என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.
    • காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா களம் இறக்கப் போகும் வேட்பாளர்கள், அவர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றி கட்சி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    இதில் நடிகை குஷ்பு பெயரும் இடம் பெற்றுள்ளது. சென்னையில் அவரை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர். தென் சென்னை அல்லது மத்திய சென்னை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    இது பற்றி குஷ்புவிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு தேர்தலிலும் இப்படி பெயர் அடிபடுவது வழக்கமானதுதான். கட்சி என்ன சொல்கிறதோ அதை செய்வேன் என்றார்.

    இந்த தேர்தல் நாடு சந்திக்கும் வித்தியாசமான தேர்தல். பிரதமர் யார் என்பதை முடிவு செய்து மக்கள் வாக்களிக்கப் போகும் தேர்தல்.

    அடுத்ததாக காங்கிரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பும் தேர்தல்.

    1967-க்கு பிறகு மத்தியில் ஆட்சியில் இருந்தும் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளில் தங்களுக்கு யார் சாதகமாக இருப்பார்களோ அவர்கள் மீது சவாரி செய்து பழக்கப்பட்டு விட்டது.

    இந்த தேர்தலில் ஏற்கனவே கையில் இருக்கும் தொகுதிகளையாவது தாருங்கள் என்று தி.மு.க.விடம் கையேந்தும் நிலைக்கு வந்துள்ளது. இந்த தேர்தலோடு காங்கிரசை மக்கள் கை கழுவி விடுவார்கள்.

    போதை பொருள் புழக்கத்தில் தமிழகம் முதலிடத்துக்கு வந்து விட்டது. ஆனால் அரசு போதையில் மயங்கி கிடக்கிறது.

    ரூ.3500 கோடி போதை பொருள் கடத்தலில் தி.மு.க. துணையோடுதான் ஈடுபட்டுள்ளார்கள். எனவே மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும் இறக்கமும் காணப்பட்டு வந்தது. நேற்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று ஜெட் வேகத்தில் சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது.

    தங்கம் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.5,940-க்கும் சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,520-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 80 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கும் பார் வெள்ளி ரூ.77,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.800 உயர்ந்துள்ளதால் தங்கம் வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • முதலமைச்சரைச் சந்தித்துப் பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்.
    • இடப் பங்கீட்டில் அவரது கனிவும் சூழ்நிலையின் கறார்த்தனமும் தெளிவாய்த் தெரிந்தன.

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது குறித்து கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முதலமைச்சரைச் சந்தித்துப்

    பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்

    சிறிதுநேரம்

    தனிமையில் உரையாடினோம்

    நிமிடமுள்ளின்

    நிதானத்தில் பேசினார்

    இடப் பங்கீட்டில்

    அவரது கனிவும்

    சூழ்நிலையின் கறார்த்தனமும்

    தெளிவாய்த் தெரிந்தன

    புயல் நடுவில்

    புல்லாங்குழல்

    ஓர் அபூர்வம்

    அபூர்வங்களுள் ஒருவர்

    முதல்வர்

    இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.

    • நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் நடைபெறுகிறது.

    இம்மையங்களில் 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன.

    யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பன்னாட்டு ரோட்டரி சங்கங்கள் போலியோ முகாம் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளன.

    சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.

    தடுப்பு மருந்து கொடுக்கும் முன் சோப்பு கொண்டு கை கழுவுவது, சானிடைசர் உபயோகப்படுத்துவது கட்டாயமாகும். தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

    அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் அன்று சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். விடுபடும் குழந்தைகளை கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படும்.

    முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்க தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்து வாழும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோசொட்டு மருந்து வழங்கப்படும்.


    போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணிகளுக்காக 3000-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் ஈடுபடுத்தப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் நாளில் பயணிக்கும் குழந்தைகளின் வசதிக்காக முக்கிய பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனைச் சாவடிகள், விமான நிலையங்களில் பயண வழி மையங்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போலியோ சொட்டு மருந்து மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    போலியோ சொட்டு மருந்து முகாம்கள் தமிழ்நாட்டில் சிறப்பாக நடைபெறுவதால் தமிழ்நாடு தொடர்ந்து 20 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆம்பூர் அடுத்த ஜமீன் குளிதிகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஓட்டலில், சாப்பிட திரும்பினர்.
    • ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் கிராமம், ஆலமர தெருவை சேர்ந்தவர் தண்டபாணி, கூலி தொழிலாளி.

    இவரது மகள்கள் சோபனாதரணி (வயது 23), தேன்மொழி (20). இவர்கள் தனது நண்பரான குடியாத்தம் அடுத்த கீழ்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (30) என்பவருடன், நேற்று இரவு பைக்கில் ஆம்பூருக்கு சென்றனர். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய அவர்கள், ஆம்பூர் அடுத்த ஜமீன் குளிதிகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஓட்டலில், சாப்பிட திரும்பினர்.

    அப்போது பின்னால் மீன் ஏற்றி வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக, அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேலூர் பூட்டுதாக்கில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சோபனாதரணி, தேன்மொழி ஆகியோர் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். குணசேகரன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்:

    வங்க கடலில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்று காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று காலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.

    வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால் கடந்த 28-ந்தேதி முதல் மீனவர்களின் பாதுகாப்பு கருதி ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மறு அறிவிப்பு வரும் வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்திருந்தது.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

    இந்த நிலையில், வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்த நிலையில் இன்று ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    • போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    சென்னை:

    போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இதில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மேற்கு டெல்லியில் உள்ள கைலாஷ் நகரில் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த குடோனில் அதிரடியாக புகுந்து, அங்கிருந்த தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 கிலோ அளவில் போதையூட்டும் வேதிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டது தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளரும், சினிமா தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் என விசாரணையில் தெரியவந்தது.

    இந்தநிலையில் ஜாபர் சாதிக் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் சம்மனை, சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிலும், புரசைவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் போலீசார் ஒட்டியுள்ளனர். அவரது வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். இதன்மூலம், இனி எந்த விமான நிலையத்துக்கு ஜாபர் சாதிக் சென்றாலும் உடனடியாக அவர் அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வசம் ஒப்படைக்கப்படுவார்.

    • மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம்.
    • தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், பாராளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், ஆர்.பி. உதயகுமார், பா.வளர்மதி, செம்மலை, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    பின்னர், நத்தம் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மக்களின் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்க உள்ளோம். தமிழக மக்களின் முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். இன்னும் 4 நாட்களில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விஜயதாரணி ராஜினாமா செய்ததால் விளவங்கோடு தொகுதி காலி என அறிவிப்பு.
    • திருக்கோவிலூர் தொகுதி காலி என இன்னும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஜயதாரணி பா.ஜனதாவில் இணைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அவர், பா.ஜனதாவில் இணைந்ததும் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

    உடனடியாக விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதனால் மக்களை தேர்தலுடன் விளவங்கோட்டிற்கு சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு பேரணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிராதா சாகு தொடங்கி வைத்தார். இதில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை போலீஷ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்து கொண்டனர்.

    அப்போது விளவங்கோடு இடைத்தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யபிரதா சாகு கூறிகையில் "மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு இடைத்தேர்தலை நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு செய்யும். திருக்கோவிலூர் தொகுதியை காலியாக அறிவிப்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் இரண்டு கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்" என்றார்.

    திருக்கோவிலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கியதால், அவரது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவி தானாகவே பறிபோகியுள்ளது. ஆனால், அந்த தொகுதி காலி என அறிவிக்கப்படாமல் இருக்கிறது.

    தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார். இதனால் அவர் இன்னும் சிறைக்கு செல்லாமல் உள்ளார்.

    • மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.
    • 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு.

    தமிழகத்தில் இன்று பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வில், 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளதாக தெரிவித்தனர்.

    இதைத்தவிர, 21,875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர் எனவும் கூறப்பட்டது.

    இதற்காக, தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

    தமிழ் பாடத்தேர்வான இன்று சுமார் 12,364 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என கூறப்படுகிறது.

    • எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து.
    • பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி!

    பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே…. தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.
    • பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக 4-வது வாரமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.

    பராமரிப்பு பணி காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    ×