என் மலர்
உள்ளூர் செய்திகள்
- இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
- மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்நிலையில், முதல்வரின் வீட்டில் காவல் துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர்.
ஆனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.
மேலும், காவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
- ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை விடாது கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் பி.ஏ.பி. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக சோலையாறு அணை முழுகொள்ளளவை எட்டியதை தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் பரம்பிக்குளம், ஆழியாறு அணைகளும் முழு கொள்ளளவை எட்டின.
ஆழியாறு அணைக்கு நேற்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 1,763 கன அடியாக இருந்தது. பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1,763 கன அடி நீர் 11 மதகுகள் வழியாக ஆழியாற்றில் திறந்து விடப்பட்டது. மதியம் 1 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2,677 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து வினாடிக்கு 2,518 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆழியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்நிலையில், ஆழியாறு அணையில் இருந்து 11 மதகுகள் வழியாக 4,151 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஆழியாறு அணையில் இருந்து 4,151 கனஅடி நீர் வெளியேற்றப்படும் நிலையில் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பராம்பாளையம், ஆனைமலை, ஆத்து பொள்ளாச்சி, காளியப்பா கவுண்டன்புதூர் பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் பேச்சு.
ராணிப்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாளவன், " தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்" என்று கூறினார்.
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுப்யணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தூத்துக்குடி நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி.
- ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி. இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.
அப்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்
இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி , பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் இடம் பெற்று இருப்பதாவது:-
*விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் .
*கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
*தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்
ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
- நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
- காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 32,000 கன அடியிலிருந்து 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க்பட்டுள்ளது.
நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்ற பிரதமர் மோடி,
தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 11 மணிக்கு ஓட்டலில் இருந்து கார் மூலம் விமான நிலையத்திற்கு செல்கிறார்.
செல்லும் வழியில் கண்டோன்மெண்ட், பாரதிதாசன் சாலை ஆகிய இடங்களில் மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பாரதிதாசன் சாலையின் ஒரு பகுதியில் ரோடு- ஷோ நடத்துவதற்கு வசதியாக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளது. பின்னர் பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ரோடு ஷோவில் மக்களை சந்திக்கிறார்
கோவிலில் பிரதமர் மோடிக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்படுகிறது. பின்னர், வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரை கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்கு கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார்.
இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடக்கிறது. இசையை கேட்டு ரசிக்கும் பிரதமர் மோடி, பின்னர் மதியம் சுமார் 1.45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். பிற்பகல் 2.25 மணிக்கு அந்த ஹெலிகாப்டர் திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கியதும், 2.30 மணிக்கு விமானம் மூலம் நேரடியாக டெல்லிக்கு புறப்படுகிறார்.
- ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
- தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.
திருச்சி:
பிரதமர் நரேந்திர மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, பிரதமர் மோடி தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும், ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்நிலையில், தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு கோரிக்கைகள் தொடர்பான மனுவை எடப்பாடி பழனிசாமி அளித்தார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என தெரிவித்தார்.
- மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் ராஜு விஸ்வகர்மா என்ற நபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இதைதொடர்ந்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜு விஸ்வகர்மாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளது.
- காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
- தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரெயில்வே பாலம் தமிழ்நாட்டின்தான் உள்ளது.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்சார்பு இந்தியாவின் உயிர்நாடியாக ரெயில்வே துறை உள்ளது. தேசத்தின் முதல், தனித்தன்மை வாய்ந்த செங்குத்து ரெயில்வே பாலம் தமிழ்நாட்டின்தான் உள்ளது.
இந்தியாவை நவீனப்படுத்தும் வேள்வி நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் செனாப் பாலம் பொறியில் துறையின் அற்புதமாக பார்க்கப்படுகிறது.
மதுரை- போடி ரெயில் பாதை மின் மயமாக்கப்பட்டதால் வந்தே பாரத்துக்கான பாதை திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திறக்கப்பட்டுள்ள புதிய ரெயில் பாதைகள் மூலம் தென்னிந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பயன்பெறுவர்.
தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நமது முக்கியமான உறுதிப்பாடு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டிற்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட நிதியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் புதிதாக 11 மருத்துவமக்கல்லூரிகளை வழங்கி உள்ளோம்.
மீனவர்களுக்கு எந்த அரசும் செய்யாத கரிசனத்தை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், கரைபுரண்டு ஓடும் உற்சாகத்தை காண்கிறேன், இந்த உற்சாகத்தின் வெளிபாடாக செல்போனில் வெளிச்சம் காட்டுமாறு பிரதமர் மோடி கூறினார்.
இதைதொடர்ந்து, அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் தங்கள் செல்போனில் டார்ச் அடித்து வௌிச்சத்தை காண்டித்து உற்சாகமடைந்தனர்.
- ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக கண்டிருப்பீர்கள்.
- தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
வளர்ச்சியின் புதிய மையப்புள்ளியாக தமிழகத்தையும், தூத்துக்குடியையும் உருவாக்கும்.
ஆழ்கடல் பகுதியில் சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சிதம்பரம் பிளளை
வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன் ஆகியோர் சுதந்திரமான பாரதம் என்ற கனவை உருவாக்கினார்கள்.
கடந்த ஆண்டு தூத்துக்குடியின் முத்துக்களை பில்கேட்ஸ்க்கு பரிசாக அளித்தேன்.
பாண்டிய நாட்டின் சுத்தமான முத்துக்கள் உலக பொருளாதாரத்தின் அடையாளமாக இருந்தன.
இங்கிலாந்து உடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தமிழகத்திற்கு உத்வேகம். புதிய ஒப்பந்தம் மூலம் இங்கிலாந்தில் விற்பனை ஆகும் 99 சதவீத இந்திய பொருட்களின் விலை குறையும்.
இங்கிலாந்து உடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
ஆபரேசன் சிந்தூரின் போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பலத்தை கண்கூடாக கண்டிருப்பீர்கள்.
ஆபரேசன் சிந்தூரில் இந்தியா தயாரிப்பு தளவாடங்கள் பெரும் பங்கு வகித்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் எதிரிகள் பதுங்கு குழுகள் மண்ணோடு மண்ணானது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் 20 லட்சம் பணிகளை கையாளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இன்று திறக்கப்பட்ட சாலை கட்டமைப்பு மூலம் டெல்டா மாவட்டங்கள் சென்னையுடன் இணைக்கப்படுகிறது. ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலைகள் டெல்டா மாவட்டங்களை சென்னையோடு இணைக்கும்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு போடப்பட்ட புதிய சாலையால் வர்த்தகம், வேலைவாய்ப்புக்கான புதிய பாதையை திறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
- வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.
தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி ரூ.4,900 பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, வணக்கம் என்று தமிழில் சொல்லி தனது சிறப்புரையை பிரதமர் மோடி தொடங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இன்று கார்கில் வெற்றித்திருநாள், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தலை வணங்குகிறேன்.
4 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணத்திற்கு பிறகு புன்னிய பூமியில் கால் பதிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது.
திருச்செந்தூர் முருகன், ராமேஸ்வரம் சிவனின் ஆசீர்வாதத்துடன் தமிழ்நாட்டின் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன்.
திருச்செந்தூர் முருகன் துணையுடன் தமிழ்நாட்டில் புதிய தொழில் அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா மீதான உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
வளர்ச்சி அடைந்த பாரதத்தையும், வளர்ச்சி அடைந்த தமிழ்நாட்டையும் உருவாக்குவோம்.
அனைத்து துறைகளிலும் இந்தியா தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. உள்கட்டமைப்பு, எரிசக்தி எந்தவொரு மாநிலத்திற்கும் முதுகெலும்பு போன்றது.
தமிழக மக்கள் பல நூற்றாண்டுகளாக தன்னிறைவு பெற்ற பாரத்ததிற்காக உழைத்து வருகின்றனர். சக்திவாய்ந்த இந்தியாவிற்கு தூத்துக்குடியின் பங்களிப்பு அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், இன்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.
விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.
குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.






