என் மலர்
விளையாட்டு

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்
- இரு அணிகளும் 59 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.
- இதில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 48-ல் வெற்றி பெற்றுள்ளன.
விசாகப்பட்டினம்:
13-வது ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ( 50 ஓவர்) இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
8 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் ரவுண்டு ராபின் முறையில் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
நேற்றுடன் 11 ஆட்டங்கள் முடிந்து விட்டன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 5 புள்ளியுடனும், இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா தலா 4 புள்ளிகளுடனும், நியூசிலாந்து, வங்காளதேசம் தலா 2 புள்ளிகளுடனும், இலங்கை 1 புள்ளியுடனும் உள்ளன. பாகிஸ்தான் 3 போட்டியிலும் தோற்று புள்ளிகள் எதுவும் பெறவில்லை.
இன்று கொழும்பில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி தொடரின் 13-வது லீக் ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இதில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பாா்க்கப்படுகிறது.
அந்த அணி தொடக்க போட்டியில் இலங்கையை 59 ரன் வித்தியாசத்திலும் (கவுகாத்தி), 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 88 ரன் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமாக தோற்றது.
ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இந்தியாவுக்கு மிகவும் சவாலானது. இரு அணிகளும் 59 ஒருநாள் போட்டியில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11-ல் ஆஸ்திரேலியா 48-ல் வெற்றி பெற்றுள்ளன.






