என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • காரின் சன்ரூப் கண்ணாடியை குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.

    உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் கார் மீது குரங்கு விழுந்ததில் காரின் சன்ரூப் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. அப்போது காருக்குள் விரிந்த குரங்கு உடனடியாக வெளியே குதித்து தப்பி ஓடியது.

    தொழிலதிபர் முகேஷ் ஜெய்ஸ்வாலின் கார் கண்ணாடியை தான் குரங்கு உடைத்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

    காரின் சன்ரூப் கண்ணாடியை குரங்கு உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோ வாரணாசி நகரத்தில் குரங்குகளின் அட்டகாசத்தால் மக்கள் படும் அவதியை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

    • பலர் தெருக்களிலும் மலைகளிலும் இரவு முழுவதும் தூங்கினர்.
    • சிலர் பஸ்ஸின் டிரங்கில் பயணம் செய்தனர்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகரில் 133 பிராந்திய பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் கலந்துகொள்ள உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 18,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.

    போதிய தங்குமிடம், போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பலர் தெருக்களிலும் மலைகளிலும் இரவு முழுவதும் தூங்கினர். சிலர் பஸ்ஸின் டிரங்கில் பயணம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



    • கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
    • பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் கர்ஹாலில் உள்ள கஞ்சாரா நதி பாலம் அருகே தலித் இளம்பெண்ணின் உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அந்த பெண்ணின் குடும்பத்தினர் பிரசாந்த் யாதவ் என்ற நபர் கொலை செய்ததாக குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் கொலையின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    கர்ஹால் இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு வாக்களிக்கப்போவதாக அந்தப் பெண் கூறி உள்ளார். இது பிரசாந்தை கோபப்படுத்தி உள்ளது. சமாஜ்வாதி கட்சிக்கு வாக்களிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என பிரசாந்த் அந்த பெண்ணை மிரட்டியதாக குடும்பத்தினர் கூறினர்.

    அந்த பெண்ணிற்கு நவம்பர் 19-ந்தேதி மிரட்டல் விடுக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

    2 சந்தேக நபர்கள் நவம்பர் 19-ந்தேதி அந்த பெண்ணை பைக்கில் அழைத்து சென்றுள்ளனர். இதற்கு அடுத்த நாள் புதன்கிழமை அந்த பெண்ணின் உடல் ஒரு சாக்கு மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து முதற்கட்ட விசாரணை நடத்தினர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி வினோத் குமார் கூறுகையில்,

    கர்ஹாலில் நேற்று முன்தினம் இரவு காணாமல் போன 23 வயதான பெண், நேற்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை 2 பேர் மீது புகார் அளித்துள்ளார். ஒருவர் பிரசாந்த் யாதவ் மற்றும் மற்றொருவர் மோகன் கத்தேரியா. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 7-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் முதலில் நடந்த ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி, குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 39-39 என சமனில் முடிந்தது.

    • உத்தரபிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
    • முஸ்லிம் பெண்களிடம் போலீசார் புர்காவை கழற்ற கூறுகின்றனர்.

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தில் 9 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் வாக்குப் பதிவில், இஸ்லாமிய வாக்காளர்களை போலீசார் வாக்களிக்க விட மறுப்பதாக உத்தரபிரதேச எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு புகார் அளித்தார்.

    முஸ்லிம் பெண்களிடம் புர்காவை கழற்ற கூறியும் முஸ்லிம் ஆண்களிடம் தேவையின்றி ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை போலீசார் கேட்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது.

    இதனையடுத்து, முஸ்லிம் மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்த 7 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • காற்றில் பறக்கும் ரூபாய் நோட்டுகளை அங்கு கூடியிருந்த மக்கள் எடுத்து செல்கின்றனர்.
    • சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    சமூக ஊடகங்களில் வெளியாகும் வீடியோக்களில் சில நகைச்சுவையாகவும், சில விமர்சனத்திற்குள்ளாவதையும் காணமுடிகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகும் திருமண ஊர்வலத்தின் வீடியோ ஒன்று...

    வைரலாகும் வீடியோ உத்தரபிரதேச மாநிலம் சித்தார்த்நகரில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில், திருமண ஊர்வலத்தின் போது ரூ.100, ரூ.200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை வீசுகின்றனர். மணமகன் ஊர்வலத்தின் போது அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் பணத்தை வீசுகின்றனர். காற்றில் பறக்கும் ரூபாய் நோட்டுகளை அங்கு கூடியிருந்த மக்கள் எடுத்து செல்கின்றனர். இந்த வைரலான வீடியோ அப்சல் மற்றும் அர்மானின் திருமணத்திலிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனரோ, "சகோதரரே, பணத்தை ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கவும்" என்றும் மற்றொருவரோ "இவ்வளவு பணம் இருந்தால், நான்கு ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்திருக்கலாம்" என்றும் கூறுகின்றனர்.



    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் புனேரி பால்டன், உபி யோதாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், இரு அணிகளும் 29-29 என்ற புள்ளிகளை எடுத்தது. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

    • கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று மக்கள் நம்புகின்றனர். அனால் அது உண்மையில்லை.
    • சீதையை ராவணன் விமானத்தில் தான் கடத்தி சென்றான் என்பது கூட நம் மக்களுக்கு தெரியாது.

    ராமாயண புராணத்தில் ராவணனின் தம்பியாக வரும் கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப வல்லுநர் என்றும் ரகசியமாக அவர் ஆய்வகத்தில் இயந்திரங்களை உருவாக்கினார் என்று உத்தரப்பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரபிரதேசத்தில் உள்ள குவாஜா முயினுத்தீன் சிஷ்டி பாஷா விஸ்வவித்யாலயா கல்லூரியின் 9 ஆவது பட்டமளிப்பு விழாவில் கவர்னர் ஆனந்திபென் படேல் கலந்து கொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், கும்பகர்ணன் 6 மாதங்கள் தூங்குவார் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால் அது உண்மையில்லை. கும்பகர்ணன் ஒரு தொழில்நுட்ப நிபுணராக இருந்தார். அதனால் தான் கும்பகர்ணன் பொதுவெளியில் 6 மாதங்களுக்கு வரக்கூடாது என்று ராவணன் தடை விதித்தார். கும்பகர்ணன் தனது ஆய்வகத்தில் ஆறு மாதங்கள் ரகசியமாக இயந்திரங்களை தயாரித்தார். அதனால் தான் அந்த தொழில்நுட்பம் மற்ற நாடுகளுக்கு செல்லக் வில்லை.

    சீதையை ராவணன் விமானத்தில் தான் கடத்தி சென்றான் என்பது கூட நம் மக்களுக்கு தெரியாது. நமது நூலகங்களில் இந்திய அறிவுப் பாரம்பரியத்தின் பழைய நூல்கள் நிறைந்துள்ளன. அவற்றை மாணவர்களை படிக்க வேண்டும். இந்தியாவின் செழுமையான அறிவைப் பற்றி அனைவரும் அறியும் வகையில் இந்தப் புத்தகங்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

    உ.பி கவர்னர் பேசிய இந்த வீடியோவை காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷிரினேட் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவில் இந்த ஆழ்ந்த அறிவு வழங்கப்பட்டது" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

    • புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
    • தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் செல்லும் வாகனம் தெரியாததால் மோதி அடுத்தடுத்து விபத்து ஏற்படுகிறது.

    டெல்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்கள் கடுமையான புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக டெல்லி, அதனையொட்டிய உத்தர பிரதேச நகரங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

    பனி போன்று புகை மூட்டம் அடர்ந்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அருகில் செல்லும் வாகனங்கள் தெரியாத அளிவற்கு புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் விபத்துகள் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது.

    இன்று உத்தர பிரதேச மாநிலம் நொய்டா மற்றும் மேற்கு உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தில் பைக்கில் சென்ற இருவர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    கிழக்கு பெரிபெரல் எக்ஸ்பிரஸ்வே-யில் இரண்டு சரக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றான மோதி விபத்துக்குள்ளாகின.

    பானிபட்டில் இருந்து மதுரா சென்ற பேருந்து முன்னே சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் பேருந்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    பரிசாபாத்தில் ஆக்ரா அருகே லாரி மீது கார் மோதி நின்ற நிலையில் அடுத்தடுத்த ஆறு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயம் அடைந்தனர். இதேபோன்று ஏராளமான சொகுசு கார்கள் விபத்தை எதிர்கொண்டன.

    புலந்த்ஷாஹ்ர் என்ற இடத்தில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில், பைக்கில் சென்றவர் உயிரிழந்தார். பதான் என்ற இடத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று பைக் மீது மோதியதில் ஆசிரியர் பள்ளிக்கு சென்ற வழியில் உயிரிழந்தார்.

    • அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தன.
    • மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    இந்த தீ விபத்தில் 11 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 43 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து 2 லட்சமும் உ.பி. முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 5 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த தீ விபத்தின்போது மருத்துவமனைக்கு வெளியே படுத்திருந்த யாகூப் மன்சூரி என்ற கூலித் தொழிலாளி மருத்துவமனை ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்று கரும் புகைக்கு இடையே 7 பச்சிளம் குழந்தைகளை தூக்கி வந்து காப்பாற்றியுள்ளார்.

    ஆனால் இதே மருத்துவமனையில் பிறந்த யாகூப்பின் இரட்டை பெண் குழந்தைகள் மறுதினம் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று யாகூப் உருக்கத்துடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், அரியானா அணி 36-29 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இது அரியானா அணி பெற்ற 8-வது வெற்றி ஆகும்.

    மற்றொரு ஆட்டத்தில் புனேரி பால்டன் அணியை 30-28 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 6-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தமிழ் தலைவாஸ் அணி 4-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று நடந்த முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. ஆரம்பம் முதலே தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 46-31 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. இது தமிழ் தலைவாஸ் அணி பெற்ற 4-வது வெற்றி ஆகும்.

    ×