search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்புமணி ராமதாஸ்
    X
    அன்புமணி ராமதாஸ்

    மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டி

    மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
    சென்னை:

    மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் 6 பேரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    மாநிலங்களவை எம்.பி.க்களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட்டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும், தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும்.

    அ.தி.மு.க. கூட்டணியில் தோழமை கட்சியான பா.ம.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுபோல தி.மு.க. கூட்டணியில் அதன் தோழமை கட்சியான ம.தி.மு.க.வுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, இன்று மதியம்  மாநிலங்களவையில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதில், முகமது ஜான், சந்திரசேகரன் ஆகியோரது பெயர்களை அறிவித்தனர்.

    இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள ஓர் இடத்தில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் மற்றும் பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் திங்கட்கிழமை மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
    Next Story
    ×