என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    மகளிர் உலக கோப்பை யாருக்கு? டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு
    X

    மகளிர் உலக கோப்பை யாருக்கு? டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு

    • மழையால் 2 மணி நேரம் தாமதமாக டாஸ் சுண்டப்பட்டது.
    • ஓவர்கள் ஏதும் குறைக்கப்படவில்லை.

    கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மழை பெய்ததால் போட்டி சரியாக 3 மணிக்கு தொடங்கவில்லை. காலதாமதம் ஆனது. இறுதியாக 4.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. தென்ஆப்பிரிக்கா கேப்டன் லாரா வால்வார்த் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    அரையிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியும், தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்தை அணியை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்காவை இந்தியா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×