என் மலர்
சென்னை
- தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
- நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவன் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக "சார்"களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த வழக்கில் FIR பதிய அலைக்கழித்த ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை, அரக்கோணம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சு. இரவி அவர்களிடம் மாணவி முறையிட்ட பிறகே FIR பதிந்துள்ளது.
மேலும், தன்னைப் போன்றே "20 வயதுள்ள 20 பெண்கள்" தெய்வச்செயலின் கொடூரப் பிடியில் சிக்கியுள்ளதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
"பொள்ளாச்சி பொள்ளாச்சி" என்று மேடைதோறும் கூவிய மு.க.ஸ்டாலின் அவர்களே- "உங்கள் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி" தானே?
பொள்ளாச்சி வழக்கிற்கும் இந்த வழக்கிற்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? பொள்ளாச்சி வழக்கை நான் நேர்மையாக CBI-க்கு மாற்றினேன்; நீங்களோ, அரக்கோணம் வழக்கை நீர்த்துப் போக எல்லா வேலைகளையும் செய்துகொண்டு இருக்கிறீர்கள்!
பாதிக்கப்பட்ட பெண் தெளிவாக "உங்கள் நண்பர் பெற்றெடுத்த பிள்ளை" அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட திமுக-வினர் பெயரைச் சொல்லி, தான் மிரட்டப்படுவதாக சொல்கிறார். குறிப்பாக, அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் உமா மகேஸ்வரன் என்பவருக்கு தன்னை இரையாக்க முயற்சித்ததாக அந்த மாணவி கூறுகிறார். பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை வைத்தே கேட்கிறேன்.
தி.மு.க. குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சிக்கும் 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!
20 வயது பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் துடிக்கும் திமுக நிர்வாகி(கள்) மீது இந்த "டம்மி அப்பா" அரசு நடவடிக்கை எடுக்குமா?
எடுக்காவிடில், மக்கள் துணையோடு நிச்சயம் அ.தி.மு.க. மிகப்பெரிய போராட்டங்களை முன்னெடுக்கும்!
#யார்_அந்த_தம்பி
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. கடந்த வார இறுதியில் ஒரு கிராம் தங்கம் ரூ. 8,720-க்கும் ஒரு சவரன் ரூ.69,760-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,755-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
16-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760
15-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,880
14-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
18-05-2025- ஒரு கிராம் ரூ.108
17-05-2025- ஒரு கிராம் ரூ.108
16-05-2025- ஒரு கிராம் ரூ.108
15-05-2025- ஒரு கிராம் ரூ.108
14-05-2025- ஒரு கிராம் ரூ.109
- இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
- ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்கிறார்.
சென்னை:
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலாளர், அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
- இன்று காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தமிழக மற்றும் அதனைய ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களிலும், சென்னையில் நேற்று இரவு மிதமான மழையும் பெய்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனிடையே, இன்று காலை 10 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், நாகை, நீலகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
- ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது.
- பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சொந்த மண்ணில் சுயாட்சி உரிமையுடனும், சுய மரியாதையுடனும் வாழும் உரிமையைக் கேட்டு போராடியதற்காக ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் சொந்தங்கள் கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யப்பட்டதன் 16-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. மனிதத் தன்மையற்றவர்களால், போர்விதிகளை மீறி கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு இந்த நாளில் மரியாதை செலுத்துகிறேன்.
உலக வரலாற்றில் ஏராளமான படுகொலைகள் நடந்துள்ளன. அவை அனைத்தையும் விட கொடூரமான இனப்படுகொலையை செய்தவர்கள் இராஜபக்சேவும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட கூட்டாளிகளும் தான்.
உலகின் பிறநாடுகளில் இனப்படுகொலைகளை அரங்கேற்றியவர்கள் தண்டிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஈழப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாமல் தப்பி வருவது வேதனையளிக்கிறது.
இனப்படுகொலையாளர்களை தண்டிக்க பாட்டாளி மக்கள் கட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இலங்கை இனப்படுகொலை நடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்தே ஈழத்தமிழர் இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பசுமைத் தாயகம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது.
பசுமைத் தாயகம் அமைப்பின் முன்னாள் தலைவர் என்ற முறையில் நான் 3 முறை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினேன்.
பசுமைத்தாயகம் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக இனப்படுகொலை குறித்து ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி ஆதாரங்களைத் திரட்டியிருக்கிறது. ஆனாலும், அது இன்னும் நீதிமன்ற விசாரணை என்ற நிலைக்கு செல்லவில்லை.
இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை பெற்றுத் தருவது இந்தியாவால் மட்டும் தான் சாத்தியமாகும். அதற்காக மத்திய அரசுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுத்து ஈழச் சொந்தங்களுக்கு நீதி பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த இந்த நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
- குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி சோபனா சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 562 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த சோபனா வீட்டின் நிலையை உணர்ந்து நன்று படித்து நல்ல மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
மீனவ குடும்பத்தில் பிறந்த மாணவி வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.
ஆனால், குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பு தொடர முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
சூழலால் படிப்பை தொடரமுடியாமல், தவித்த ராமநாதபுரம் மாணவி சோபனாவிற்கு உயர்கல்விக்கான உதவிகளைச் கமல்ஹாசன் செய்துள்ளார்.
மேலும், மாணவியின் கனவை எட்ட, குடிமைப்பணித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் கமல்ஹாசன் செய்து கொடுத்துள்ளார்.
- தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்," பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது" என்றார்.
இந்நிலையில், திமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கூட்டணி தொடர்பாக எங்கள் வாயில் வரும் வார்த்தை, தகெவ தலைவர் விஜய் தெரிவித்த வார்த்தையே.
பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார்.
கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.
கூட்டணி குறித்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை.
- நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம்.
- உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக இன்று உறுதி ஏற்போம் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம்.
மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும்.
மாமக்கள் போற்றுதும்!
மாவீரம் போற்றுதும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்படுகிறது.
- தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர்.
பாராளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தமைக்காக, திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரைக்கு சன்சத் ரத்னா தேசிய விருது வழங்கப்படுகிறது.
தனிநபர் பிரிவில் 17 எம்.பி.க்களுக்கும், சிறப்புப் பிரிவில் 4 பேரும் தேர்வு செய்யப்பட்டு விருது பெறவுள்ளனர்.
வரும் ஜூலை மாதம் டெல்லியில் நடைபெறும் சன்சத் ரத்னா விருதளிப்பு குழுவின் 15ம் ஆண்டு விழாவில் இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.
11 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டிற்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கிணற்றுக்குள் ஆம்னி வேன் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் செய்தி.
- குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் சாலை ஓரம் இருந்த கிணற்றுக்குள் ஆம்னி வேன் ஒன்று கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதி உடன்குடி ஒன்றியத்தில் உள்ள வெள்ளமலக்ஷ்மினை ஆலய திருவிழாவிற்கு கோவையில் இருந்து சென்றபோது விபத்துக்கு உள்ளாகி கெர்சோம் மோசஸ், B கோயில் பிச்சை, ஸ்டாலின் (குழந்தை), வசந்தா ஜெனிபர் எஸ்தர், சைனி கிருபாகரன், ஆகியோர் வரும் வழியில் பாபநாசம் அணையில் குளித்துவிட்டு கருங்குளம் வழி வரும் பொழுது பேய்குளம் அருகில் உள்ள 7பேருடன் கிணற்றுக்குள் ஆம் கோஸ் பாய்ந்து சென்றதில் இருவர் மட்டும் நீத்தி வெளியே வந்து இருக்கின்றனர்.
குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது. அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது.
தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என். ஆனந்த், மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :-
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி இன்று த.வெ.க. தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி மாவட்ட செயலாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடந்த ஈழப் போரில் உயிரி ழந்த ஈழத் தமிழர்களை நினைவு கூறும் விதமாக இன்று மாலை 6 மணி அளவில் தங்கள் மாவட்ட அலுவலகத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்தல் தினம் அனுசரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
நிகழ்ச்சி நடத்திய புகைப்படங்களையும் கட்சி தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கட்சி தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ள படத்தை தவிர எந்த படத்தையும் பயன்படுத்தக் கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட வேண்டிய கோஷங்களும் கட்சித் தலைமையில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.
- நாளை 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடலில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22-ஆம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகரக்கூடும்.
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நாளை மறுதினம் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






