என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, இன்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையானே வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
முன்னதாக, மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, தூத்துக்குடி பயணம் குறித்து தமிழில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று மாலையும் நாளையும், தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.
இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். இது குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, தூத்துக்குடி வந்தடைந்துள்ளார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையானே வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
- இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர்.
- தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா?
சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் சீமான் உரையாற்றி வருகிறார்.
அப்போது அவர் கூறுகையில்," இது லட்சிய கூட்டத்திற்கும் ரசிகர்கள் கூட்டத்திற்கும் இடையில் நடக்கும் போர் என விஜயை மறைமுகமாக சண்டைக்கு அழைத்துள்ளார் சீமான்.
தமிழ் தேசிய இனத்தின் உரிமை கனமை கொண்டுள்ள சித்தாந்தமா? சினிமாவா? இதுதான் சண்டை" என சீமான் கூறியுள்ளார்.
- களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை.
- ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடி கொண்டிருக்கும்போது ஓய்வெடுக்க மனமில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, உயிராக இயக்கும் களச்செயல்பாடுகள் குறத்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
கழக உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!
உயிராக நம்மை இயக்கும் கழகத்தின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, #ஓரணியில்_தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்!
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
- கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் தவெகவினர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் காலத்தில், கழகத் தோழர்கள் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தாதவாறு மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும்.
வீடு வீடாகச் செல்லும் பரப்புரை, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் தலைமைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாசகங்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் புகைப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சுவர் எழுத்துகள், பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் இவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அனுமதிக்கப்படாத வாசகங்கள், புகைப்படங்கள் அல்லது ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது.
தேர்தல் பரப்புரை, பொதுக் கூட்டங்கள், உறுப்பினர் சேர்க்கை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவற்றில் அங்கீகரிக்கப்படாத பேனர்கள், வடிவமைப்புகள், இலச்சினைகள் அல்லது வாசகங்களைப் பயன்படுத்தக் கூடாது.
முதல்வர் வேட்பாளர் அல்லது கழகத் தலைவர் தொடர்பான அங்கீகரிக்கப்பட்ட உள்ளடக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளரங்கு, பொதுவெளி மற்றும் பொதுக் கூட்டங்களின் போது, கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வெடி வெடிப்பது உள்ளிட்ட அதிகப்படியான கொண்டாட்டங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சிகளின் போது, பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல், பொதுமக்களின் உற்ற தோழர்களாகக் கழகத் தோழர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 'இந்தியாவின் பழங்கால வரலாற்றை திருத்தி எழுதி உள்ளது கீழடி'.
- கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக வீடியோ வெளியீடு.
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வரவுள்ள நிலையில், கீழடி தொடர்பான வீடியோ ஒன்றை திமுக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, கீழடி நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் திமுக வீடியோ வெளியிட்டுள்ளது.
- சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
- கேசவ சமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
நெல்லை:
கல்லிடைக்குறிச்சி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கல்லிடைக்குறிச்சி கோட்டம் கரிசல்பட்டி மற்றும் சேரன்மகாதேவி துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இதனால் இந்த துணைமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. அதன் படி கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தபேரி, தெய்வநாயக பேரி, மீனவன் குளம், பட்டன்காடு, இடையான்குளம், கங்கணாங்குளம், சடையமான் குளம், வெங்கட்ரங்கபுரம், சிங் கிகுளம், தேவநல்லுர், காடு வெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபலசமுத்திரம், மேலச்செவல், வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவ சமுத்திரம், மலையடி, மேல்கரை ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும்.
- கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து போராட்டம்.
நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில், மாடு மேய்க்கும் போராட்டம் நடைபெறும் என்றும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாடு மேய்ப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேனி அடப்பாறையில் ஆக.3ம் தேதி வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
கால்நடைகளை மேய்ப்பதற்கு பல இடங்களில் வனத்துறை தடை விதித்துள்ளதைக் கண்டித்து மாடு மேய்க்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள மேய்ச்சல், தரிசு, மந்தை புறம்போக்கு நிலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஆடு, மாடுகள் மாநாட்டைத் தொடர்ந்து மலையேறி மாடு மேய்க்கும் போராட்டத்தை சீமான் நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர முதலமைச்சர் அழைப்பு .
- ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு என தகவல்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் அங்கிருந்தபடியே ஓரணியில் தமிழ்நாடு நிலவரம், தேர்தல் களப்பணிகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்கள் 8 பேர், அப்போலோ மருத்துவமனைக்கு இன்றே நேரில் வர வேண்டும் என்று முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தல் களப் பணிகள் குறித்து முதலமைச்சர் அறிவுரைகளை வழங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
- வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார்.
- இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொல்லம் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( 65). கிராம உதவியாளராக பணிபுரிந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி சரோஜா பக்கவாத நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் வேதனை அடைந்த விஜயகுமார் யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இறந்த சரோஜாவின் உடலை நல்லடக்கம் செய்யும் ஏற்பாட்டில் உறவினர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் இருந்த விஜயகுமார் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அவர் வீட்டின் அருகே சற்று தொலைவில் மயானத்தில் விஜயகுமாரின் மோட்டார் சைக்கிள் நின்று கொண்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மயானத்தில் தேடிய போது அங்கு ஒரு பகுதியில் ஒருவரது உடல் தீயில் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். மயானத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது. அதில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தை விஜயகுமார் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தனது மனைவியின் இறப்பை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் நான் இந்த விபரீத முடிவை எடுக்கப் போகிறேன். இதற்கு யாரும் பொறுப்பில்லை என்று எழுதப்பட்டிருந்தது.
இதனை அடுத்து மயானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது விஜயகுமார் என தெரிய வந்தது. மனைவியின் பிரிவை தாங்க முடியாத துக்கத்தில் விஜயகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கத்தில், உடல் நல்லடக்கம் செய்வதற்குள் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மேய்ச்சலுக்கு சென்ற 6 மாத ஆட்டு குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.
- மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை லாவகமாக மீட்டனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் அதிக அளவில் ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு மேய்ச்சலுக்கு சென்ற 6 மாத ஆட்டு குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.
அப்போது ஆட்டின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு உடலில் சூழ்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை சூழ்ந்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை லாவகமாக மீட்டனர்.
இதையடுத்து மலைப்பாம்பு அருகில் இருந்த வனப்பகுதியில் சென்றது. இதனிடையே மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை இரைக்காக விழுங்க முயன்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
- தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்தின் பொருளாகும்.
ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக் கொண்டு வரக்கூடியது. அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது.
இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதலமைச்சர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.
ராகுல்காந்தி ஆட்சியை இழந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்திலேயே உணர வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய இது மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்கத் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






