என் மலர்tooltip icon

    சென்னை

    • நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அண்ணா நகர் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 24-ந் தேதி காலை 8 மணி முதல் 25-ந் தேதி காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை மண்டலம்-4, ராயபுரம் மண்டலம்-5, புரசைவாக்கம்,

    பெரியமேடு, சௌகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, திரு.வி.க நகர் மண்டலம்-6, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணா நகர் மண்டலம்-8, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், தேனாம்பேட்டை மண்டலம்-9, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை.
    • உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவு.

    நெல்லையைச் சேர்ந்த பேச்சிவேல் என்பவரை 2 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியதாக அவரது தாயார் சந்திரா மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்படி, 2019ம் ஆண்டில் நெல்லை டவுன் காவல் நிலைய காவலர் மகாராஜன், உதவி ஆய்வாளர் விமலன் மீது அவர் புகார் அளித்தார்.

    மேலும், அப்போது போலீசார் தனது மகனைத் தேடி வந்து மளிகை கடையில் நுழைந்து ஆத்திரத்தில் பொருட்களை உடைத்து ரூ. 10 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாகவும் புகார் தெரிவித்தார்.

    இந்து புகார் மனு மீதான விசாரணையின்போது, நெல்லை காவல்துறை ஆணையர் நடத்திய விசாரணையில் போலீசார் மீது எந்த தவறும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    மேலும், 20 வழக்குகள் நிலுவையில் உள்ள பேச்சிவேலை பிடிக்க முயன்றபோது விழுந்ததில் காயம் என கூறி புகாரை தள்ளுபடி செய்ய போலீசார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த புகார் மீதான இன்றைய விசாரணையில்," பேச்சிவேலுவின் காலில் சிலிண்டரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தியதை போலீசார் மறைத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    பேச்சிவேல் எப்போது கைது செய்யப்பட்டார்? முதலுதவி அளிக்கப்பட்ட விவரங்களையும் காவல்துறை மறைத்துள்ளதாக" மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், காவல்துறையினர் தாக்கியதால் காயமடைந்து பேச்சிவேல் சிகிச்சை பெற்ற தகவலை மறைத்ததாகக் கூறி போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தாக்கியதால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், உதவி ஆய்வாளர் விமலன், காவலர் மகாராஜனிடம் இருந்து தலா ரூ.2 லட்சம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மிரட்டும் அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது.
    • பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் யார் வாங்கினார்களோ அவர்களை சென்று விசாரியுங்கள்.

    டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததற்கு திமுக, காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், திட்டமிட்டு அரசியல் லாபத்திற்காக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தி.மு.கவின் நியாயமான கோரிக்கையை ஏற்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் உத்தரவை வரவேற்கிறோம். டாஸ்மாக் வழக்கில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது அமலாக்கத்துறைக்கு கிடைத்த சம்மட்டி அடி. பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் மிரட்டும் அமைப்பாக அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றார்.

    டாஸ்மாக் நிறுவனம் மீதான அமலாக்கத்துறையின் வழக்கு என்பது பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், அமலாக்கத்துறை வரம்புமீறி செயல்படுவதால் தான் டாஸ்மாக் வழகில் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் சோதனைகள் கிடையாது, கைது கிடையாது, அமைச்சர்கள் மீது வழக்குகள் கிடையாது.

    பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்கினால் யார் வாங்கினார்களோ அவர்களை சென்று விசாரியுங்கள். யாருக்கு மோசடியில் தொடர்பு உள்ளதோ அவர்களை விடுத்து அனைத்து அதிகாரிகளையும் விசாரிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறினார். 

    • கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.
    • “கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்.

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

    ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இதுகுறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது "விரைவில் வெளியிடப்படும்" என்று தொல்லியல் துறையால் உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் வரும் 27-ந்தேதி பாராளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

    கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

    "தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்" என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக்கொண்டிருக்கிறது.

    புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பா.ஜ.க. அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

    தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பா.ஜ.க. அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல.. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது!

    அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

    "கீழடி தமிழர்களின் தாய்மடி" என்ற உண்மையை உரக்கச்சொல்வோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.
    • கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார்.

    திருக்குறள் 'உலகப் பொதுமறை' என்று அழைக்கப்படுகிறது. இதில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. ஒரு அதிகாரத்திற்கு பத்து குறள் வீதம் மொத்தம் 1330 திருக்குறள் இருக்கின்றன. இவை அனைத்தும் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகளுக்குள் உள்ளன. திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களுக்கும் அறிஞர்கள் பலர் உரை எழுதி உள்ளனர்.

    கவிஞர் வைரமுத்து கடந்த பல மாதங்களாகத் திருக்குறளுக்கு உரை எழுதிக்கொண்டிருந்தார். தற்போது அவர், தனக்கே உரித்தான கவித்துவ நடையில் விளக்க உரை எழுதி இருக்கிறார். முப்பாலுக்கும் உரை எழுதி முடித்துவிட்டார். அந்த நூலுக்கான தலைப்பை இன்று கவிஞர் வைரமுத்து அறிவித்து உள்ளார்.

    'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்று அந்த நூலுக்குப் பெயர் சூட்டி உள்ள கவிஞர் வைரமுத்து, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    • மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.

    சென்னை :

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் மேற்கு கடற்கரை அல்லது தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை முதல் அதிக மழை பெய்யும்.

    அதன்படி, நாளை முதல் ஜூன் 3 வரை 10 நாட்களுக்கு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு (கோயம்புத்தூர் - வால்பாறை, நீலகிரி - கூடலூர், கன்னியாகுமரி) பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை. சில இடங்களில் 24 மணி நேரத்தில் சில தினங்களுக்கு 200 மிமீ (அதிக மழை) மழை பெய்யக்கூடும்.



    பொதுவாக இந்த பருவமழை அதிகரிப்பு ஜூன் மாதத்தில் ஏற்படும். ஆனால் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழைக்கான அறிகுறிகள் இருப்பதால் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்.

    இது விடுமுறை காலம் என்பதால், குறிப்பாக அதிக மழை பெய்த பிறகு மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள மலைகளுக்கு பயணிக்கும்போது சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இடுக்கி, குடகு, வயநாடு, நீலகிரியில் உள்ள கூடலூர் - அவலாஞ்சி பகுதி, வால்பாறை, சிக்மகளூர் மலைகள், கர்நாடக கடலோரப் பகுதிகள், உடுப்பி, ஷிமோகா மலைகள், உத்தர கன்னடம், வடக்கு கடற்கரை கேரளா போன்ற இடங்கள் அதிக ஆபத்தில் உள்ளன.

    கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, சிறுமலை, கொல்லிமலை, மேகமலை ஆகியவை பயணிக்க பாதுகாப்பானவை.

    மேற்கு கடற்கரை / மலைத்தொடர்களில் பருவமழை ஆரம்பித்த உடன் சென்னையில் மழைக்கு வாய்ப்பு குறைய ஆரம்பித்து விடும்.

    பெங்களூருவில் மேற்குப் பக்கத்திலிருந்து மேகங்களுடன் பருவமழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

    • நேற்று சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,040-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,680-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,975-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,800-க்கும் விற்பனையாகிறது. இதனால் சவரன் விலை ரூ.72 ஆயிரத்தை நெருங்குகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 112-க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800

    20-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,680

    19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    18-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    17-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,760

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    21-05-2025- ஒரு கிராம் ரூ.111

    20-05-2025- ஒரு கிராம் ரூ.108

    19-05-2025- ஒரு கிராம் ரூ.109

    18-05-2025- ஒரு கிராம் ரூ.108

    17-05-2025- ஒரு கிராம் ரூ.108

    • ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர்.
    • சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக, சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.

    இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.

    இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா.
    • தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சாரதா தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சி திரு.வி.க.நகர் மண்டலத்துக்குட்பட்ட 65-வது வார்டில் தி.மு.க. கவுன்சிலராக இருப்பவர் கு.சாரதா. இவர், இந்த மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலில் ஈடுபட்டு வருவதாக தி.மு.க. தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் அவர், தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிழக்கு மாவட்டம் கொளத்தூர் மேற்கு பகுதி மாநகராட்சி 65-வது கவுன்சிலரும், கிழக்கு மாவட்ட மகளிரணி வலைத்தள பொறுப்பாளருமான கு.சாரதா கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் தி.மு.க. அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கவுன்சிலர் சாரதா, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு தங்களை பணி செய்ய விடாமல் தடுக்கிறார் என்று மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர் மாநகராட்சி கமிஷனரிடம் ஏற்கனவே புகார் மனு அளித்ததும் நினைவு கூரத்தக்கது.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
    • கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, நடுத்தெரு, சித்திரகுளம் வடக்கு.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    சோழவரம்: சோத்துபெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம்.

    ஆவடி: மிட்டனமல்லி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம்.சி.ராஜா தெரு, வள்ளுவர் தெரு, ராஜீவ்காந்தி நகர் 1 முதல் 8வது தெரு, பிருந்தாவன் நகர் 1 முதல் 5வது தெரு, ஐ.ஜி.பி., சி.ஆர்.பி.எப்.

    மயிலாப்பூர்: சாந்தோம் ஹை ரோடு, டூமிங் குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்டச் சாலை, லாசர் சர்ச் ரோடு, ரோஸரி சர்ச் ரோடு, முத்து தெரு, கச்சேரி ரோடு, பாபநாசம் சாலை, நடுத்தெரு, சித்திரகுளம் வடக்கு, தாட்சி அருணாச்சலம் தெரு, ஆப்ரஹாம் தெரு, நியூ தெரு, சோலையப்பன் தெரு, கேசவபெருமாள் சன்னதி தெரு, சோலையப்பன் தெரு, வி.சி கார்டன் தெரு, ஆர்.கே. மட் சாலை, மந்தைவெளி சாலை5வதுகுறுக்கு தெரு வெங்கடேச அக்ரகாரம், பிச்சு பிள்ளை தெரு, கிழக்கு மற்றும் வடக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, ஆடம் தெரு, குமரகுரு தெரு, திருவள்ளவர்பேட்டை, ஜெத்நகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
    • தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தகுதியான 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் பணி தொடங்கியது.

    அதன்பின்னர், விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    அதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.

    இந்த உரிமைத்தொகை, ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை.

    எனவே தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் வருகிற 29-ந்தேதி முதல் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் 29-ந்தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • 8 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை ராகுல்காந்தி பகிர்ந்திருந்தார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் விவகாரம் தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை மக்களவை எதிர்கட்சிதலைவர் ராகுல் காந்தி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

    இந்த பதிவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    அன்புள்ள சகோதரரே, மாநிலங்களின் உரிமைகளையும் நமது இந்தியாவின் கூட்டாட்சி உணர்வையும் பாதுகாப்பதில் உங்கள் குரலுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×