும். குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. அடுத்து வருகிற 15 முதல் 18 மாதத்திற்குள் தங்கத்தின் விலை 2 மடங்காக உயரும்.

    தற்போது பவுன் ஒரு லட்சமாக இருக்கும் தங்க நகைகள் விலை ரூ. 2 லட்சமாக உயர வாய்ப்புகள் உள்ளன. இதனால் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்த மக்கள் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்பதாலும் தங்க நாணயம், மற்றும் தங்க பிஸ்கட்டில் முதலீடு செய்தால் பாதுகாப்பாக இருப்பதாகவும் கருதுகிறார்கள். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சாதாரண மக்கள் மற்றும் நடுத்தர மக்களின் பார்வை அதன் மீது திரும்பி உள்ளது. 2 கிராம் தங்கம் வாங்குபவர்கள் இந்த விலை ஏற்றத்தால் ஒரு கிராம் வாங்குவார்கள். இதனால் அவர்களுக்கு பாதிப்பு இல்லை. அது ஒரு முதலீடு தான்.

    இந்த விலை ஏற்றத்தால் தங்கத்தின் மீதான மோகம் குறையாது. தேவையும் குறையாது. மாறாக தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் நிலை உள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்கு நகை வாங்குபவர்கள் கூட வருங்காலங்களில் அதை ஒரு முதலீடாகவே கருதுவார்கள். தங்க வியாபாரிகளுக்கோ, நகை கடைகளுக்கோ இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உலக அளவில் தனி நபர் மூலதனம் அதிகரித்து உள்ளதால் தொழில்களும் பாதிக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:-

    அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கையால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் பெரும்பாலானவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை மேலும் உயரும் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறைய பேர் தங்கம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர்.
    • நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர்.

    பெரு நாட்டில் வளர்ப்பு நாய் வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்ததால் குடும்பமே உயிர் தப்பிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர். இதனை பார்த்த உரிமையாளரின் வளர்ப்பு நாய், தனது உயிரை பணயம் வைத்து வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்தது.

    நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
    • இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    காத்மண்டு:

    நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

    நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது. இதன் எதிரொலியாக, நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டது.

    இதற்கிடையே, நேபாள பிரதமர் சர்மா ஒலி பதவி விலகக் கோரி இளைஞர்கள் 2 ஆம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் மற்றும் பிரதமர் இல்லங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். பாராளுமன்ற கட்டிடத்துக்கு தீ வைத்தனர். இதயடுட்து, பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது.

    இதேபோல், விமான நிலையம் அருகிலும் தீ வைத்ததால், விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

    • தமிழ்நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?
    • ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது?

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    2021, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலின்போது சுமார் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்துவிட்டு, தற்போது 90 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம், 95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என்று மேடைதோறும் பச்சைப் பொய் பேசி,

    மக்களின் காதுகளில் பூச்சூடி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் பெயிலியர் அரசு சதவீத கணக்கில் 70 சதவீதம் என்றும், 77 சதவீதம் என்றும் முதலீடுகளை ஈர்த்தது பற்றி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், தொழில்துறை அமைச்சரும் முதலீடு வந்துவிட்டது போலவும், வேலை வாய்ப்பு இலட்சக்கணக்கில் உருவாகிவிட்டது போலவும் (எக்ஸ் வலைதள) அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.

    * 2022, மார்ச் 24 முதல் 29 வரை துபாய்க்கு முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோபல் ஸ்டீல் 1000 கோடி, லூலூ மால் 3,500 கோடி, ட்ரான்ஸ்வோல்ட், வைட்ஹவுஸ் மற்றும் ஆஸ்டர்டாம் ஹெல்த் கேர் என்று ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 6,100 கோடி ரூபாய்க்கு முதலீடு என்று அறிக்கை வெளியிட்டார்கள். இதன்படி ஆறு நிறுவனங்களும் தொழிலை ஆரம்பித்து விட்டனவா? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * இரண்டாவதாக, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு ஒன்பது நாள் பயணம் மேற்கொண்டு 3,233 கோடி ரூபாய் முதலீடு பெற்று, 5000 வேலைவாய்ப்பை உருவாக்கப் போட்ட 13 ஒப்பந்தங்களில் எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * மூன்றாவதாக, ஸ்பெயினுக்கு 2024-ஆம் ஆண்டு ஜனவரி 28 முதல் பிப்ரவரி 7 வரை சென்று 3,440 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்தோம் என்றும் கூறினார்கள். அந்த முதலீட்டில் எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * 4-ம் முறையாக 2024, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 12 வரை 17 நாட்கள் அமெரிக்காவுக்கு வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 11,516 நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 7,618 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டதாக போடப்பட்டு அறிக்கை வெளியிட்டார்கள். எத்தனை பேருக்கு வேலை கிடைத்துள்ளது? முழு விவரம் என்ன? - யாருக்கும் தெரியாது.

    * தற்போது ஸ்டாலின், ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஐந்தாவது முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு 15,516 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 17,613 வேலைவாய்ப்பை உருவாக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இவைகளெல்லாம், இவர்களின் எக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் விவரங்கள்தான்.

    * இதைத் தவிர, உலக முதலீட்டாளர் மாநாடு 2024, ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட்டு 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒப்பந்தங்கள் மேற்கொண்டதாகவும், அதன்மூலம் 14.5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

    * விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி, திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின் 9.74 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து 27 தொழிற்சாலைகள் தொடங்கி 31 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.

    * தொழில் துறை அமைச்சரோ, 2025, மே மாதம் 12-ஆம் தேதி தனது அறிக்கையில் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்து 27 ஆயிரத்து 547 கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்த்து, 32.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 70 சதவீதம் முதலீட்டைப் பெற்றுவிட்டதாகக் கூறினார்.

    * கடைசியாக ஸ்டாலின் 30.8.2025 அன்று வெளிநாடு செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 922 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்து, 32.81 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி 77 சதவீதம் செயல்முறைப்படுத்திவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

    * இவர்கள் கூறுவதைப் போல் 10.62 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள், 922 ஒப்பந்தங்கள் யாருடன் போடப்பட்டது? 32.81 லட்சம் நபர்களுக்கு யார் வேலைவாய்ப்பு தந்தார்கள்? இவற்றில் உண்மையாக நடைமுறைக்கு வந்த ஒப்பந்தங்கள், செயல்பாட்டிற்கு வந்த தொழிற்சாலைகள், உண்மையில் வேலைவாய்ப்பு பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை என்ன என்று யாருக்கும் தெரியாது. எக்ஸ் தளத்தின் மூலமே விளம்பரம் தேடும் விடியா திமுக பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு, இந்த விவரங்களை ஏன் முழுமையாக வலைதளத்தில் வெளியிடுவதில்லை.

    * மேலும் ஸ்டாலின், ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக தற்போது அறிவித்துள்ள நிறுவனங்களில் பல ஏற்கெனவே தமிழகத்தில் தங்களது தொழில்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே இங்கே நடைபெற்று வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தங்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று கையொப்பம் வாங்கியதற்கு பதிலாக, இங்கேயே ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கலாமே என்று தொழில் துறையினர் கூறுகின்றனர்.

    * இதில் 2021-க்கு முன்பு எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட முதலீடுகளையும், திமுக தனது சாதனையாகக் கூறிக்கொள்வதுதான் விந்தை. எனவேதான், நாங்கள் வெள்ளை அறிக்கை கேட்கிறோம்.

    * திமுக ஆட்சியின் முதலீடுகளின் நிலை பற்றி ஏன் அறிக்கையாக வெளியிடுவதில்லை? குறைந்தபட்சம் சட்டமன்றத்தில்கூட இதுபற்றி அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில்லையே ஏன்? இந்த மொத்த விவரங்கள்கூட இவர்கள் எக்ஸ் வலைதளத்தில் வெளியிடும் செய்தியில் இருந்துதான் நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.

    * மத்திய அரசு வெளிநாட்டு மூலதனம் பற்றிய ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் 2022-23-ல் தமிழ்நாடு பெற்ற அந்நிய முதலீடு வெறும் 17,247 கோடி ரூபாய் என்றும், 2023-24ல் 20,157 கோடி ரூபாய் என்றும், 2024-25-ல் 31,103 கோடி ரூபாய் தான் என்றும், ஆகமொத்தம் 3 ஆண்டுகளில் 2025 மார்ச் மாதம் வரை 68,507 கோடி ரூபாய் மட்டுமே மூலதனமாகப் பெற்று, ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. தமிழ்நாட்டை விட பல மடங்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் எல்லாம் பெற்றுள்ளன. டெல்லியும், தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலிடம் என ஏன் பொய்ப் பிரச்சாரம் செய்ய வேண்டும்?

    * அப்படியென்றால், திமுக அரசு கொடுக்கும் புள்ளி விபரம் ஒரு கற்பனையான புள்ளி விவரமா? என்று பொருளாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதில், விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் உருவாக்கப்பட்ட 32.81 லட்சம் வேலைவாய்ப்புகள் எங்கே உருவாக்கப்பட்டுள்ளது என்று படித்து முடித்து வேலை தேடி அலைந்துகொண்டிருக்கும் வேலையில்லா இளைஞர் பட்டாளம் எழுப்பும் கேள்வியிலேயே அந்த பதில் உள்ளது.

    ஐந்து முறை வெளிநாட்டுப் பயணங்கள், முதலீட்டாளர் மாநாடு என்று எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டது? எவ்வளவு முதலீடு பெற்றுள்ளோம்? எவ்வளவு தொழில்கள் துவங்கப்பட்டுள்ளன? எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன? என்பதை தைரியமாக தமிழக தொழில் துறை இணையதளத்திலோ, அல்லது தமிழ்நாடு முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் இணையதளத்திலோ வெளிப்படையாக ஏன் வெளியிடுவதில்லை? அதை விட்டுவிட்டு எக்ஸ் தனி வலைதளத்தில் தொழில்துறை மந்திரியும், பொம்மை முதலமைச்சரும் தொடர்ந்து வெற்று விளம்பரம் தேடுவது, இந்த அரசு ஒரு பொய், பித்தலாட்ட அரசு என்பதையே உறுதி செய்கிறது.

    எனவேதான் ஸ்டாலினிடம், உங்கள் ஆட்சியில் தொழில் முதலீடுகள் குறித்தும், துவங்கப்பட்ட தொழில்கள் குறித்தும், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்தும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக வெள்ளை அறிக்கை கேட்கிறேன். இனியும் எக்ஸ் வலைதளத்தில் பொய் புரட்டு புள்ளிவிவரங்களை அள்ளிவிட்டு தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்ற வேண்டாம் என்றும், தொழில் முதலீடுகள் குறித்து 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், வெற்று விளம்பர முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.  

    • பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன்.
    • 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

    கோவை:

    துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி, கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க சார்பில், கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார். விழாவில் தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

    பின்னர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சரித்திரம் முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று. துணை குடியரசு தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவர் தான் துணை குடியரசு தலைவராக பதவி ஏற்க உள்ளார்.

    இதற்காக இன்று கோவை பா.ஜ.க. சார்பில் பல்வேறு கோவில்களில் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்காகவும், பிரதமர் நரேந்திர மோடி நலனுக்காகவும் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. கோவையில் மட்டும் 25 கோவில்களில் இந்த பூஜை நடக்கிறது.

    பா.ஜ.க. கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன். இந்திய தேசத்தின் துணை குடியரசு தலைவராக, தமிழராக அவரது பணி சிறக்க வேண்டும். மக்கள் சார்ந்த பணி பா.ஜ.க தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

    அதே நேரத்தில் தமிழ், தமிழர் என்று பேசுகின்ற தி.மு.க துரோகம் செய்து கொண்டு இருக்கிறார்கள். முன்பு ஜனாதிபதியாக பிரதிபா பாட்டில் தேர்வு செய்யப்பட்டபோது மும்பையை சேர்ந்த மாநில கட்சிகளும், தற்போது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது ஒடிசா மாநில கட்சிகளும் ஒற்றுமையாக அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்காமல், தி.மு.க. தனது செயலினால் சிறுமைப்படுத்துகிறது.

    தேசிய ஜனநாயககூட்டணியில் பல்வேறு கட்சிகள் இருக்கிறார்கள். கூட்டணியை பலப்படுத்த வேண்டும். அதற்காக அனைவரையும் ஓரணியில் சேர்க்க வேண்டும். அதனை நான் பா.ஜ.கவும் நினைக்கிறது. அதற்கு ஏற்ப செயல்பட்டு கொண்டும் இருக்கிறது.

    அ.தி.மு.க.வுக்குள் நிலவும் பிரச்சனை கூட்டணியின் வெற்றியை பாதிக்காது. அந்தந்த கட்சி பிரச்சனைகளை அந்தந்த கட்சி தலைவர்களே சரி செய்து விடுவார்கள்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அதற்காக பல முயற்சிகளை எடுத்து வருகிறோம். கூட்டணிக் கட்சி எண்ணிக்கையையும் தாண்டி ஒரு கணக்கு இருக்கிறது. அந்த கணக்கு தேர்தல் வெற்றி தரும். கூட்டணி குழப்பங்களும் சரி செய்யப்படும்.

    கே.ஏ.செங்கோட்டையன், ஹரித்துவார் புனிதமான இடம் என்பதால் அங்கு சென்று உள்ளார். அ.தி.முகவில் பிரச்சனை என்றால் டெல்லி சென்று பா.ஜ.க தலைவர்களை சந்திப்பதாக கேட்பது தவறு. செங்கோட்டையன் அமித்ஷாவை பார்த்தார் என்பதற்கு ஆதாரம் உள்ளதா?.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜ.க. நிர்வாகிகள் சுதாகர், வேலுமயில், ராஜன், அர்ஜூனன், மணிகண்டன், கிருஷ்ண பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பண்ருட்டி மற்றும் கடலூரில் நடைபயணம் செல்லும் அன்புமணி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.
    • புவனகிரியில் நடைபெறும் நடைபயணத்தில் கடலூர் மீனவர்களை சந்திக்கிறார்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் தேர்தல் பிரசார நடை பயணத்தை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார்.

    திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் 4 கட்டங்களாக பல்வேறு மாவட்டங்களில் நடந்தது. மீண்டும் தொடங்குகிறார். அடுத்த கட்டமாக மீண்டும் தனது நடைபயணத்தை டாக்டர் அன்புமணி கடலூரில் நாளை (10-ந்தேதி) தொடங்குகிறார்.

    நாளை பண்ருட்டி மற்றும் கடலூரில் நடைபயணம் செல்லும் அன்புமணி விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார். நாளை மறுநாள் (11-ந் தேதி புவனகிரியில் நடைபெறும் நடைபயணத்தில் கடலூர் மீனவர்களை சந்திக்கிறார். 12-ந் தேதி நெய்வேலி இந்திரா நகர், விருத்தாச்சலத்தில் நடைபயணம் செல்லும் அன்புமணி வடலூர் ஞானசபை செல்கிறார். இந்த நடைபயணத்தின்போது தி.மு.க.வின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அடங்கிய ஆவண தொகுப்பு புத்தகத்தையும் வீடு வீடாக வழங்குகிறார்கள். 

    மலைவாழ் மக்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ்

    கதைக்களம்

    ஒரிசா மலைப்பகுதிகளில் காட்டி என்று அழைக்கப்படும் மலைவாசிகள் உயர் ரக கஞ்சா பயிரிட்டு, அதை சமவெளி பகுதிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். அடிமை வாழ்க்கை வாழும் காட்டி சமூகத்தில் பிறந்த அனுஷ்காவும், விக்ரம்பிரபுவும் மற்றவர்களை போல கஞ்சா சுமக்கும் வேலையை செய்கிறார்கள்.

    ஒரு போலீஸ் ரெய்டில் தந்தையை இழக்கும் விக்ரம்பிரபு லேப் டெக்னிஷியனாக மாறுகிறார். ஒரிசா பஸ் கன்டக்டராக அனுஷ்கா மாறுகிறார். இருவரும் திருமணம் செய்ய இருக்கும் நேரத்தில் விக்ரம் பிரபுவை கொடூரமாக கொலை செய்து, அனுஷ்காவை மானபங்கபடுத்துகிறார்கள் வில்லன்களான அண்ணன், தம்பி ரவிந்திரவிஜய், சைதன்யாராவ்.

    இதனால் கோபமடையும் அனுஷ்கா வில்லன்களை பழிவாங்க நினைக்கிறார். மேலும் கஞ்சா சுமக்கும் தொழிலை விட்டு, காட்டிகள் நல்ல பாதைக்கும் திரும்ப வேண்டும் என ஆசைப்படுகிறார். இறுதியில் அனுஷ்கா நினைத்தது நடந்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நடிகர்கள்

    படத்தில் நாயகியாக நடித்திருக்கும் அனுஷ்கா, ஆரம்பத்தில் துறுதுறு பெண்ணாக நடித்து பின்னர் எதிரிகளை துவம்சம் செய்யும் பெண்ணாக மாறி அசத்தி இருக்கிறார். காதலன் கொல்லப்பட்ட பிறகு காரணமானவர்களை தேடி சென்று ஆக்ரோசமாக கொல்லும் காட்சிகள் சிலிர்க்க வைக்கிறது.

    அனுஷ்கா காதலனாக, காட்டி மக்களுக்கு நல்லது செய்பவராக நன்றாக நடித்து இருக்கிறார் விக்ரம்பிரபு. இடைவேளை காட்சியில் அவரின் உருக்கமான நடிப்பு படத்துக்கு பலம். சைதன்யாராவ், ரவீந்திரவிஜய் வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரியாக வரும் ஜெகபதிபாபு மனதில் நிற்கிறார்.

    இயக்கம்

    ஒரிசா பின்னணியில் காட்டிகள் என்ற மலைவாழ் மக்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கிரிஷ். மலைவாழ் மக்களை அடிமையாக்கி பலர் சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதை சொல்லி இருக்கிறார். மக்கள் சந்திக்கும் துயரங்களை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். முழுக்க முழுக்க அனுஷ்காவை முன்னிலைப்படுத்தி கதையை நகர்த்தி இருப்பதால் பல சீன்கள் போரடிக்கின்றன.

    ஒளிப்பதிவு

    மலைகாட்சிகள், கஞ்சா கடத்தும் காட்சிகள் என தத்ரூமாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மனோஜ்.

    இசை

    நாகவல்லி வித்யாசாகர் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சிறப்பு.

    தயாரிப்பு

    First Frame என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

    ரேட்டிங்- 2.5/5

    • பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
    • கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    கர்நாடகத்தில் இரண்டாவது முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் மேற்கொள்ளவிருக்கும் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அதற்கான பயிற்சிகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கர்நாடக மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு காட்டும் அக்கறையும், தீவிரமும் பாராட்டத்தக்கவை.

    கர்நாடகத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் முதல் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அண்மைக்கால தரவுகளைத் திரட்டும் நோக்குடன் இரண்டாவது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வரும் 22-ஆம் தேதி முதல் கர்நாடக அரசு மேற்கொள்ளவுள்ளது. 7 கோடி மக்கள் தொகை கொண்ட கர்நாடகத்தில் மொத்தம் 15 நாள்களில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்படவுள்ளது.

    இதற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், கணக்கெடுப்புப் பணியில் மொத்தம் 1.60 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மொத்தம் 2 கோடி குடும்பங்களிடம் நடத்தப்படவுள்ள இந்தக் கணக்கெடுப்பில் 60 வினாக்கள் கேட்கப்படவுள்ளன. கர்நாடக மக்களுக்கு அனைத்து வகையான சமூகநீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

    ஆனால், இங்கு தமிழ்நாட்டில்....?

    பெரியாரின் பேரன் என்று கூறிக் கொள்பவர்களின் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று கூறியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இல்லாத அதிகாரத்தைக் கூட போராடிப் பெற்று செயல்படுத்த வேண்டியது தான் மக்கள் நல அரசின் கடமை. ஆனால், திமுக அரசு இருக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறது. இதற்குக் காரணம்... தமிழகத்தில் யாருக்கும் சமூகநீதி கிடைத்துவிடக் கூடாது என்ற தீய எண்ணம் தான்.

    கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக தனியாகவே ஒரு கணக்கெடுப்பை 63 நாள்களில் அம்மாநில அரசு நடத்தி முடித்துள்ளது. இவ்வளவையும் சுட்டிக்காட்டியும் கூட, மு.க.ஸ்டாலின் அரசு அசைந்து கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் திமுக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாததை விட பெரிய கொடுமை என்னவென்றால், சமூகநீதியில் அக்கறை இருப்பதைப் போல நடிப்பது தான்.

    தமிழ்நாட்டின் வரலாற்றில் கடந்த 37 ஆண்டுகளில் 3 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் வாய்ப்பு கிடைத்தது. முதல் இரு வாய்ப்புகளும் பயன்படுத்தப்பட்டிருந்தால் சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றிருக்கும். ஆனால், மூன்று வாய்ப்புகளையும் சிதைத்து சமூகநீதியை குழிதோண்டி புதைத்தது திமுக அரசு தான். அத்தகைய சமூகநீதி பாவங்களை செய்த திமுக, இனியாவது சமூகநீதி துரோகத்தையும், தூக்கத்தையும் களைந்து விட்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

    சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னையில் நடைப்பெற்றது.

    சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயிலில் உள்ள பாக்கியலட்சுமி கல்யாண மண்டபத்தில் சமீபத்தில் நடைபெற்றது.

    கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத்,செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரக தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

    வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்களையும், துணை முதலமைச்சர் மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களையும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன் அவர்களையும் சமீபத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

    புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக

    திரு. பூச்சி முருகன் அவர்கள் தலைவர், குடிசை மாற்று வாரியம் மற்றும் துணைத் தலைவர், நடிகர் சங்கம்;

    திரு. பிரபாகர ராஜா அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்,

    விருகம்பாக்கம்;

    டத்தோ. நடிகர் திரு. ராதாரவி அவர்கள்

    தலைவர், தென்னிந்திய சின்னத்திரை மற்றும் திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம்;

    இயக்குநர் திரு. பேரரசு அவர்கள்,

    செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்;

    திரு. காரம்பாக்கம் கணபதி அவர்கள்,

    மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்;

    திரு. R.K. செல்வமணி அவர்கள்

    தலைவர், FEFSI;

    நடிகர் திரு. S.Ve. சேகர் அவர்கள்,

    முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்;

    திரு. மங்கை அரிராஜன் அவர்கள்

    சின்னத்திரை கூட்டமைப்பு தலைவர்;

    டாக்டர். திரு. ஜாக்குவார் தங்கம் அவர்கள்,

    தலைவர், கில்டு தயாரிப்பாளர் சங்கம்;

    திருமதி. சுஜாதா விஜயகுமார் அவர்கள்,

    தலைவர், தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;

    திரு.M.E.சேகர் MC அவர்கள்,

    சென்னை பெருநகர மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்;

    திரு. லியாகத் அலிகான் அவர்கள்,

    செயளாலர், தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்;

    திரு. உதயசங்கர் அவர்கள்,

    தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;

    திருமதி. ரத்னா லோகேஸ்வரன் MC அவர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி கல்விக் குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளர்களாக

    திரு. A.C. சண்முகம் அவர்கள்,

    நிறுவனர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;

    திரு. தமிழ்செல்வன் அவர்கள்,

    நிறுவனர், சேலம் ஆர் ஆர் பிரியாணி;

    திரு. ACS. அருண்குமார் அவர்கள், தலைவர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;

    ஆன்மிக சொற்பொழிவாளர் முருகன் அருள் திரு. ஜெயம் SK கோபி அவர்கள்

    நடிகர், தயாரிப்பாளர்;

    திரு. மங்கை அரிராஜன் அவர்கள், தலைவர்,

    தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;

    திரு. கோபி பீம்சிங் அவர்கள்,

    செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;

    திரு. அறந்தாங்கி சங்கர் அவர்கள், பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம்;

    திரு.ராஜா வெங்கையா அவர்கள்,

    தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;

    திரு. ரமேஷ் அவர்கள், செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;

    திரு. மூர்த்தி அவர்கள்,

    பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;

    திரு. தாமஸ் கென்னடி அவர்கள்,

    தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;

    திரு. பெருமாள் நெர் அவர்கள்,

    செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;

    திரு. தர்மலிங்கம் அவர்கள்,

    பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம்;

    திரு. கஜபதி அவர்கள்,

    தலைவர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;

    திரு. சுரேஷ் அவர்கள்,

    செயலாளர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;

    திரு. நரசி சுதர்சன் அவர்கள்,

    பொருளாளர், தமிழ்நாடு சின்னத்திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;

    திரு. சரவணன் அவர்கள்

    நிறுவனர், ஒ.எஸ்.ஈவன்ட்ஸ்;

    நடிகர் மேட்டூர். திரு. தணிகாசலம் அவர்கள்;

    திரு. பாலசுப்ரமணி அவர்கள், நிறுவனர். பி.எஸ்.ராக்ஸ் கிரியேஷன்ஸ்;

    திரு.ராப்ஸ் பிரசாத் அவர்கள், நடிகர், நிர்வாக தயாரிப்பாளர்;

    திரு. நல்லதம்பி அவர்கள்

    உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.
    • பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3,347 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் 106 புதிய வழித்தடங்களை கண்டறிந்து அதில் 409 மாநகர பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 74 வழித்தடங்களில் 123 பஸ்களுடன் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் தினமும் 32 லட்சம் பயணிகள் மாநகர பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையில் மொத்தம் 4,400 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இந்த பஸ் நிறுத்தங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்படுத்தப்பட்டவை ஆகும்.

    அதன் பிறகு சென்னை நகரம் எவ்வளவோ மாற்றம் கண்டுள்ளது. சென்னையில் தற்போது 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் கீழ் 3 வழித்தடங்களில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சாலைகள் தோண்டப்பட்டு வருகின்றன. பல சாலைகளில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகில் இருக்கும் சில பஸ் நிறுத்தங்களில் சாலைகள் குறுகலாக மாறி விட்டன. இதனால் அந்த இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சென்னையில் பல இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் நடந்து வருகிறது. சாலையில் ஒருபுறம் அல்லது இருபுறமும் தோண்டப்பட்டு பணிகள் நடப்பதால் அந்த இடங்களிலும் சாலைகள் சுருங்கி விட்டன.

    சில இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளால் சாலைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த இடங்களில் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்வதும், பஸ்சுக்காக காத்திருப்பதும் சிரமமாக உள்ளது. இதுபோன்ற இடங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்களை நிறுத்த இடமில்லாமல் டிரைவர்கள் சற்று தூரம் தள்ளி சென்று நிறுத்துகிறார்கள். இதனால் பயணிகள் பஸ்சை பிடிக்க ஓடிச்சென்று ஏற வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல இடங்களில் புதிய மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் பயணிகளுக்கு பஸ் ஏறுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

    இதையடுத்து சென்னையில் நெரிசலான பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களை 50 முதல் 100 மீட்டர் தூரம் வரை மாற்றுவதற்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது. இதற்காக பயணிகள் மத்தியில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. எந்தெந்த இடங்களில் பஸ் நிறுத்தத்தை மாற்ற வேண்டும் என்பதை அறிய தனியார் நிறுவனம் மூலம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் பயணிகள் கூறும் கருத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள பல இடங்களிலும் பஸ் நிறுத்தங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
    • இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

    சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.

    இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.

    ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.

    ×