search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாதி பேருக்கு உரிமை தொகையை நிறுத்த திட்டம்: குஷ்பு சாடல்
    X

    பாதி பேருக்கு உரிமை தொகையை நிறுத்த திட்டம்: குஷ்பு சாடல்

    • தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.
    • இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-

    விதவிதமாக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதில் தி.மு.க.வும் காங்கிரசும் கைதேர்ந்த கட்சிகள்.

    கடந்த தேர்தலில் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என்றார்கள். வெற்றிபெற்று 2 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி வாய்ந்த பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள்.

    இப்போது கையில் அளவுகோலுடன் வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய போகிறார்களாம். அதில் அவர்கள் எதிர்பார்க்கும் தகுதி இருந்தால் மட்டும் கொடுப்பார்களாம். இல்லாவிட்டால் கொடுத்ததை நிறுத்தி விடுவார்களாம். எப்படியெல்லாம் கதை கதையாய் பொய் சொல்லுகிறார்கள்.

    தேர்தல் நேரத்திலேயே இப்படி தகுதியை சொல்லி அவர்களுக்கு மட்டும்தான் வழங்கப்படும் என்று கூறியிருக்கலாமே. பெண்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக அளந்து விட்டார்கள். பெண்களும் ஏமாந்தார்கள்.

    இதே போலத்தான் கர்நாடகத்திலும் அனைத்து பெண்களுக்கும் என்று அறிவித்து விட்டு இப்போது வீட்டுக்கு ஒரு பெண்ணுக்கு என்கிறார்கள். தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி என்றாலே ஏமாற்று கூட்டணி என்பதை மக்கள் புரிந்து இருப்பார்கள்.

    ஒற்றை கட்சி ஆட்சிக்கு மோடி திட்டமிடுவதாக கூறுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மறந்து விட்டதா? அல்லது அந்த கூட்டணியை பற்றி பேசவே பயமா?

    இந்தியா கூட்டணியில் மோடி போல் முடிவெடுக்கும் ஆற்றல் மிக்க தலைவர் ஒருவராவது உண்டா? எல்லோருமே குடும்பத்துக்காக உழைப்பவர்கள். நாட்டை பற்றி அவர்களுக்கு கவலை கிடையாது. காந்தி குடும்பம், கருணாநிதி குடும்பமும் வாழ வேண்டும். ஆள வேண்டும் இதுதான் கூட்டாட்சியா?

    இந்துத்துவா, சனாதனம் என்று சொல்லி மக்களை குழப்பப் பார்க்கிறார்கள். மோடிக்கு வாக்களித்ததும், இனி வாக்களிக்க போவதும் அனைத்து தரப்பு மக்களும் தான்.

    சனாதன வெறுப்பு பற்றி பேசும் தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சனாதனிகளான இந்துக்கள் ஓட்டு எங்களுக்கு வேண்டாம். அதை ஒழிப்பதே எங்கள் வேலை என்று கூறி ஓட்டு கேட்கட்டும் பார்ப்போம். அப்படியானால் அவர்களை கொள்கை வாதிகள் என்று பாராட்டலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×