என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை குடிநீர் தட்டுப்பாடு"
- நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.
- பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அண்ணா நகர் மண்டலம், புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்வதால் 24-ந் தேதி காலை 8 மணி முதல் 25-ந் தேதி காலை 8 மணி வரை தண்டையார்பேட்டை மண்டலம்-4, ராயபுரம் மண்டலம்-5, புரசைவாக்கம்,
பெரியமேடு, சௌகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, திரு.வி.க நகர் மண்டலம்-6, ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், அண்ணா நகர் மண்டலம்-8, கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், தேனாம்பேட்டை மண்டலம்-9, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
ஜெயலலிதா அறிவித்த தொலை நோக்கு திட்டம் 2023-ன்படி செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டம் குறித்த கருத்தரங்கம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் நடை பெற்றது.
இந்த கருத்தரங்கில் குடிநீர் திட்டப்பணிகளில் குளோரின் பயன்பாடு குறித்த புத்தகத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டு பேசினார். இதில் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கருத்தரங்கம் முடிவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் ரூ.21,050 கோடி மதிப்பீட்டில் நடை பெற்று வருகிறது.
சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மூலம் தண்ணீர் பெறப்பட்டாலும் கூடுதலாக 180 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இந்த திட்டப்பணிகள் அனைத்தும் நிறைவேறும் போது சென்னையில் 40, 50 ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்சினை இருக்காது.
குடிநீர் திட்ட பணிகளுக்காக 170 பொறியாளர்களுக்கு மணிலாவில் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. 24 நகராட்சி பொறியாளர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 18 பெரிய குடிநீர் திட்டங்களில் 11 பணிகள் வேகமாக நடைபெறுகிறது. 7 பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
சென்னையில் கடந்த ஆண்டு இதே நாளில் 449 மி.லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது 650 மி.லிட்டர் நீர் வழங்குகிறோம். டிசம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வராது. 4 ஏரிகளில் இருந்து டிசம்பர் மாதம் வரை தண்ணீர் பெற முடியும்.
மற்ற மாவட்டங்களில் மழை பெய்து உள்ளதால் குடிநீர் பிரச்சினை அதிகம் ஏற்படவில்லை. சென்னையிலும் விரைவில் நல்ல மழை பெய்யும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.
சென்னையில் 33 குளம், ஏரிகளை சீரமைக்கும் பணி நடக்கிறது. 15 கோவில் குளங்களும் சீரமைக்கப்படுகிறது. இதுதவிர 158 ஏரிகளை டி.வி.எஸ்., அசோக் லைலேண்ட் உள்ளிட்ட பெரிய கம்பெனிகள் உதவியுடன் சீரமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை மழையால் 1.50 மீட்டர் வரை நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சென்னை ஏரிகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும்போது 850 மி.லிட்டர் குடிநீர் கொடுத்தோம். தட்டுப்பாடு சமயங்களில் 450 மி.லிட்டர் குடிநீர் வழங்கி இருக்கிறோம். எனவே இப்போது கொடுக்கப்படும் 650 மி.லிட்டர் குடிநீர் என்பது பெரிய பிரச்சினையாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறினார். #MinisterVelumani #DrikingWater






