என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா இரண்டாவது சுற்றில் வென்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ரஷியாவின் செலக்மெடேவா உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-1, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அன்னா கலின்ஸ்கயாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் எடுத்தார்.

    டெல்லி அணி சார்பில் நந்தின் ஷர்மா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி, சினேலி ஹென்றி, மரிஜானே காப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது. லாரா வோல்வார்ட் 42 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

    நடப்பு தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • இதில் இத்தாலியின் ஜானிக் சின்னர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

    மெல்போர்ன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த எலியட் ஸ்பிசிரி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 4-6 என இழந்தார் சின்னர். இதில் சுதாரித்துக் கொண்ட சின்னர் அடுத்த 3 செட்களை 6-3, 6-4, 6-4 என வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் 5-வது வரிசையில் உள்ள இத்தாலியின் லாரன்சோ முசெட்டி 5-7, 6-4, 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் செக் குடியரசு வீரர் தாமஸ் மச்சாக்கை போராடி வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இங்கிலாந்து ஜோ ரூட்டின் அசத்தலான ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

    கொழும்பு:

    இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 49.3 ஓவரில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சரித் அசலங்கா 45 ரன்னும், தனஞ்செய டி சில்வா 40 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், ஜோ ரூட், ஜேமி ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 75 ரன்கள் எடுத்தார். ஹாரி புரூக் 42 ரன்னும், பென் டக்கெட் 39 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து 46.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 223 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன், இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் 1-1 என சமனிலை வகிக்கிறது.

    இலங்கை அணி சார்பில் தனஞ்செய டி சில்வா, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜோ ரூட்டுக்கு அளிக்கப்பட்டது.

    • இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடமாட்டோம் என வங்கதேசம் தெரிவித்தது.
    • தங்கள் அணி ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் வலியுறுத்தியது.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

    ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது.

    இதையடுத்து 2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்நிலையில், வங்கதேச அணி விலகியதால் ஸ்காட்லாந்து அணி டி20 உலகக்கோப்பையில் சேர்க்கப்பட்டுள்ளது. 

    • ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது.

    2026 ஐ.பி.எல். சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை ரூ.4 கோடிக்கு அணியில் தக்க வைத்தது. இதன்மூலம் 2026 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடவுள்ளார்.

    ஐபிஎல் 2026-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், எம்.எஸ்.தோனி பயிற்சியை தொடங்கியுள்ளார்.

    எம்.எஸ்.தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை ஜார்க்கண்ட் கிரிக்கெட் அசோசியேசன் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

    • மகளிர் ப்ரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
    • ஆஸ்திரேலிய அணியுடன் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

    அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

    இதையடுத்து இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.

    மகளிர் ப்ரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியுடன் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.

    தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தி மகளிர் அணி விவரம்:-

    ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், உமா செட்ரி, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் தாக்கூர், ஸ்நே ராணா, கிராந்தி கவுட், வைஷ்ணவி ஷர்மா, சயாலி சத்காரே

    • திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன்.
    • அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

    இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், அவரது காதலர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவ.23 திருமணம் நடைபெறவிருந்தது.

    ஆனால் ஸ்மிருதியின் தந்தைக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இந்த திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் திருமணம் கைவிடப்பட்டதாக மந்தனா அறிவித்தார்.

    பலாஷ் முச்சல்க்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பிருந்ததே திருமணம் கைவிடப்பட காரணம் என ஊகங்கள் எழுந்தன.

    இந்நிலையில் ஸ்மிருதியின் சிறுவயது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான விக்ஞான் மானே தேசிய ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்தார்.

    அதில் பேசிய அவர், 2025 நவம்பரில் நடந்த திருமணச் சடங்குகளின் போது நான் அங்கு தான் இருந்தேன். பலாஷ் முச்சல் வேறொரு பெண்ணுடன் ஒரு அறையில் அந்தரங்கமாக இருந்தபோது பிடிபட்டார்.

    பலாஷின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த அங்கிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் அவரை தாக்கினர். அவரின் மொத்த குடும்பமும் ஏமாற்றுக்காரர்கள் தான்.

    படம் எடுக்க போவதாக பலாஷ் என்னிடம் ரூ.40 லட்சம் வாங்கினார். ஆனால் திருமண முறிவிற்குப் பிறகு பலாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பணத்தைத் தராமல் என்னை ஏமாற்றினர்" என்று தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள பலாஷ் முச்சல், "என் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தில் இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. இதனை நான் சட்டரீதியாகச் சந்திப்பேன்" என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

    • லான்செர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது.
    • ஐதராபாத் டூபான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் எச்.ஐ.எல். அணியை வீழ்த்தி வெளியேற்றியது.

    7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டியின் பிளே ஆப் சுற்று நேற்று தொடங்கியது. குவாலிபயர்-1 ஆட்டத்தில் கலிங்கா லான்செர்ஸ்-ராஞ்சி ராயல்ஸ் அணிகள் மோதின.

    இதில் லான்செர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதி பெற்றது.

    லான்செர்ஸ் அணியில் அலெக்சாண்டர் ஹென்டிரிக்ஸ் 2 கோல் (12 மற்றும் 32-வது நிமிடம்) அடித்தார். ராயல்ஸ் தரப்பில் மன்தீப் சிங் கோலை (40வது நிமிடம்) பதிவு செய்தார்.

    முன்னதாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ஐதராபாத் டூபான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் எச்.ஐ.எல். அணியை வீழ்த்தி வெளியேற்றியது.

    இன்று ஓய்வு நாளாகும். நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் குவாலிபயர்-2 ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ்-ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • அமெரிக்காவின் கோகோ காப் மூன்றாவது சுற்றில் வென்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரொமேனியாவின் எலினா கேப்ரியலாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவரில் 198 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தார்.

    மெல்போர்ன்:

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் மற்றும் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ர ஹோபர்ட் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து 65 ரன்கள் எடுத்தார்.

    ஹோபர்ட் அணி சார்பில் ரிலீ மெரிடித் 3 விக்கெட்டும், ரிஷாத் ஹொசைன், பில்லி ஸ்டான்லேக் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 199 ரன்கள் எடுத்தால் வெற்ரி என்ற இலக்குடன் விளையாடிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 17.5 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 57 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.

    சிட்னி சிக்சர்ஸ் அணி சார்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஜோயல் டேவிஸ், மிட்செல் ஸ்டார்க், சீன் அபாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிட்னி சிக்சர்ஸ் அணி, பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதுவது 6வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடியில் எளிதில் வென்றது.

    ராய்ப்பூர்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. மிட்செல் சாண்ட்னர் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.

    3வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.

    இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்னும், ஷிவம் துபே 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ×