என் மலர்
நீங்கள் தேடியது "அந்தரங்கப் பகுதி"
- நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
- புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஷாஹாபூரைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவனின் காலில் ஏற்பட்ட காயத்திற்குப் பதிலாக மருத்துவர்கள் தவறாக அந்தரங்கப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெற்றோரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சுகாதார அதிகாரி உறுதியளித்தார். மேலும், விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கூறுகையில், "கடந்த மாதம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனின் காலில் காயம் ஏற்பட்டது.
அவர் ஜூன் 15ம் தேதி அன்று ஷாஹாபூரில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
காயமடைந்த காலுக்குப் பதிலாக மகனின் அந்தரங்கப் பகுதியில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர்.
பின்னர், அவர்களது தவறை உணர்ந்த மருத்துவர்கள், காயமடைந்த காலில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்தனர்" என்றனர்.
மேலும் இதுகுறித்து சஹாப்பூர் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
- இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
- இவர்களின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
உத்திரபிரதேசத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை காதலி வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முசாபர்நகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்களின் காதலுக்கும் இளைஞரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.மேலும், அந்த இளைஞருக்கு வெறொரு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், இது தொடர்பாக முசாபர்நகரில் உள்ள ஓட்டலில் காதலனும் காதலியும் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இளம்பெண் தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை கொண்டு காதலின் அந்தரங்க உறுப்பை வெட்டியதோடு தனது கையையும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய இளம்பெண்ணை கைது செய்தனர்.






