search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Women's Team"

    • கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன்.
    • இந்திய மகளிர் அணியில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்த நிலையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

    இந்நிலையில் கடந்த 2- 3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை என இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தேர்வுக்குழு அணியின் கேப்டனை மாற்ற விரும்பினால் நான் இளைய தலைமுறையை தேர்வு செய்வேன். இதுதான் மாற்றத்துக்கான நேரம். அடுத்தாண்டு மீண்டும் ஒரு உலகக் கோப்பை (ஒருநாள் உலகக் கோப்பை 2025) இருக்கிறது. இப்போது மாற்றம் செய்யாவிட்டால் பிறகு செய்யாதீர்கள். ஏனெனில் அடுத்த உலகக் கோப்பை விரைவில் வரவிருக்கிறது.

    ஸ்மிருதி மந்தனா 2016-ல் இருந்து துணை கேப்டனாக இருக்கிறார். ஆனால், நான் இன்னும் இளமையான 24 வயதாகும் ஜெமிமா மாதிரி ஆள்களை தேர்வு செய்வேன். ஜெமிமா எல்லோரிடமும் கலந்துரையாடுகிறார். அவரது செயல்பாடுகள் இந்தத் தொடரில் சிறப்பாக இருந்தது. கடந்த 2-3 வருடமாக இந்திய அணியில் ஒரு முன்னேற்றமும் இல்லை. எந்த அர்த்தத்தில் என்றால் சிறந்த அணியை வீழ்த்த தயாராக வேண்டும்.

    ஆடவர் அணி எப்படி நன்றாக விளையாடுகிறது? ஒரு பெரிய தொடரை இழந்த பிறகு அணியில் மாற்றத்தை கொண்டு வருகிறார்கள். ஆழமாக பேசினால், மற்றவர்களுக்கு நாம் எப்போது வாய்ப்பளிப்போம்? அதிலும் ஆஸி.க்கு எதிராக ராதா யாதவ், ஜெமிமா தவிர்த்து யாரும் சரியாக விளையாடவில்லை. 11இல் 2 நபர் மட்டுமே விளையாடுவது நல்லதல்ல.

    ஃபிட்னஸ் சார்ந்து நாம் ஒரு புதிய அளவுகோலை முன்வைக்க வேண்டும். ஒரு தொடருக்கு முன்பு மட்டுமே பயிற்சி எடுக்கக் கூடாது. ஆண்டு முழுவதும் பயிற்சி செய்தால் நிச்சயமாக களத்தில் வித்தியாசம் தெரியும்.

    இவ்வாறு மிதாலி ராஜ் கூறினார்.

    • பாட் கம்மின்ஸ் மற்றும் அணியின் பயிற்சியாளர், உதவிப் பணியாளர்கள் யோசிப்பதைப் போன்று வேறு யாரும் யோசித்து நான் பார்த்ததில்லை.
    • உன்னால் முடிந்தவரை அதிரடியாக விளையாடு என்ன ஆனாலும் பார்த்துக் கொள்ளலாம் என அவர்கள் எனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.

    இந்திய மகளிர் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி நான்கு போட்டிகளிலும் வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரார்ங்கனைகளாக ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். இதில் ஷஃபாலி வர்மா 14 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இணைந்த ஸ்மிருதி மந்தனா - தயாளன் ஹேமலதா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்மிருதி மந்தனா 33 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் 30 ரன்களிலும் ஹெமலதா 37 ரன்களிலும் ஆட்டமிழந்தார். இறுதிவரை களத்தில் இருந்த ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 28 ரன்களைச் சேர்த்தார்.

    இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் ரபேயா கான் மற்றும் நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் திலாரா அக்தர், சோபனா மோஸ்ட்ரி, ருபியா அக்தர், கேப்டன் நிகர் சுல்தானா உள்ளிட்டோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    அதன்பின் இணைந்த ரிது மோனி - சோரிஃபா கதும் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

    இதில் சிறப்பாக விளையாடிய ரிது மோனி 37 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதிவரை போராடிய சொரிஃபா கதும் 28 ரன்களையும், ரபேயா கான் 14 ரன்களை சேர்த்தனர்.

    இதனால் வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

    ×