என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடி பயணம்- பிரதமர் மோடி தமிழில் ட்வீட்
- பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
- விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
பிரதமர் மோடி தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை முடித்துக் கொண்டு, இன்று மாலை தூத்துக்குடி வந்தடைந்தார்.
பிரதமர் மோடி தமிழக பாரம்பரிய உடையானே வேட்டி, சட்டை அணிந்து விமானத்தில் இருந்து இறங்கினார்.
பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.
விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
முன்னதாக, மாலத்தீவு பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய பிரதமர் மோடி, தூத்துக்குடி பயணம் குறித்து தமிழில் பதிவுகள் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
இன்று மாலையும் நாளையும், தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் நான் தூத்துக்குடிக்கு செல்வேன். அங்கு பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்படும்.
இதில் தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடமும் அடங்கும். இது குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்பில் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
தொடங்கி வைக்கப்படும் பிற திட்டங்களில் தேசிய நெடுஞ்சாலை -36-ன் 50 கி.மீ தூரத்திற்கு சேத்தியாத்தோப்பு - சோழபுரம் பிரிவில் 4-வழிப்பாதை, 5.16 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை-138 தூத்துக்குடி துறைமுகச் சாலையின் 6-வழிப்பாதை ஆகியவையும் அடங்கும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






