என் மலர்
நீங்கள் தேடியது "மகளிர் உலக கோப்பை"
- சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பையை இந்தியா வென்றது.
- ஸ்மிருதி மந்தனாவுக்கு நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையை சேர்ந்த 29 வயதாகும் இடது கை பேட்டரான ஸ்மிருதி மந்தனா இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவருக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக ஸ்மிருதி மந்தனா போட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஸ்மிருதி மந்தனாவும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் நவம்பர் 20-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
ஜெமிமா விவகாரத்தில் கடந்த ஆண்டு அவரது தந்தையையொட்டி நடந்த மதமாற்ற சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.
அதாவது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் மும்பையில் உள்ள ஜிம்கானா கிளப்பின் உறுப்பினரில் இருந்து ஜெமிமா நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு கிளப்பின் வளாகத்திற்குள் அவரது தந்தை ரோட்ரிக்ஸ் மதம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தி மத மாற்றம் செய்ய ஊக்குவித்ததாக சிலர் புகார் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த மதமாற்ற குற்றச்சாட்டுகளை அப்போதே கிளப்பின் தலைவர் மறுத்திருந்தார்.
அதேபோல், ஜெமிமாவின் தந்தையும் கிளப் வளாகத்திற்குள் கூட்டங்கள் நடத்தப்பட்டது உண்மைதான். ஆனால் கிளப்பின் விதிகளுக்கு உட்பட்டே நடத்தியதாக விளக்கம் அளித்தார்.
அந்த சமயத்தில் ஜெமிமாவின் கிறிஸ்தவ மத நம்பிக்கை குறித்து எதிர்மறையாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அவர் மீது மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.
இந்நிலையில், அவரது குடும்பம் மீது வைக்கப்பட்ட மத ரீதியிலான விமர்சனங்கள் குறித்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இதுதொடர்பாக இந்தியா டுடேவுக்கு பிரத்யேக பேட்டியளித்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், "உண்மையைச் சொல்லப் போனால், அது எப்போது நடந்தது என்பது எனக்கு நினைவில் இருக்கிறது. .நாங்கள் செய்யாத ஒரு விஷயத்திற்காக என் பெற்றோர் அதில் இழுக்கப்பட்டபோது எனக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது. அந்த நேரத்தில், நாங்கள் விதிமுறைகளின்படிதான் செயல்பட்டோம். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தன. ஆனால், எனக்கும் என் குடும்பத்தினருக்கும் எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் எங்களை மிகவும் பாதித்தன. ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்தார்.
- இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- இணையத்தில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் வைரலானார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதனையடுத்து இணையத்தில் அவர் வைரலானார்.
இந்நிலையில், மும்பை விமான நிலையம் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் உடன் துணை ராணுவத்தினர் செல்பி எடுத்துக் கொண்டனர். இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடி பாராட்டுகளை தெரிவித்தார்.
- ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தியாவில் நடைபெற்ற மகளிர் 50 ஓவர் உலக கோப்பையை இந்தியா கைப்பற்றியது. ஆண்கள் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை (கபில்தேவ் தலைமையில் 1983, டோனி தலைமையில் 2011) 50 ஓவர் உலக கோப்பையை வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகள், அணி நிர்வாகிகள் நேற்று மாலை பிரதமர் மோடியை, அவரது லோக் கல்யாண் மார்க் வீட்டில் சந்தித்தனர்.
அப்போது வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி உரையாடி பாராட்டுகளை தெரிவித்தார். பின்னர், பிரதமர் மோடியிடம் உலககோப்பையை வழங்கி போட்டோ எடுத்துக் கொண்டு வீராங்கனைகள் மகிழ்ந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் ராஜ்பவனில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதுதொடர்பாக, ஜனாதிபதி மாளிகை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த பதிவில்," 2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தனர்.
அணியை வாழ்த்திய ஜனாதிபதி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரலாற்றைப் படைத்துள்ளதாகவும், இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.
இந்த அணி இந்தியாவைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார். அவர்கள் வெவ்வேறு பிராந்தியங்கள், வெவ்வேறு சமூகப் பின்னணிகள், வெவ்வேறு சூழ்நிலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், என்றாலும் அவர்கள் ஒரே அணி - இந்தியா" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
- 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. அத்துடன், முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது. இதனால் பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கவுரவித்தது.
இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் வென்றுள்ளது. அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். டோனி தலைமையில் வென்றுள்ளது.
தற்போது மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார்.
இந்நிலையில், ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "ஹர்மன்ப்ரீத் கவுர் ஒரு சிறந்த பேட்டர் மற்றும் ஃபீல்டர். அவர் இந்திய மகளிர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினால் கேப்டன் பதவியின் சுமை இல்லாமல் இருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக அணிக்கு பங்களிக்க முடியும்" என்று தெரிவித்தார்.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
- ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டினர்.
இதனிடையே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன.
இந்நிலையில், ஜெமிமா மீதான மத ரீதியான ட்ரோல்களுக்கு முன்னாள் இந்திய வீராங்கனை சிகா பாண்டே பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிகா பாண்டே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆமாம் ஜெமிமா கடவுளுக்குப் பிடித்த குழந்தைதான். நீங்கள் அதற்காக பொறாமைப்பட்டால்... மன்னிக்கவும், யாரும் உங்களுக்கு உதவ முடியாது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.
- மகளிர் உலக கோப்பையில் 2 சதங்களுடன் 571 ரன்கள் குவித்தார்.
- ஸ்மிரிதி மந்தனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்து தென்ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. அந்த அணியின் கேப்டனும், தொடக்க பேட்டருமான லாரா வால்வார்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராகவும் சதம் அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்த தொடரில் 9 இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தார். இதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
இதன்மூலம் மகளிருக்கான ஐசிசி ஒருநாள் பேட்டர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் முன்னேறியுள்ளார். ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த ஸ்மிரிதி மந்தனா 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். லாரா வால்வார்த் 814 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ளார். ஸ்மிரிதி மந்தனா 811 புள்ளிகள் பெற்றுள்ளார்.
உலக கோப்பையில் ஸ்மிரிதி மந்தனா 9 போட்டிகளில் 1 சதம், 2 அரைசதங்களடன் 434 ரன்கள் விளாசியிருந்தார்.
- ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது.
- ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும்.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. நவி மும்பையில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்று புதிய வரலாறு படைத்தது. இதற்கு முன்பு 2 தடவை (2005, 2017) இறுதிப் போட்டியில் தோற்று இருந்தது. இதனால் நாடு முழுவதும் இந்திய மகளிர் அணியின் வெற்றியை கொண்டாடி வருகிறார்கள்.
1983-ம் ஆண்டு கபில் தேவ் உலக கோப்பையை வென்றது போல தற்போது ஹர்மன்பிரீத் கவுர் மகளிர் உலக கோப்பையை கைப்பற்றி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். மகளிர் உலக கோப்பையை வென்ற 4-வது நாடு இந்தியாவாகும். ஆஸ்திரேலியா (4 தடவை), இங்கிலாந்து (4), நியூசிலாந்து (1) வரிசையில் இந்தியாவும் இணைந்தது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ரூ.39.77 கோடி பரிசு தொகையை வழங்கியது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.51 கோடி பரிசு தொகையை அறிவித்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணிக்கு கிட்டத்தட்ட ரூ.91 கோடி கிடைத்துள்ளது.
உலக கோப்பையை வென்றதால் இந்திய மகளிர் அணியினர் ஒரே இரவில் புகழின் உச்சத்துக்கு சென்றனர். வீராங்கனைக்கான விளம்பர மதிப்பு 35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவை அரைஇறுதியில் வீழ்த்தியபோது 20 முதல் 30 சதவீதம் உயர்ந்தது. தென் ஆப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் வீழ்த்தியதால் 35 சதவீதம் வரை விளம்பர மதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஸ்மிருதி மந்தனா, கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோரின் வருமானம் அதிக அளவில் உயரும். ஒரு விளம்பரத்துக்கு மந்தனா ரூ.2 கோடியும், ஹர்மன்பிரீத் ரூ.1.2 கோடியும், ஜெமிமா ரோட்ரிகஸ் ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையும், ஷபாலி வர்மா ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையும் பெறுகிறார்கள்.
மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.32 கோடி முதல் ரூ.35 கோடியாகும். ஹர்மன் பிரீத் சொத்து மதிப்பு ரூ.25 கோடியாகும்.
இந்த உலக கோப்பையில் மந்தனா 434 ரன்கள் குவித்து சாதனை படைத்து இருந்தார். இறுதிப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக ஷபாலி வர்மாவும், தொடரின் சிறந்த வீராங்கனையாக தீப்தி சர்மாவும் (22 விக்கெட், 215 ரன்) தேர்வு பெற்றனர்.
வீரர்களை பொறுத்தவரை விராட் கோலி ஒரு விளம்பரத்துக்கு ரூ.10 கோடி முதல் ரூ.11 கோடி பெறுகிறார். தெண்டுல்கர் ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரையும், டோனி ரூ.4 கோடி முதல் ரூ.6 கோடி வரையும், ரோகித் சர்மா ரூ.3 கோடி முதல் ரூ.6 கோடி வரையும் பெறுகிறார்கள்.
- 45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது.
- இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. 299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கியது தென் ஆப்பிரிக்க அணி.
45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய மகளிர் அணிக்கு பைசன் படக்குழுவினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பைசன் படக்குழு போஸ்டர் வௌியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
- மழையால் 2 மணி நேரம் தாமதமாக டாஸ் சுண்டப்பட்டது.
- ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மழை பெய்ததால் போட்டி சரியாக 3 மணிக்கு தொடங்கவில்லை. காலதாமதம் ஆனது. இறுதியாக 4.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை அணியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்தது.
- தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை வீழ்த்தியிருந்தது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக திடீரென மழை பெய்தது. இதனால் சரியான நேரத்தில் டாஸ் சுண்டப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படும். 3.30 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியது. இதனால் 3 மணிக்கு டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்க இன்னும் காலதாமதம் ஆகும் .
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
மகளிர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரடியாக வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 127 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அவரது புகைப்படம் மற்றும் அவரது தந்தையுடன் வெற்றியை கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான எம் எஸ் தோனியிடம் ஜெமிமா வெற்றி கோப்பையை வாங்கும் சிறிய வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆட்டத்தை இறுதிவரை கொண்டு சென்று முடிப்பதில் வல்லவரான எம்எஸ் தோனியுடன் மகளிர் அணியின் பினிஷர் என ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.






