தொடர் கனமழை- ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க்பட்டுள்ளது.
தொடர் கனமழை- ஒகேனக்கல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கான நீர்வரத்து 32,000 கன அடியிலிருந்து 50,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்க்பட்டுள்ளது.

நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com