என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PM modir"

    • ரஷியா - உக்ரைன் போரால் இந்தியா மீது அமெரிக்கா அதிகளவில் வரி விதித்துள்ளது.
    • ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி தான் வருகிறது.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கான கடந்த வெள்ளிக்கிழமை அலஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

    ரஷியா - உக்ரைன் போரால் இந்தியா மீது அமெரிக்கா அதிகளவில் வரி விதித்துள்ளது. இதற்கு ரஷியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்கா வரி விதித்த போதும் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்கி தான் வருகிறது.

    இந்நிலையில், ரஷிய அதிபர் புதினை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார்.

    • தூத்துக்குடி நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி.
    • ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    பிரதமர் மோடி தனது 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்த நிலையில், நேற்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.

    அப்போது பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தொடர்ந்து, தூத்துக்குடி விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    விழாவில் தமிழக அரசு சார்பில் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டிஆர்பி ராஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

    நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை நினைவுப் பரிசாக வழங்கினார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தூத்துக்குடில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். குறிப்பாக, ரூ.4,900 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    ரூ.450 கோடி மதிப்பில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வை முடித்துக்கொண்டு திருச்சி சென்றார் பிரதமர் மோடி. இதையடுத்து அவரை, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

    அப்போது அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்

    இந்த சந்திப்பின் போது கோரிக்கை மனு ஒன்றையும் எடப்பாடி பழனிசாமி , பிரதமர் மோடியிடம் அளித்துள்ளார். அந்த கோரிக்கை மனுவில் இடம் பெற்று இருப்பதாவது:-

    *விவசாய கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்பதில் இருந்து வங்கிகள் விவசாயிகளுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும் .

    *கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    *தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும்

    ஆகிய கோரிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, கோரிக்கை மனுவை பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்துள்ளார்.



    • பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை கண்டிராத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடியுள்ளது. இதனால் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால், சேதத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக ரூ.2000 கோடியை அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக விடுவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    ஃபெஞ்சல் புயல் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரிடரால் மொத்தம் 69 லட்சம் குடும்பங்களும், 1.5 கோடி தனிநபர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள், ஒரே நாளில் முழுப் பருவத்தின் சராசரி (50 செ.மீ.க்கும் அதிகமான) மழையைப் பெற்றதால், பரவலான வெள்ளம் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் பயிர்களுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டது.

    38,000 அரசு அதிகாரிகள் மற்றும் 1,12,000 பயிற்சி பெற்ற முதல்நிலை பணியாளர்கள் அடங்கிய அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு நான் நேரில் சென்றுள்ளேன்.

    மாநில அரசுக்கு தற்காலிக சீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 2,475 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. எங்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இந்த பேரழிவின் அளவு மாநிலத்தின் வளங்களை மூழ்கடித்துள்ளது.

    அழிவின் தீவிரம் மற்றும் மறுசீரமைப்புக்கான அவசரத் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணத் தொகையாக உடனடியாக NDRF-லிருந்து 2,000 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும்.

    மேலும், சேதங்கள் பற்றிய விரிவான மதிப்பீட்டை மேற்கொள்வதற்கு மத்திய குழுவை விரைவில் நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் மதிப்பீட்டின் அடிப்படையில், மேலும் நிதி உதவிக்கு உங்கள் பரிசீலனையை கோருகிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×