என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI Women's World Cup 2025"

    • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். பிரதிகா ராவல் 134 பந்துகளில் 122 ரங்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - ஹர்மன்பிரீத் கவுர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி அரைசதம் அடித்தார்.

    இதற்கிடையே மழையால் ஆட்டம் பாதிக்கப்பட போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இறுதியில் 49 ஓவர்கள் முடிவில் இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்தது.

    • நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

    மகளிர் ஒருநாள் உலக கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா - பிரதிகா ராவல் களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்து அசத்தினார்.

    95 பந்தில் 109 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா ஆட்டமிழந்தார். மந்தனா சதம் அடித்ததன் மூலம் மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் 2-வது இடத்திற்கு மந்தனா (14) முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 15 சதத்துடன் முதலிடத்தில் தொடர்கிறார்.

    மேலும் இந்த ஆண்டில் தனது ஐந்தாவது சதத்தை மந்தனா அடித்துள்ளார். இதன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சதங்கள் அடித்த தென் ஆப்பிரிக்க வீராங்கனை டாஸ்மின் பிரிட்ஸின் சாதனையை மந்தனா சமன் செய்துள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய ஆடவர் அணி டாஸை இழந்தது.
    • மகளிர் உலக கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக மகளிர் அணி டாஸை இழந்தது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் டாஸை இழந்ததன் மூலம் இந்திய அணி கடைசியாக விளையாடிய 17 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் ஒருமுறை கூட டாஸ் ஜெயிக்கவில்லை.

    கடைசியாக நடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றிருந்தது.

    இதேபோல மராட்டியத்தின் நவி மும்பை நகரில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியிலும் டாஸை இந்திய அணி தோற்றதன் மூலம் உலக கோப்பை தொடரில் 6 போட்டியிலும் டாஸை இழந்துள்ளது.

    ஆடவர் அணியை தொடர்ந்து இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக 6 முறை டாஸை இழந்துள்ளது பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார்.
    • உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது.

    விசாகப்பட்டினம்:

    13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார். பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீராங்கனையின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசின் டியான்ட்ரா டோட்டின் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 71 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.

    உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது. உலக கோப்பையில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் நாட் சிவெர் (5 சதம்) உள்ளார்.

    • வங்கதேச அணி 1 வெற்றி 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • ஆஸ்திரேலிய அணி 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    விசாகப்பட்டினம்:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    நேற்றுடன் 16 ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3 வெற்றி, ஒரு முடிவு இல்லை ஆகியவற்றுடன் தலா 7 புள்ளிகள் பெற்றுள்ளன. தென்ஆப்பிரிக்கா 6 புள்ளியுடனும் (3 வெற்றி,1 தோல்வி), இந்தியா 4 புள்ளியுடனும் (2 வெற்றி, 2 தோல்வி) உள்ளன. நியூசிலாந்து (3 புள்ளி), வங்காளதேசம், இலங்கை (தலா 2 புள்ளி), பாகிஸ்தான் (1 புள்ளி) ஆகிய அணிகள் அதற்கு அடுத்த நிலைகளில் உள்ளன.

    இந்த போட்டி தொடரின் 17-வது லீக் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி வங்காளதேசத்தை வீழ்த்தி 4-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறும் ஆர்வத்தில் இருக்கிறது.

    அந்த அணி தொடக்க போட்டியில் 89 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. இலங்கையுடன் மோதிய 2-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 3-வது போட்டியில் பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்திலும், 4-வது ஆட்டத்தில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது.

    வங்கதேச அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து இங்கிலாந்து (4 விக்கெட்), நியூசிலாந்து (100 ரன்), தென்ஆப்பிரிக்கா (3 விக்கெட்) அணிகளிடம் தோற்றது. ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து 2-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் மோதி இருந்த 4 ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவே வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணியுடன் அடுத்தடுத்து தோல்வியடைந்தது.
    • இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

    உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கை நடக்கிறது.

    8 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    அதன் அடிப்படையில் முதல் 4 இடங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா உள்ளனர். அடுத்த 4 இடங்களில் நியூசிலாந்து, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் அணிகள் உள்ளனர்.

    முதல் 2 போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. இதனால் 4 புள்ளிகளுடன் இந்திய அணி 4-வது இடத்தில் உள்ளது.

    இந்திய அணி வரும் 19-ந் தேதி பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இங்கிலாந்து அணி 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டியிலும் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் உஜ்ஜைனியின் மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இரு அணிகளும் 59 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.
    • இதில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 48-ல் வெற்றி பெற்றுள்ளன.

    விசாகப்பட்டினம்:

    13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    நேற்றுடன் 11 ஆட்டங்கள் முடிந்து விட்டன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 புள்ளியுடனும், இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா 4 புள்ளிகளுடனும், நியூசிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகளுடனும், இலங்கை 1 புள்ளியுடனும் உள்ளன. பாகிஸ்தான் 3 போட்டியிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.

    இன்று கொழும்பில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரின் 13-வது லீக் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பாா்க்கப்படுகிறது.

    அந்த அணி தொடக்க போட்டியில் இலங்கையை 59 ரன் வித்தியாசத்திலும் (கவுகாத்தி), 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 88 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு மிகவும் சவாலானது. இரு அணிகளும் 59 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 48-ல் வெற்றி பெற்றுள்ளன.

    • 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
    • மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் இன்று நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாகிறது. மைதானம் ஈரப்பதமாக இருப்பதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


    • 13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
    • கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன.

    புதுடெல்லி:

    13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. நவம்பர் 2-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் போட்டிகள் நடக்கிறது. கவுகாத்தியில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் இந்தியா -இலங்கை அணிகள் மோதுகின்றன.

    இந்த நிலையில் உலக கோப்பை போட்டி சவால் கள் நிறைந்து இருக்கும் என்றும், கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எங்களது இலக்கு என்றும், இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    சொந்த மண்ணில் உலக கோப்பை கிரிக்கெட் தொட ரில் விளையாடுவது சுவாரசியமானதாகவும், சவாலானதாகவும் இருக்கும். சொந்த மண்ணில் ஆடுவது சிறப்பான உணர்வை அளிக்கிறது. நீண்ட ஆண்டுகளாக ஆடி வரும் ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான அணியில் விளையாட உள்ளது மேலும் சிறப்பான விஷயம். இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்.

    மகளிர் பிரீமியர் லீக் வீராங்கனைகளுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துள்ளது. உலகின் தலைசிறந்த வீராங்கனைகளுடன் இணைந்து மற்றும் அவர்களுக்கு எதிராக ஆடும் வாய்ப்பினை பிரீமியர் லீக் ஏற்படுத்திக் கொடுத்தது. வெளிநாட்டு வீராங்கனைகள் எவ்வாறு விளையாடுகிறார்கள் எவ்வாறு திட்டம் வகுக்கிறார்கள், முக்கியமான தருணங்களில் எவ்வாறு செயல்படுகிறார்கள் உள்ளிட்ட அனைத்தையும் கற்றுக்கொள்ள உதவியது.

    இவ்வாறு சினே ரானா கூறியுள்ளார்.

    31 வயதான அவர் ஆல் ரவுண்டர் ஆவார்.

    இந்திய அணி இதுவரை உலக கோப்பையை வென்றது கிடையாது. 2005 மற்றும் 2017-ல் இறுதிப் போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது. 

    ×