என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டுப்பாளையம் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு
    X

    மேட்டுப்பாளையம் அருகே ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற மலைப்பாம்பு

    • மேய்ச்சலுக்கு சென்ற 6 மாத ஆட்டு குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.
    • மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை லாவகமாக மீட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மூலத்துறை கிராமம் பவானி ஆற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதியில் அதிக அளவில் ஆடு, மாடுகள் வளர்க்கும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு மேய்ச்சலுக்கு சென்ற 6 மாத ஆட்டு குட்டி ஒன்றை மலைப்பாம்பு விழுங்க முயற்சித்துள்ளது.

    அப்போது ஆட்டின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஆட்டுக்குட்டியை மலைப்பாம்பு உடலில் சூழ்ந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை சூழ்ந்து இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் மலைப்பாம்பிடம் இருந்து ஆட்டுக்குட்டியை லாவகமாக மீட்டனர்.

    இதையடுத்து மலைப்பாம்பு அருகில் இருந்த வனப்பகுதியில் சென்றது. இதனிடையே மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை இரைக்காக விழுங்க முயன்றதை அப்பகுதியினர் வீடியோ எடுத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×