என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கு- வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
    X

    ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கு- வாலிபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

    • மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர் ராஜு விஸ்வகர்மா என்ற நபரை 15 தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் சூலூர்பேட்டை ரெயில் நிலையத்தில் வடமாநில வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இதைதொடர்ந்து, ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் நேற்று பொதுமக்கள் குவிந்ததால் கைதான வாலிபரை போலீசார் நேற்று கவரப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு விடிய விடிய அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக அவனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    அவனிடம் விசாரணை நடத்தி முடித்த நிலையில் அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

    மருத்துவ பரிசோதனை முடிந்த நிலையில், அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ராஜு விஸ்வகர்மாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க பூவிருந்தவல்லி போக்சோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×