என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: கைதியின் கையில் கயிறு கட்டி வண்டி ஓட்ட வைத்த கான்ஸ்டபிள்
    X

    VIDEO: கைதியின் கையில் கயிறு கட்டி வண்டி ஓட்ட வைத்த கான்ஸ்டபிள்

    • உத்தரப் பிரதேச மணிப்பூரி பகுதி சாலையில் நடந்த இந்த சம்பவம் நடந்துள்ளது.
    • முன்னதாக காரில் சென்றவர் ஹெல்மட் அணியவில்லை என உ.பி. போலீஸ் அபராதம் விதித்தது.

    சாலையில் கையில் கயிற்றால் கட்டப்பட்ட ஒருவர் ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்ட பின்னால் ஹெல்மட் உடன் போலீஸ் ஒருவர் அமர்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    உத்தரப் பிரதேச மணிப்பூரி பகுதி சாலையில் நடந்த இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

    முன்னாள் அமர்ந்து வண்டி ஓட்டுபவர் குற்றவாளி என்றும் அவரை அழைத்துச்செல்ல வேண்டிய கான்ஸ்டபிள் குளிர் அதிகமாக இருந்ததால் வண்டி ஓட்ட மலைத்து கைதியின் கையில் கயிறை கட்டி அவரை வண்டி ஓட்ட வைத்துள்ளதும் தெரியவந்தது.

    இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக விசாரிப்பதாக உ.பி. போலீஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக காரில் சென்றவர் ஹெல்மட் அணியவில்லை என உ.பி. போலீஸ் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×