என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்- திருமாவளவன்
- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் பேச்சு.
ராணிப்பேட்டையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திருமாளவன், " தமிழகத்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொள்பவர்கள் எல்லாம் மதசார்பின்மைக்கு எதிரானவர்கள்" என்று கூறினார்.
தமிழகத்தில், பல்வேறு மாவட்டங்களில் மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தமிழகத்தில் சுற்றுப்யணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Next Story






