என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது.
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர்.
சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர்களை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
அனைத்து குழுவினரும் ஆலாந்துறை பகுதிக்கு நேற்று மதியம் வந்து சேர்ந்தனர். அங்கிருந்து 63 நாயன்மார்களை தனி தனி பல்லக்குகளில் ஏந்தி ஆதியோகி தேர்களுடன் ஈஷாவுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களுக்கு ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் இருந்து தியானலிங்கம் வரை கைலாய வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் ஹரியானாவைச் சேர்ந்த மதுராந்தா என்ற இளைஞர் உத்தரபிரதேசம் மாநிலம் வாராணாசியில் தொடங்கி 41 நாட்கள் 2,300 கி.மீ பாத யாத்திரையாக பயணித்து ஆதியோகியை தரிசனம் செய்தார். இந்த யாத்திரை தொடர்பாக அவர் கூறுகையில், "சிவ பக்தியில் என்னை கரைத்து கொள்வதற்காக நான் இந்த பாத யாத்திரையை மேற்கொண்டேன். காசி முதல் கோவை வரையிலான இந்த யாத்திரை என்னுடைய நண்பர் ஒருவரும் என்னுடன் சேர்ந்து வருவதாக திட்டமிட்டு இருந்தோம். ஆனால், எதிர்பாராத விதமாக யாத்திரை தொடங்குவதற்கு முன்பு அவர் விபத்தில் சிக்கி ஐ.சி.யூவில் அனுமதிக்கப்படும் சூழல் உருவானது. இருந்தபோதும், நான் என்னுடைய யாத்திரையை திட்டமிட்டப்படி தொடர்ந்தேன். ஆதியோகி சிவனின் அருளால் ஐ.சி.யூவில் இருந்து மீண்டு வந்த அந்த நண்பர் என்னுடைய யாத்திரையில் இடையில் வந்து சேர்ந்து கொண்டார். இது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்த்து" என கூறினார்.
சென்னை குழுவினருடன் பாத யாத்திரை மேற்கொண்ட ஜனனி அவர்கள் கூறுகையில், "சென்னையில் இருந்து புறப்பட்ட எங்கள் குழு 29 நாட்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வழியாக பயணித்து வந்துள்ளது. பல கிராமங்களில் அங்குள்ள மக்கள் ஆதியோகியை தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தரிசனம் செய்ததை பெரும் பாக்கியமாக கூறினர். உடல் அளவில் இந்த யாத்திரை எனக்கு சவாலாக இருந்தாலும், மனதளவில் பெரும் நிறைவை தருகிறது" என்றார்.
இந்த யாத்திரையில் கலந்து கொண்ட அனைவரும் மஹாசிவராத்திரிக்காக 40 நாட்கள் சிவாங்கா விரதம் இருந்து வருகின்றனர். தினமும் 2 வேளை மட்டுமே உணவு உட்கொள்ளும் அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று வந்த பிறகு தியானலிங்கத்தில் தங்கள் விரதத்தை நிறைவு செய்து கொள்வார்கள்.
- கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
- டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தோ்தலையொட்டி, பா.ஜ.க. வேட்பாளா்களை தோ்வு செய்வது குறித்து தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளிடமும், கடந்த 5-ந்தேதி மூத்த நிா்வாகிகளிடமும் செவ்வாய்க்கிழமை கருத்துக்கேட்டு பட்டியல் தயாரித்தனா்.
இந்தப் பட்டியல் குறித்து சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை ஆகியோா் ஆலோசனை நடத்தினா்.
மூத்த நிா்வாகிகள் முன்னிலையில் தயாரிக்கப்பட்ட பட்டியலுடன் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் அனைவரும் டெல்லிக்குச் சென்று பா.ஜ.க. தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாஆகியோரை சந்தித்து ஆலோசிக்க போவதாக கூறிவிட்டு அண்ணாமலை தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டு சென்றனர்.
தமிழக வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லியில் அமித்ஷா, நட்டா ஆகியோரை அண்ணாமலை சந்தித்தார். இதையடுத்து அமித்ஷாவும், நட்டாவும் தமிழக குழுவினருடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார்கள்.
அப்போது கூட்டணி நிலவரங்கள், புதிதாக எந்ததெந்த கட்சிகள் வரவாய்ப்பு என்பது பற்றி விரிவாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

டி.டி.வி.தினகரன் 4 தொகுதிகள் கேட்டு இருப்பது, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட தயங்குவது பற்றியும் விவாதித்து இருக்கிறார்கள்.
இன்னும் எந்த கூட்டணியும் முழுமை அடையாமல் இழுபறியான நிலையே நீடிப்பதால் பா.ஜனதா தரப்பிலும் வேட்பாளர் அறிவிப்பில் குறைந்த எண்ணிக்கையில் அதாவது பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை முதலில் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.
அதன்படி 8 தொகுதிகள் வரை அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தில் வேட்பாளர்கள் தேர்வில் பெண்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார்கள். வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., நடிகை குஷ்பு, டாக்டர் ஆனந்த பிரியா, டாக்டர் காயத்ரி, சுமதி வெங்கடேஷ், மகா லெட்சுமி, கார்த்தியாயினி, உமாரதி ஆகிய பெண் நிர்வாகிகள் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
பெரிய அளவில் கூட்டணி அமையாமல் பா.ஜனதா தேர்தலை சந்தித்தால் குறைந்த பட்சம் 7 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.
கோவை:
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெள்ளிங்கிரி மலை உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் இந்த மலையானது உள்ளது. 5.5 கி.மீ தூரம் செல்லும் இந்த மலைப்பாதையில் வெள்ளை விநாயகர் கோவில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுணன் வீல், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்றவற்றை கடந்து 7-வது மலையில் சுயம்பு லிங்கத்தை தரிசிக்க முடியும்.

ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இங்கு வருவார்கள். அவர்கள் ஏழு மலைகள் ஏறி, ஏழாவது மலையில் உள்ள சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம்.
இந்த ஆண்டு சிவாரத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் 9-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அன்று முதல் தினந்தோறும் வெள்ளியங்கிரி மலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
வருடத்திற்கு வருடம் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. அதற்கு ஏற்ப அனைத்து வசதிகளையும் வனத்துறையினர் செய்து கொடுத்து வருகின்றனர்.

நாளை மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கடந்த சில தினங்களாக வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறி சாமி தரிசனம் செய்து சென்றுள்ளனர். இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி உள்ளனர்.
நாளைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இன்றும், நாளையும் அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் 3 லட்சம் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையேறுவார்கள் என தெரிகிறது. அடர் வனப்பகுதியில் மலை ஏற்றம் உள்ளதால் ஒரு சிலருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், அடிவாரத்தில் 108 ஆம்பலன்ஸ் மற்றும் அவசர கால மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.
மேலும் கோடைக்காலம் என்பதால் தீயணைப்பு மீட்புக்குழுவினரும், வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே வெள்ளிங்கிரி மலையேறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 6-வது மலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
- மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவைமடி வலையை பயன்படுத்தி ஒரு சில விசைபடகு மீனவர்கள் மீன்பிடிப்பதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால் நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் வாணவன் மகாதேவி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் உள்ள பைபர் படகு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி முதல் மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் விசைப்படகு மீனவர்களின் இழுவை மடி வலையை பயன்படுத்துவதால் பைபர் படகு மீனவர்களின் வாழ்வாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.
எனவே நாகை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட இழுவை மடிவலையை பயன்படுத்துவதை தடுக்க மீன்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து தீவிரமாக நடவடிக்கை எடுத்து இழுவை மடிவலையை முற்றிலும் அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் ரூ.2 கோடி மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடற்கரை பகுதியில் வெறிச்சோடி காணப்படுகிறது.
- கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது.
- மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும்.
சென்னை:
2024 பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே உள்ளது. இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பா.ஜ.க. தலைமையிலான என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 543 இடங்களில் 378 இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தியா கூட்டணிக்கு 98 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்பது கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிப்ரவரி 5 முதல் 23 வரை 543 பாராளுமன்ற தொகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க. கடந்த பாராளுமன்ற தேர்தலைக் காட்டிலும் இப்போது நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ல் பா.ஜ.க. 303 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 தேர்தலில் இந்த எண்ணிக்கை 335-ஆக அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக, குஜராத் (26), மத்திய பிரதேசம் (29), ராஜஸ்தான் (25), அரியானா (10), டெல்லி (7), உத்தரகாண்ட் (5), இமாச்சல பிரதேசம் (4) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் 40 தொகுதிகளில் 17 இடங்களையும், ஜார்க்கண்டில் 14-ல் 12 தொகுதிகளிலும், ஒடிசாவில் 21-ல் 10 இடங்களிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் கட்சியாக உள்ள அசாமில் 14 தொகுதிகளில் 10 இடங்கள் அக்கட்சியின் வசமாகும். மகாராஷ்டிராவில் 48-ல் 25 தொகுதிகளையும், மேற்கு வங்கத்தில் 42-ல் 20 தொகுதிகளையும் பா.ஜ.க. கைப்பற்றும். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 21 இடங்களைப் பெறும் என்று இந்தியா டி.வி-சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,090-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 5-ந்தேதி சவரனுக்கு ரூ.680-ம், 6-ந்தேதி சவரன் ரூ.200-ம் உயர்ந்தது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720-க்கும் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,090-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
- நூற்றுக்கணக்கான கடைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய வியாபாரிகள் கோரிக்கை.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கான கடைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக அக்கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், எனவே தாங்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடர்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய வியாபாரிகள் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவ்வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அவர்களுக்கு கால அவகாசம் வழங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கான கடைகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 7, 2024
பல ஆண்டுகளாக அக்கடைகளை…
- 40 ஆண்டுகால இசை அனுபவத்தில் உலகின் பல்வேறு மேடைகளில் வயலின் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார் குமரேஷ்.
- கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் யக்ஷா கலைத் திருவிழாவின், இரண்டாம் நாளான நேற்று வித்வான் ஆர். குமரேஷ் குழுவினர் நிகழ்த்திய வயலின் இசை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
பிரபல திரைப்பட நடிகையும் இயக்குனருமான சுஹாசினி மணிரத்னம் மற்றும் புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞரான சுதா ரகுநாதன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
குமரேஷ் தனது 5 வயதில் வயலின் வாசிக்க தொடங்கினார். தமது 10 வயதிற்குள்ளாகவே 100 மேடைகளை கண்டு குழந்தை மேதையாக உருவெடுத்தார். இவருடைய 40 ஆண்டுகால இசை அனுபவத்தில் உலகின் பல்வேறு மேடைகளில் வயலின் இசைக் கச்சேரி நடத்தியுள்ளார்.

யக்ஷா இரண்டாம் நாள் விழாவில் இவர் தனது இனிமையான வயலின் இசையால் மக்களை மகிழ்வித்தார். அவருடன் தனது பன்முகத் திறனுக்கு புகழ்பெற்றவரான வித்வான் ஸ்ரீ கே.யூ. ஜெயசந்திர ராவ் மிருதங்கம் வாசித்தார். இவரோடு சேர்ந்து நவீன இசையையும் பாரம்பரிய இசையையும் செறிவுர கலந்து இசைக்கும் வித்வான் ஸ்ரீ பிரமத் கிரண் தபளா இசைத்தார். இந்நிகழ்ச்சியை தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் நேரில் கண்டு ரசித்தனர்.
யக்ஷா கலைத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று இந்தியாவின் முன்னனி நடன கலைஞரான 'பத்ம ஸ்ரீ' ஆனந்தா சங்கர ஜெயந்த் குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.
- தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்?
- பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?
மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
மாநில அரசுக்குத் தராமல் நேரடியாக மக்களுக்கு நிதி வழங்கி வருவதாகத் தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் அப்பட்டமான பொய்யைக் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் எந்த மக்களுக்கு அவர் நிதியைக் கொடுத்தார்? பேரிடரில் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?
ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் முறையாக வந்து சேர வேண்டும் என நினைத்து நாங்கள் நலத்திட்டங்களைத் தீட்டுகிறோம். அதனை உறுதி செய்து செம்மைப்படுத்தத்தான் நீங்கள் நலமா திட்டம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
- சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியையும் – தாங்கொணாத் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.
மழலை முகம் மாறாத அச்சிறுமியையும் - அவரது எதிர்கால ஆசைகள் - கனவுகளையும் ஒரே அடியாக சிதைத்துள்ள இக்கொடுமை மனித குலத்திற்கே விரோதமானது. இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ள சமூக விரோதிகளுக்கு உச்சபட்ச தண்டனையை உடனே வழங்க வேண்டும். மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
யாராலும் தேற்ற முடியாத சோகத்தில் தவிக்கும் அச்சிறுமியின் பெற்றோர்களுக்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு.
- சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
புதுச்சேரியில் கடத்தப்பட்ட 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு கால்வாயில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்து எதிர்க்கட்சிகள் புதுச்சேரி அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி, முத்தியால்பேட்டையைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி, பாலியல் துன்புறுத்தலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நெஞ்சைப் பதற வைக்கிறது.
பெற்ற மகளை இழந்து, பெருந்துயரத்துடன் உள்ள சிறுமியின் பெற்றோருக்குக் கனத்த இதயத்துடன் ஆறுதல் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
சிறுமியை மிருகத்தனமாக, ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்த கொலையாளிகளுக்குச் சட்டப்படி அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர, புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பேசினார்.
நாகரர்கோவிலில் இன்று, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டைசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் கே.ஜி. ரமேஷ் குமார் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய் வசந்த்," வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இளைஞர்கள் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.






