என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய மகளிர் அணி அறிவிப்பு
- மகளிர் ப்ரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
- ஆஸ்திரேலிய அணியுடன் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
அண்மையில் முடிவடைந்த 13-வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
இதையடுத்து இலங்கைக்கு எதிராக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி 5 போட்டிகளிலும் வெற்றி வெற்றி பெற்று இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.
மகளிர் ப்ரீமியர் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியுடன் 1 டெஸ்ட், 3 ஒருநாள், 2 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தி மகளிர் அணி விவரம்:-
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், அமன்ஜோத் கவுர், ரிச்சா கோஷ், உமா செட்ரி, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ரேணுகா சிங் தாக்கூர், ஸ்நே ராணா, கிராந்தி கவுட், வைஷ்ணவி ஷர்மா, சயாலி சத்காரே






