என் மலர்tooltip icon

    உத்தரப் பிரதேசம்

    • தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன.
    • தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் ஜான்சி லட்சுமிபாய் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் வார்டில் கடந்த 15ம் தேதி அன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது.

    சம்பவத்தன்று தீ விபத்தில் சிக்கி 10 குழந்தைகள் உடல் கருகி உயிரிழந்தன. 39 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

    மேலும், தீக்காயம் ஏற்பட்ட சில குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    தீ விபத்தில் சிக்கிய மேலும் சில குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டது. மேலும் சில குழந்தைகள் இறந்தன.

    இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு குழந்தைகள் சிகிச்சை பலனின்று இன்று உயிரிழந்தன. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை இதுவரை 17ஆக உயர்ந்துள்ளது.

    • போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
    • பின்னர் அப்பகுதியில் மசூதி கட்டப்பட்டது.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 'ஷாஹி ஜமா' மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் காரணமாக போலீஸ் மற்றும் பொது மக்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    இந்த மோதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 30-க்கும் அதிகமான காவல் துறையினர் காயமுற்றனர். ஷாஹி ஜமா மசூதி உள்ள இடத்தில் முன்பு ஹரி ஹர் மந்திர் என்ற கோவில் இருந்ததாகவும் அதனை 1529 இல் முகலாயப் பேரரசர் பாபர் இடித்தார்.

    பின்னர் அப்பகுதியில் மசூதி கட்டப்பட்டது என்று அம்மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது.

    அதன்படி நவம்பர் 19ஆம் தேதி போலீசார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில், ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக ஆய்வு குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சென்றுள்ளனர்.

    மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர். வன்முறைக்கு மத்தியிலும் ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்து முடித்தனர். நவம்பர் 29 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

    • உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வி.
    • முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன.

    பகுஜன் சமாஜ் கட்சி இனிவரும் காலங்களில் இடைத்தேர்தல்களில் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி இன்று தேர்தல் ஆணையம் போலி வாக்குகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை நாட்டில் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிடாது என்று அறிவித்தார்.

    இதுதொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில், பத்திரிக்கையாளர் சந்திப்பில், இவிஎம் குறித்து கேள்வி எழுப்பிய மாயாவதி, அதன் மூலம் போலி வாக்குப்பதிவு நடைபெறுவதாகவும், பகுஜன் சமாஜ் கட்சியை பலவீனப்படுத்த சதி நடப்பதாகவும் கூறினார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், " உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் நேற்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் குறித்து பரவலாக விவாதிக்கப்படுகிறது.

    முன்னதாக, முறைகேடு மற்றும் மோசடி மூலம் வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி போலி வாக்குகள் போடப்பட்டன, இப்போது அதேபோன்ற நடவடிக்கைகள் EVMகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. இது ஜனநாயகத்திற்கு கவலையும் வருத்தமும் அளிக்கிறது.

    இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆணையம் போலி வாக்குப்பதிவைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை, நாங்கள் எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என்று எங்கள் கட்சி முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக ஆய்வு குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றுள்ளனர்.
    • மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

    உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஷாஹி ஜமா என்ற மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியை ஆய்வு செய்ய வந்த போலீசார் மீது பொதுமக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஷாஹி ஜமா மசூதி உள்ள இடத்தில் முன்பு ஹரி ஹர் மந்திர் என்ற கோவில் இருந்ததாகவும் அதனை 1529 இல் முகலாயப் பேரரசர் பாபர் இடித்தார். பின்னர் அப்பகுதியில் மசூதி கட்டப்பட்டது என்று அம்மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மசூதியை ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி போலீசார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது.

    இந்நிலையில், ஷாஹி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக ஆய்வு குழுவினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மீண்டும் சென்றுள்ளனர். இதனையடுத்து மசூதியை ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    வன்முறைக்கு மத்தியிலும் ஆய்வு குழுவினர் மசூதியை ஆய்வு செய்து முடித்தனர். நவம்பர் 29 ஆம் தேதி ஆய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் ஆய்வு குழுவினர் சமர்ப்பிக்க உள்ளனர்.

    • மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
    • விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி உறுதி அளித்துள்ளார்.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி என்ற கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் அருகில் இருக்க மாணவர்கள் சிலர் காரை கழுவிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அதிகாரி உறுதி அளித்துள்ளார்.




    • உத்தர பிரதேசத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • இதில் காசியாபாத் உள்பட 7 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

    இதில் காசியாபாத், கெய்ர், புல்பூர், மஜவான், குண்டர்கி, கதேஹரி, ஆகிய 7 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி. கட்சி மீராபூர் தொகுதியில் வெற்றி பெற்றது. சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், உபி இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியதாவது:

    உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் வெற்றி கிடைத்துள்ளது.

    பிரதமர் மோடியின் கொள்கைகள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

    வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் அரியானா அணி 10-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில், இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய குஜராத் அணி 31-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 43-30 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    • மகா கும்பமேளா சிறப்பு ரெயில்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன.
    • பிரயாக்ராஜ் அருகில் உள்ள ஷிருங்வேர் பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஒவ்வொரு வருடமும் கும்பமேளாவும் 12 வருடங்களுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் வருகிற ஜனவரி மாதம் மகா கும்பமேளா தொடங்க உள்ளது.

    இதையொட்டி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    மகா கும்பமேளாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 45 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களது வசதிக்காக வழக்கமான 10,100 ரெயில்களுடன் 2,917 சிறப்பு ரெயில்களை ரெயில்வே துறை இயக்க உள்ளது.

    மொத்தம் 13,017 ரெயில்கள் பிரயாக்ராஜுக்கு வந்து செல்ல இருக்கின்றன. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிக்கு ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் எழுதிய கடிதத்தில் இத்தகவலை கூறி உள்ளார்.

    மகா கும்பமேளா சிறப்பு ரெயில்கள் தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் இருந்தும் புறப்பட உள்ளன. இந்த சிறப்பு ரெயில்கள் அனைத்தும் மகா கும்பமேளாவின் மவுனி அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் இயங்க உள்ளன.

    இதற்கிடையில் மகா கும்பமேளா ஏற்பாடுகளை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13-ந்தேதி பிரயாக்ராஜ் வருகிறார். அப்போது சில முக்கிய திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

    முன்னதாக பிரயாக்ராஜ் அருகில் உள்ள ஷிருங்வேர் பூர் மடத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த மடமானது, ராமாயணத்தில் ராமரை படகில் அழைத்துச் சென்ற நிஷாத்ராஜ் எனும் குகன் பெயரில் செயல்படுகிறது. இங்கு குகனுடன் இணைந்த ராமரின் பிரம்மாண்ட சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார். ஷிருங்வேர்பூரில் இருந்து பிரதமர் மோடி, கங்கை நதி வழியாக க்ரூஸர் வகை சிறிய கப்பலில் பிரயாக்ராஜுக்கு பயணிக்கிறார். பிரயாக்ராஜின் கங்கை ஆரத்தி நிகழ்ச்சியிலும் பிரதமர் கலந்துகொள்கிறார்.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தபாங் டெல்லி அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இதில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், உ.பி. யோதாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் உ.பி. யோதாஸ் அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.

    இறுதியில் உ.பி. யோதாஸ் அணி 40-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

    மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணியை 35-21 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.

    • துண்டுகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கிறார்கள்.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் சிலர், இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டனர்.

    புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பதால் புகைப்பழக்கத்திற்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த நபன்குப்தா என்பவர் சிகரெட் துண்டுகளை மறுசுழற்சி செய்து அதன் மூலம் பொம்மைகள் தயாரிக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.

    இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோ 60 வினாடிகள் உள்ளது. அதில், ஏராளமான சிகரெட் துண்டுகளை ஒரு சாக்கு பையில் அடைக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுகளில் இருந்து பஞ்சுகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கிறார்கள். பின்னர் அந்த பஞ்சுகளை மறுசுழற்சி செய்வது குறித்த விளக்கத்தை குப்தா விளக்குகிறார்.

    தொடர்ந்து மறுசுழற்சி செய்யப்பட்ட பஞ்சுகளை பொம்மைகளுக்குள் அடைத்து விதவிதமான வண்ணங்களில் பொம்மைகள் தயாரிப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் சிலர், இந்த பொம்மைகள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என பதிவிட்டனர். அதே நேரம் சில பயனர்கள், மறுசுழற்சி செய்யப்பட்டு தான் அவை பயன்படுத்தப்படுகின்றன. எனவே குப்தாவின் முயற்சியை கேலி செய்ய வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர். 



    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 8-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    நொய்டா:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடந்து வருகிறது.

    இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற போட்டியில் பெங்கால் வாரியர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக ஆடியது.

    இறுதியில், தெலுங்கு டைட்டன்ஸ் அணி 31-29 என்ற புள்ளிக்கணக்கில் திரில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது.

    மற்றொரு ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி, பெங்களூரு புல்ஸ் அணியை 32-26 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

    • மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.
    • குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நவம்பர் 17 ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.

    மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். ஆகவே 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக மணமகளிடம் பல மணிநேரம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.

    ×